தேய்பிறை சஷ்டி, திருவாதிரை விரதம்: முருகன், நடராஜரை வழிபட இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழலாம்!



பகிர்க copied

சிவ வழிபாட்டுக்கு உரிய திருவாதிரை விரதமும், முருகனுக்கு உகந்த தேய்பிறை சஷ்டி விரதமும் ஒரே நாளில் வருவது மிகச்சிறந்ததாக கருதப்படுகிறது. பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாவது திதியை தேய்பிறை சஷ்டி என்று அழைக்கிறோம். இந்த ஆறாவது திதி ஆறுமுகனுக்கு உரிய திதியாகும். குழந்தை பாக்கியம்: "சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழிக்கு ஏற்ப, குழந்தை வரம் வேண்டுபவர்கள் இந்த நாளில் விரதம் இருப்பது மிகுந்த பலன் தரும். கஷ்டங்கள் நீங்க: தீராத பிரச்சனைகள், கடன் தொல்லை, எதிரிகளின் தொல்லை, திருமணத் தடைகள் மற்றும் நீண்ட நாள் நோய்களால் அவதிப்படுபவர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வேண்டினால் துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. 


சஷ்டி விரதமிருப்பவர்களுக்கு மனக்குழப்பங்கள் நீங்கி, தெளிவும், குடும்பத்தில் அமைதியும் நிலவும். திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் பல அற்புதங்கள் நடக்கும். இன்று சிவாலயத்தில் நடராஜர், சிவகாமி அம்மனை தரிசிக்க பாவம் அனைத்தும் விலகி வாழ்வு வளமாகும். ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம் என்பது நம்பிக்கை! இன்று நடராஜருக்கு வில்வமாலை சாத்தி வழிபடுவோம்.. வேண்டும் வரம் பெறவோம்..!


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்