வனபத்ரகாளியம்மன் கோவிலில் ரூ. 1.98 கோடியில் கான்கிரீட் சாலைகள்



பகிர்க copied

மேட்டுப்பாளையம்: வனபத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக, 1.98 கோடி ரூபாய் செலவில் புதிதாக கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், மிகவும் பிரசித்தி பெற்றது , மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில். இக்கோவிலுக்கு ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் மற்றும் விடுமுறை, அமாவாசை நாட்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் வளாகத்தில் போதிய கழிப்பிட வசதிகள் இல்லை என பக்தர்கள் புகார் கூறினர். இதை அடுத்து மூன்று இடங்களில், பக்தர்கள் கழிப்பிடங்கள், குளியலறை, உடைமாற்றும் அறைகள் என, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 


இதுகுறித்து கோவில் உதவி கமிஷனர் சரவணன் கூறுகையில்," ஏழு நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு நிலையிலும் சுதைகள் (சிலைகள்) செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் வசதிக்காக ஆற்றின் கரைக்கு செல்லும் வழி அருகே, முடி காணிக்கை மண்டபமும், கழிப்பிடங்களும் கட்டப்பட்டு உள்ளன. கழிப்பிடங்களுக்கு செல்ல, 1.98 கோடி ரூபாய் செலவில் புதிதாக கான்கிரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் கல்கார மண்டபமும், ஆற்றின் கரையோரம் விநாயகர் கோவிலும் கட்டப்பட உள்ளன," என்றார்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்