சீர்காழி அருகே சப்த கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம்



பகிர்க copied

மயிலாடுதுறை: சீர்காழி அருகே கீழத்தேனூர் கிராமத்தில் பழமையான சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் சோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு மூலம் செய்து முடிக்கப்பட்டு காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு கால யாக சாலை பூஜைகள் காலை நிறைவடைந்து பூர்ணாஹுதி மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவில் விமானத்தை அடைந்தது காலை 10 மணிக்கு சர்வ சாதகம் சந்தோஷ்  தலைமையிலான சிவாச்சாரியார்கள் புனித நீரை கோவில் கலசத்தில் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சப்த கன்னியம்மனுக்கு  அபிஷேக ஆராதனைகள் நடந்தது.  நந்தனார் அறக்கட்டளை தலைவர் பரமகுரு, கண்ணன் சுவாமி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மண்டல செயலாளர் செந்தில், சமூக ஆர்வலர் திருலோக சந்தர் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சப்த கன்னி அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் அர்சகர் அசோகன், கிராம  மக்கள் இணைந்து செய்திருந்தனர்.  பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்