இன்று தேய்பிறை அஷ்டமி: காலபைரவரை வழிபட வளமான வாழ்வு கிடைக்கும்!



பகிர்க copied

ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேஷ திதி, கிழமை, நட்சத்திரங்கள் உள்ளன.  நந்தி வழிபாட்டிற்கு சனி பிரதோஷம் போல பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பானது. பைரவரை வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். கிரக தோஷம், சத்ருபயம், மனக்குழப்பம் நீங்கி நிம்மதி நிலைக்கும்.


தேய்பிறை அஷ்டமி நாள் சிவபெருமானின் வடிவமான காலபைரவரை வழிபட உகந்த மிகச் சிறந்த நாளாகும். சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவராகவும், சனி பகவானின் குருவாகவும் விளங்குபவர் காலபைரவர். பிரம்மனின் அகந்தையை அடக்க அவரது ஐந்தாவது தலையை சிவபெருமானின் அம்சமாக தோன்றித் துண்டித்தவர் காலபைரவர். இந்நாளில் பைரவரை வழிபடுவதால் கடன் தொல்லைகள், வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும். அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடும் இன்றைய நாளில் நாமும் வழிபடுவோம்.. அஷ்ட ஐஸ்வர்யம் பெறுவோம்!


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்