திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் நவ.,10 ல் கந்த சஷ்டி விழா துவக்கம்



பகிர்க copied

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்தசஷ்டி விழா நவ.,10ல் துவங்குகிறது. நவ.,15ல் சூரசம்ஹாரமும், நவ.16ல் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தனி சன்னதியில் சுப்பிரமணியர் வள்ளி,தெய்வானையுடன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும் கநத் சஷ்டி விழா ஏழு நாட்கள் நடைபெறும். நவ.,10 ல் மாலை 6:00 மணிக்கு முருகனுக்கு அபிேஷகம் நடந்து, அலங்காரத்தில் எழுந்தருளி தீபாராதனைகளுடன்  விழா துவங்குகிறது. தொடர்ந்து தினசரி மாலையில் அபஷேக,ஆராதனைகள் நடைபெறும். நவ.,15, ஆறாம் திருநாளில் காலை 10:30 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்,தீபாராதனை நடைபெறும். அன்று மாலை 4:30 மணிக்கு முருகன் கோயிலிலிருந்து புறப்பாடாகி கீழ ரதவீதியில் சூரசம்ஹாரம் நடைபெறும். மறுநாள் நவ.,16ல் காலை 9:00 மணிக்கு மேல் சுப்பிரமணியருக்கும் தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாட்டினை தேவஸ்தானம்,திருமுருகன் திருப்பேரவையினர் செய்கின்றனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்