அயோத்தி ராமர் கோயிலில் வால்மீகி ஜெயந்தி விழா: மகரிஷிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை



பகிர்க copied

அயோத்தி: மகரிஷி வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு, அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோவில் வளாகத்தின் சப்த மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகரிஷி வால்மீகியின் திருவுருவத்துக்குச் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. வேத மரபுகளின்படி நடைபெற்ற இந்த வழிபாட்டில், மகரிஷி வால்மீகிக்கு அபிஷேகம் செய்து, மலர்கள் சமர்ப்பித்து, தீபாராதனை காட்டி பக்தர்கள் வழிபட்டனர். இந்த விழாவில் அறக்கட்டளை நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர் நிர்மலா யாதவ், அறக்கட்டளை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், பல்வேறு துறவிகள், வால்மீகி சமூகத்தின் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சிறப்பு உரையாற்றிய மிதிலேஷ்நந்தினி சரண் ஜி மகராஜ், ஆன்மிகச் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். ராமாயணத்தை இயற்றிய மகரிஷி வால்மீகியைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த வழிபாடு, பக்தர்களிடையே ஆன்மிக உணர்வையும் பக்தியையும் ஏற்படுத்தியது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்