மூணாறில் சட்டென மாறிய காலநிலை 5 டிகிரி செல்சியஸ் பதிவு: பலிக்கும் பஞ்சாங்கம் குறிப்பு!



பகிர்க copied

மூணாறு: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் காலநிலை சட்டென மாறி, இன்று காலை வழக்கத்துக்கு மாறாக வெப்பம் ஐந்து டிகிரி செல்சியஸ் பதிவானது.


இடுக்கி மாவட்டத்தில் இந்தாண்டு தென் மேற்கு பருவமழை சராசரி அளவைவிட 47 சதவீதம் குறைவு என தெரியவந்தது. மாவட்டத்தில் அதிகமாக மழை பெய்யும் மூணாறிலும் கடந்தாண்டை விட 40 சதவீதம் குறைவாக பதிவானது.


இன்று காலை வழக்கத்துக்கு மாறாக சட்டென காலநிலை மாறி வெப்பம் வெகுவாக குறைந்தது. மூணாறில் காலையில் வெப்பம் 6 டிகிரி செல்சியஸ் நிலவிய நிலையில், குண்டளை பகுதியில் 5 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது போன்ற சூழல் ஆண்டு தோறும் டிசம்பரில் நிலவுவது வழக்கம். தற்போதைய கால அளவில் காலையில் வெப்பம் 14 முதல் 18 டிகிரி வரை காணப்படும். வழக்கத்துக்கு மாறாக முக்கூட்டியே வெப்பம் வெகுவாக குறைந்தது. அதனால் குளிர் அதிகரித்ததுடன் பல பகுதிகளில் வெண் மேகங்கள் தவழ்ந்து ரம்மியமாக காட்சியளித்தது. இந்தாண்டு பஞ்சாங்கத்தில் கணித்தப்படி நேபாளத்தில் ஆக., 26ல் போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டன. அதேபோல் மூணாறில் கடும் குளிர் நிலவும் என பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் வகையில் வழக்கத்தை விட முன்கூட்டியே காலை வேளையில் வெப்பம் வெகுவாக குறைந்ததால், பஞ்சாங்கம் குறிப்பின்படி குளிர் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஊட்டி, கொடைகானல் பகுதிகளில் குளிர் அதிகரிக்கும் என பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்