நூக்காலம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை



பகிர்க copied

சாலவாக்கம்: சாலவாக்கம் கிராமத்தில் உள்ள நூக்காலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

சாலவாக்கம் கிராமத்தில் நூக்காலம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், கும்பாபிஷேக விழாவையொட்டி, கடந்த 19ம் தேதி பந்தகால் நடுதலுடன் விழா தொடங்கியது.

தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு கோ பூஜை, கணபதி பூஜை, மாலை 6:00 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 8:30 மணிக்கு கலச புறப்பாடு நடைபெற்றது.

காலை 9:30 மணிக்கு கோபுர விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை, இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசதனம் செய்தனர்.

பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்