சபரிமலை புல்மேடு பாதையில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு

நவம்பர் 29,2025



பகிர்க copied

சபரிமலை; சபரிமலையில் மண்டல சீசன் 12 நாட்கள் கடந்த நிலையில் சத்திரம் - புல்மேடு வழியாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்துள்ளனர்.


சபரிமலை வருவதற்கு சாலக்கயம் - பம்பை, எருமேலி - பம்பை, சத்திரம் - புல் மேடு -சன்னிதானம் என மூன்று பாதைகள் உள்ளது. இதில் புல்மேடு பாதை சபரிமலைக்கு வரும்போது செங்குத்தான ஏற்றமே இல்லாத பாதையாகும். மாறாக முழுமையாக செங்குத்தான இறக்கம் ஆகும். நடப்பு மண்டல காலம் தொடங்கிய பின்னர் 12 நாட்களில் 15 ஆயிரத்து 298 பக்தர்கள் புல் மேடு பாதை வழியாக சன்னிதானம் வந்துள்ளனர். அதிகபட்சமாக நேற்று முன்தினம் 2628 பக்தர்கள் வந்தனர். இந்தப் பாதையில் சத்திரத்திலிருந்து காலை 7:00 மணி முதல் பகல் ஒரு மணி வரை பக்தர்கள் செல்ல அனுமதிக்கப் படுகின்றனர். இங்கு தேவசம்போர்ட்டின் ஸ்பாட் புக்கிங் கவுண்டர் உள்ளது. ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ள நிலையில் எருமேலி மற்றும் நிலக்கல்லில் அதிகமான கூட்டம் காணப்படுவதால் முன்பதிவு செய்யாத பக்தர்கள் புல் மேடு பாதையை தேர்வு செய்கின்றனர். இங்கு ஸ்பாட் புக்கிங் டிக்கெட் சுலபமாக கிடைப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர். இதனால் வரும் நாட்களில் இந்தப் பாதையில் கூட்டம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்