32 ஆண்டுகளுக்கு பிறகு மத்தியப் பிரதேசம் வந்த சிருங்கேரி ஜகத்குரு! இந்தூரில் விநாயகர், அன்னபூரணேஸ்வரிக்கு சிறப்பு பூஜை!



பகிர்க copied

மத்தியப் பிரதேசம்: சிருங்கேரி சாரதா பீடத்தின் ஜகத்குரு சங்கராச்சார்யா ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதி சன்னிதானம், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள படா கணபதி கோயில் மற்றும் ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். உலக நலன் வேண்டி பகவான் ஸ்ரீ கணபதி மற்றும் தேவி ஸ்ரீ அன்னபூரணேஸ்வரிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. ஸ்ரீ அன்னபூரணேஸ்வரி கோயிலில், தனது குருவான ஸ்ரீ விஸ்வேஸ்வரானந்த கிரிஜி முன்னிலையில், ஸ்ரீ ஜயேந்திரானந்த் ஜி, ஜகத்குரு சன்னிதானத்துக்குப் பாதபூஜை செய்து வழிபட்டார்.


சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சார்யா மத்தியப் பிரதேசத்தின் புனித பூமிக்கு மீண்டும் விஜயம் செய்துள்ளார். இந்தப் பயணம், மத்தியப் பிரதேசத்துக்கும் ஸ்ருங்கேரி சாரதா பீடத்துக்கும் இடையிலான நீண்டகால ஆன்மிகத் தொடர்பில் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தத் தொடர்பு சிருங்கேரி சாரதா பீடம் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே தொடங்குகிறது. பீடத்தின் முதல் பீடாதிபதியான ஸ்ரீ சுரேஸ்வராச்சாரியார், அன்றைய மகிஷ்மதி நகரைச் சேர்ந்தவர். அந்தப் பகுதி தற்போது மஹேஷ்வர் என அழைக்கப்படுகிறது. மேலும், இந்தூர், தேவாஸ் மற்றும் குவாலியர் மன்னர்களின் ஆதரவும், முந்தைய ஜகத்குருக்கள் மேற்கொண்ட விஜய யாத்திரைகளும் சிருங்கேரி பீடத்துக்கும் மத்தியப் பிரதேசப் பகுதிக்கும் இடையிலான ஆன்மிக உறவை மேலும் வலுப்படுத்தின.


பகிர்க copied

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்