ஹயக்ரீவர் கோவிலில் திருப்பணி கருங்கல் துாண்களுக்கு யாக பூஜை



பகிர்க copied

புதுச்சேரி: நவ நரசிம்மர் கோவில் அமைக்க திருப்பணிகள் நடந்து வருவதையொட்டி, கருங்கல் துாண்கள் பிரதிஷ்டைக்கான யாக பூஜைகள் நடந்தது.


ஆந்திர மாநிலம் அகோபிலத்தில் நவ நரசிம்மர் கோவில் போன்று, நவ நரசிம்மருடன் பானக நரசிம்மரையும் இணைத்து, புதுச்சேரி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர் ஹயக்ரீவர் கோவில் அருகில் நவ நரசிம்மர் கோவில் அமைப்பதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. கோவில் கருவறை நுழைவு வாயிலில், நரசிம்மர் துாணிலிருந்து அவதரித்த நிகழ்வை நினைவு கூரும் வகையில், கருங்கல்லால் இரண்டு சபா ஸ்தம்பங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக நிர்மாண யாக பூஜைகள், நடைபெற்றன. தொடர்ந்து, இரண்டு கருங்கல் தூண்களும் ஸ்தாபிதம் செய்யப்பட்டன. அத்துடன், மூலவரான நரசிம்மருக்குப் பின்புறம் ராமர், ஆஞ்சநேயர், சுதர்சன ஆழ்வார் சன்னதிகள் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு கருங்கல் துாண்கள் பிரதிஷ்டைக்கான யாக பூஜைகள் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம், சம்பத்குமார், கோசகன் பட்டாச்சாரியார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்