கோவில்கள், வீடுகளில் நவராத்திரி விழா; கொலு பூஜை கோலாகலம்



பகிர்க copied

சூலூர்: சூலூர் வட்டாரத்தில் கோவில்கள், வீடுகளில் நவராத்திரி கொலு பூஜை நேற்று துவங்கியது.


வீரத்துக்கு ஸ்ரீ துர்கா, செல்வத்துக்கு, ஸ்ரீ லட்சுமி, கல்விக்கு ஸ்ரீ சரஸ்வதியை வழிபடுவது நமது நாட்டின் பண்பாடு. மொத்தம் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழாவில் முப்பெரும் தேவியை வழிபட்டு, 10 வது நாளான விஜய தசமி அன்று, செய்யும் தொழிலை சார்ந்த இயந்திரங்கள், உபகரணங்களை வைத்து பூஜிப்பது வழக்கம். சூலூர் வட்டாரத்தில் உள்ள கோவில்கள், வீடுகளில் நவராத்திரி பூஜையும், கொலு பூஜையும் நேற்று துவங்கின. சின்னியம்பாளையம் கண்பதீஸ்வர் கோவில், காடாம்பாடி சாந்த சிவகாளியம்மன் கோவில் மற்றும் கிராமங்களில் உள்ள அம்மன் கோவில்களில் நவராத்திரி பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வினோபாஜி நகரில் நடந்த நவராத்திரி கொலு பூஜை யில், ரெங்காஸ் அகாடமி சுபா வசந்த் மற்றும் மாணவிகளின் பரதநாட்டியம் நடந்தது. தொடர்ந்து, மக்கள் தொண்டே, மகேசன் தொண்டு என்ற தலைப்பில், சாந்தி கவுதம் சொற்பொழிவு ஆற்றினார்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்