சபரிமலை பதினெட்டு படிகளின் தத்துவம்!



பதினெட்டு என்ற எண்ணுக்கு வரலாற்று சிறப்புண்டு. பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள், இராமாயணப் போர் நடைபெற்றது 18 மாதங்கள், தேவ, அசுரப்போர் நடைபெற்றது 18 ஆண்டுகள். எனவே பதினெட்டு என்ற எண் மிக முக்கியத்துவமானது. நம்முடைய பிறப்பு இறப்புக்குக் காரணமான பிறவிப் பெருங்கடலைக் கடக்க விடாமல், நம்மை முக்திநெறிக்கு ஆட்படுத்தாமல், நமது பிராரப்த வினைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இவற்றைக் களையவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளைக் களையும் வகையில், தீய குணங்களை விட்டு விலக்கி, பிறவிப் பெருங்கடலிருந்து முக்தி அடைய வழிகாட்டுகிறது.

முதல் படி - பிறப்பு நிலையற்றது: நாம் செய்யும் நன்மைகளும், தீமைகளும் நமது புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்ற உண்மையை உணர்ந்து, இறையருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்ம உணர்வினை அளிக்கிறது. இதுவே விஷாத யோகமாகும்.

இரண்டாம் படி - சாங்கிய யோகம்: பரம்பொருளை குருவாக உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.

மூன்றாம் படி: கர்ம யோகம்: உபதேசம் மட்டும் போதாது. மனம் பக்குவம் அடைய வேண்டும். அதாவது, பலனைக் கருதாமல் கடமையைச் செய்யும் பக்குவத்தை மூன்றாம்படி உணர்த்துகிறது.

நான்காம் படி -ஞான யோகம்: பாவ, புண்ணியங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதன் மீதும் பற்றின்றி பரமனை அடையும் வழியில் முன்னேறும் பாதையைக் காட்டுவது.

ஐந்தாம் படி- சன்னியாச யோகம்: நான், எனது என்ற சிந்தனை இன்றி, எல்லாவற்றையும் துறந்து, இறைச் சிந்தனை ஒன்றையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி செயல்படும் வழியினைக் காட்டுகிறது.

ஆறாம் படி- தியான யோகம்: கடவுளை அடைய புலனடக்கம் மிக இன்றியமையாதது. ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது இவற்றை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவை இழுத்த இழுப்புக்குச் செல்லாமல் தடுத்து, இறைவனால் அளிக்கப்பட்ட ஐம்புலன்களையும் நல்லவிதமாக இறைச் சிந்தனையால் நிரப்பி நல்வழிப்படுத்தும் வழியினைக் காட்டவே ஆறாம்படி அமைந்துள்ளது.

ஏழாம் படி - ஞானவிஞ்ஞான யோகம்: அனைத்தும் பிரம்மமே என்ற உண்மையை உணர வைக்கிறது.

எட்டம் படி - அட்சர பிரம்ம யோகம்: எப்போதும் இறைச் சிந்தனையில் மூழ்கி, வேறு சிந்தனைகளற்று இருப்பது.

ஒன்பதாம் படி - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்: கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை; உண்மையான பக்தி, ஆன்மிகத்தை உணர வைத்து, ஏழையின் சிரிப்பில் இறைவனைக காண வைப்பது.

பத்தாம் படி - விபூதி யோகம்: அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய குணங்களைக் கண்டாலும், அதை இறைவனாகவே உணர்வது.

பதினொன்றாம் படி - விஸ்வரூப தரிசன யோகம்: உலகில் ஆண்டவனையும் ஆண்டவனில் உலகத்தையும் பார்க்கும் மனப் பக்குவத்தைப் பெறுவது.

பன்னிரண்டாம் படி - பக்தி யோகம்: இன்ப - துன்ப, விருப்பு - வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடுகளை நீக்கி, அனைத்திலும் சமத்துவத்தைக் காண வைக்கிறது.

பதிமூன்றாம் படி - க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: எல்லா உயிர்களிலும் இறைவனே வீற்றிருந்து, அவ்வுயிர்களை இயக்குகிறார் என்ற உண்மை நிலையினை உணர வைக்கிறது.

பதினான்காம் படி - குணத்ரய விபாக யோகம்: பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களைக் களைந்து இறையளுக்குப் பாத்திரமாவதை காட்டுகிறது.

பதினைந்தாம் படி - புருஷோத்தம யோகம்: தீய குணங்களை விட்டொழித்து, நற்குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நமக்குள் தெய்வாம்சத்தை அதிகரித்துக்கொள்ள வழிகாட்டுகிறது.

பதினாறாம் படி - தைவாசுரஸம்பத் விபாக யோகம்: இறைவனது படைப்பில் அனைவரும் சமமானவர்களே என்ற உண்மை நிலையினை உணர்த்தி யாரிடமும் அகங்காரம் இல்லாமல் இருக்க வைக்க உதவுகிறது.

பதினேழாம் படி - ச்ரத்தாத்ரய விபாக யோகம் : சர்வமும் பிரம்ம மயம் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு பரபிரம்ம ஞானம் பெறுவதற்கு வழிகாட்டுகிறது.

பதினெட்டாம் படி - மோட்ச சன்னியாச யோகம்: பதினெட்டு படிகளையும் படிப்படியாய் அடியெடுத்துக் கடந்து வந்தால் நம் கண் எதிரே காட்சி தரும் மணிகண்டப் பிரபு பேரொளியாய் தரிசனம் தந்து, நமது வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயப்பனின் பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐந்து கோயில்கள், மூன்று மலங்கள் இவற்றைக் கடந்து மனமொன்றி வழிபட்டாலே ஐயப்பசாமியின் திருவருள் நம்மை வந்து சேரும் என்பதே 18 படிகளின் தாத்பர்யமாகும்.

1) ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது அந்த 18 கருவிகள்

வில்
வாள்
வேல்
கதை
அங்குசம்
பரசு
பிந்திபாவம்
பரிசை
குந்தம்
ஈட்டி
கை வாள்
முன்தடி
கடுத்தி வை
பாசம்
சக்கரம்
ஹலம்
மழு
முஸலம் -  ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும்.

2) பதினெட்டுப் படிகளை

இந்திரியங்கள் ஐந்து ( 5 )
புலன்கள் ஐந்து ( 5 )
கோசங்கள் ஐந்து ( 5 )
குணங்கள் மூன்று ( 3 )

என்று கூறுகிறார்கள் அவை முறையே

இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) :

கண்
காது
மூக்கு
நாக்கு
கை கால்கள்

புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) :

பார்த்தல்
கேட்டல்
சுவாசித்தல்
ருசித்தல்
ஸ்பரிசித்தல்

கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) :

அன்னமய கோசம்
ஆனந்தமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
ஞானமய கோசம்

குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) :

ஸத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்

இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும்

3) 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்

மெய்
வாய்
கண்
காது
மூக்கு
சினம்
காமம்
பொய்
களவு
சூது
சுயநலம்
பிராமண
க்ஷத்திரிய
வைசிய
சூத்திர
ஸத்ய
தாமஸ
ராஜஸ

என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனைக் காணலாம்

4) கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்

18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்

ஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்
இரண்டாம் திருப்படி : சிவன்
மூன்றாம் திருப்படி : சந்திர பகவான்
நான்காம் திருப்படி : பராசக்தி
ஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்
ஆறாம் திருப்படி : முருகன்
ஏழாம் திருப்படி : புத பகவான்
எட்டாம் திருப்படி : விஷ்ணு
ஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்
பத்தாம் திருப்படி : பிரம்மா
பதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்
பனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி
பதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்
பதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்
பதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்
பதினாறாம் திருப்படி : சரஸ்வதி
பதினேழாம் திருப்படி : கேது பகவான்
பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்

( இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாஸம் செய்வதாக ஐதீகம் )

எனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது படிபூஜை நடைபெறும் தினத்தன்று 18 படிகளை பூக்களாலும் ; விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்கு கீழே 18 படி ஏறுமிடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்

ஒவ்வொரு படியிலும் பீடபூஜையும் ; மூர்த்தி பூஜையும் நடத்துவார் பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும் நீராஞ்சன தீபம்
( தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படுவது ) காண்பிப்பார் படிபூஜைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவையாகும்

18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். நைவேத்யம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்வார் பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு சபரிமலை பிரதான தந்திரியும் மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்வார்கள் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை காண்பிப்பார்கள்.

5) 18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது அவை என்னவென்றால்

ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்
இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்
மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா
நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்
ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்
ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்
ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்
எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்
ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்
பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்
பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்
பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்
பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்
பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்
பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்
பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்
பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்
பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்

6) 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜை நடத்துகிறார்கள் அவை என்னவென்றால்

சபரி மலை
பொன்னம்பல மேடு
கவுண்ட மலை
நாக மலை
சுந்தர மலை
சிற்றம்பல மேடு
கல்கி மலை
மாதங்க மலை
மைலாடும் மலை
ஸ்ரீ மாத மலை
தேவர் மலை
நீலக்கல் மலை
தலப்பாறை மலை
நீலி மலை
கரி மலை
புதுச்சேரி
அப்பாச்சி மேடு
இஞ்சிப் பாறை

7) 18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையதாகும் தேங்காய் உடைத்துப் படிகள் தேய்வதைத் தடுக்கும் பொருட்டு திருவாங்கூர் தேவஸ்தானம் 1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்ச லோகத்தினால் ( தங்கம் ; வெள்ளி ; பித்தளை ; செம்பு ; ஈயம் )
தகடு செய்து படிகளின் மேல் அமைத்துள்ளனர் தற்போது 2015ல் மறுபடியும் தகடுகள் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 2015 புது கவசம் படிகளுக்கு சாத்தப்பட்டது

8) பதினெட்டின் சிறப்புகள் :

பகவத் கீதை அத்தியாயங்கள் 18
குருக்ஷ?த்ர யுத்தம் நடந்த நாட்கள் 18
புராணங்களின் எண்ணிக்கை 18
ஐயப்பனின் போர்க் கருவிகள் 18
ஐயப்பனின் தத்துவ குணங்கள் 18
சரணம் விளிக்கும் முறைகள் 18
சித்த புருஷர்கள் 18
சபரியை சுற்றியுள்ள மலைகள் 18
சபரியில் அமைந்துள்ள திருப்படிகள் 18

9) 18 படிகளில் இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வர சிலருக்கு மட்டுமே உரிமையுண்டு அவர்கள்

பந்தள ராஜ குடும்பத்தினர்

தந்திரிகள்

மகர சங்கராந்தியன்று திருவாபரணப் பெட்டியை சுமந்து வரும் ராஜ பிரதிநிதி

திருவாபரணப் பெட்டியையும் தங்க அங்கியையும் வரவேற்கும் தேவஸ்தான உறுப்பினர்கள் ( வரவேற்கும் சமயத்தில் இவர்கள் ஐயப்பன் அனுமதி பெற்று மாலையணிந்திருக்க வேண்டும்)

படிபூஜையின் போது மேல்சாந்தி / தந்திரி / கீழ்சாந்தி மற்றும் கட்டளைதாரர் 3 பேர்

பலிகளை அர்ப்பணிக்கும் குருக்கள்

10) சரணம் விளிக்கும் முறைகள் 18 :

1) உறவுமுறைச் சரணம் :
 ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஐங்கரன் ஸோதரனே சரணம் ஐயப்பா
ஷண்முகன் ஸோதரனே சரணம் ஐயப்பா

2) பஞ்சபூத சரணம் :
மகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா ( ஆகாயம் )
காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ( நெருப்பு )
அழுதா நதியே சரணம் ஐயப்பா ( நீர் )
பம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா ( காற்று )
கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ( நிலம் )

3) இடப்பெயர் சரணம் :
அச்சன்கோவில் அரசனே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

4) அனுக்ரஹ சரணம் :
ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா
அனுக்ரஹ மூர்த்தியே சரணம் ஐயப்பா
அனாதரக்ஷகனே சரணம் ஐயப்பா
அழைத்தால் ஓடிவரும் அண்ணலே சரணம் ஐயப்பா

5) ப்ரிய சரணம் :
கற்பூர ப்ரியனே சரணம் ஐயப்பா
இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பாதயாத்திரை ப்ரியனே சரணம் ஐயப்பா
பானக ப்ரியனே சரணம் ஐயப்பா
பாயசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
நாம சங்கீர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா

6) காக்கும் சரணம் :
காத்து ரக்ஷ?க்க வேண்டும் பகவானே சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
காவல் தெய்வங்களே சரணம் ஐயப்பா

7) நட்பு சரணம் :
வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
பெரிய கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்பா
கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா

8) போற்றி சரணம் :
வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
குருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா

9) பிற தெய்வ சரணம் :
குருவாயூரப்பனே சரணம் ஐயப்பா
ஏத்தமானுõர் அப்பனே சரணம் ஐயப்பா
சோட்டாணிக்கரை பகவதியே சரணம் ஐயப்பா

10) குண சரணம் :
உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
சற்குணசீலனே சரணம் ஐயப்பா

11) செயல் சரணம் :
ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

12) வெற்றி சரணம் :
மகிஷி மர்த்தனனே சரணம் ஐயப்பா
புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
வெற்றியைத் தருபவனே சரணம் ஐயப்பா

13) பம்பை சரணம் :
பம்பையில் உதித்தவனே சரணம் ஐயப்பா
பம்பையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா
பம்பையில் சக்தியே சரணம் ஐயப்பா
பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

14) உருவ சரணம் :
யோக பட்டதாரியே சரணம் ஐயப்பா
சின்முத்ரா தாயகனே சரணம் ஐயப்பா
நித்ய ப்ரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
தத்வமஸி தாயகனே சரணம் ஐயப்பா

15) நீண்ட சரணம் :
ஸ்வாமியேய்ய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா
ஜோதி ஸ்வரூபனே சரணம் ஐயப்பா

16) சாஸ்தா சரணம் :
பால சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆதி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
பிரம்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விப்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஸ்வ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஜய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மோஹன சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஞான சாஸ்தாவே சரணம் ஐயப்பா
யோக சாஸ்தாவே சரணம் ஐயப்பா
குபேர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
காள சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கல்யாண சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ருத்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மகாராஜ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
சந்தான ப்ராப்தி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆர்ய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா

17) பதினெட்டாம்படி சரணம் :
ஒன்னாம் திருப்படியே சரணம் ஐயப்பா
இரண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
மூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
நான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஐந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஆறாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஏழாம் திருப்படியே சரணம் ஐயப்பா
எட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஒன்பதாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பத்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினொன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பனிரெண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதிமூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதிநான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினைந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினாறாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினேழாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினெட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா

18) மன்னிப்பு சரணம் :
ஸமஸ்தாபராத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
ஓம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த ஸகல குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து காத்து ரக்ஷ?க்க வேண்டும் ஓம் ஸ்ரீ ஸத்யமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளிவீரன் வீரமணிகண்டன் காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்தசித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா.
ஹரிபாபு குருசாமி
ஆதம்பாக்கம் ஐயப்ப பஜனை சங்கம்.

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்