திருத்தணி: நம் நாளிதழில் வெளியான செய்தி எதிரொலியாக, திருத்தணி கோவில் தேர்வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள், நேற்று அகற்றப்பட்டன.
திருத்தணி முருகன் மலைக்கோவில் தேர்வீதியில், 50க்கும் மேற்பட்டோர், பழங்கள், கிழங்கு, நெல்லிக்காய், மோர் மற்றும் பல்வேறு தின்பண்டங்களை, தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்தனர். அதனால், பக்தர்கள் நடந்து செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி உத்தரவின்படி, தேர்வீதியில் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை, கோவில் ஊழியர்கள் நேற்று அகற்றினர். அப்போது, வியாபாரிகள், கோவில் ஊழியர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும், கடைகளை முற்றிலும் அகற்றி, விற்பனை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.