சோமநாதர் கோயிலுக்கு 1,100 மாணவர்கள் ஆன்மிகப் பயணம்! 5 நாள் யுவ சோமநாத் யாத்திரை நிறைவு!



பகிர்க copied

இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட 5 நாள் ‘யுவ சோமநாத் யாத்திரை’ நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற 1,100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நவம்பர் 25-ம் தேதி புதுடெல்லி திரும்பினர்.


நவம்பர் 20-ம் தேதி மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தொடங்கி வைத்த இந்தப் பயணத்தில், மாணவர்கள் குஜராத்தின் வெராவல் சென்றடைந்து சோமநாதர் கோயில் உள்ளிட்ட முக்கிய ஆன்மிகத் தலங்களைத் தரிசித்தனர். பிரபாஸ் படனில் உள்ள ஸ்ரீ ராமர் கோயில், கோலோக்தாம் தீர்த்தம், முதல் ஜோதிர்லிங்கத் தலமான சோமநாதர் கோயில், பால்கா தீர்த்தம், அகில்யாபாய் கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்றனர். சோமநாதர் கோயிலின் வரலாற்றை விளக்கும் ஒளி, ஒலி நிகழ்ச்சியையும் கண்டுகளித்தனர். திரிவேணி காட் ஆரத்தியிலும் பங்கேற்றனர். சோமநாதர் கோயில் மீது முதல் பதிவு செய்யப்பட்ட தாக்குதல் நிகழ்ந்து 1,000 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ‘சோமநாத் சுவாபிமான் பர்வ்’ கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த யாத்திரை, மாணவர்களுக்கு இந்தியாவின் வரலாறு, ஆன்மிகம் மற்றும் கலாசாரப் பெருமைகளை நேரில் அறியும் வாய்ப்பை வழங்கியது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 35,000-க்கும் மேற்பட்டோர் சோமநாதர் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்