தலைக்காவிரியில் தீர்த்த உத்சவம் புனித நீர் பெற குவிந்த பக்தர்கள்



பகிர்க copied

குடகு: காவிரி உற்பத்தி இடமான தக்காவிரியில் தீர்த்த உத்சவம் சிறப்பாக நடந்தது.


தமிழ் மாதமான ஐப்பசி முதல் நாளில், சூரியன் கன்னி ராசியில் இருந்து, துலாம் ராசிக்குள் பிரவேசிக்கும் புனித நேரத்தில், குடகு மாவட்டம், தலைக்காவிரி பிரம்மகிரி மலையில் உள்ள, ‘பிரம்ம குந்திகை’ என்ற சிறிய குளத்தில் இருந்து காவிரி நீர் பொங்கி மேலே வரும்.


இந்த அற்புத நிகழ்வை தீர்த்த உத்சவம் என்று அழைக்கின்றனர். இந்த நேரத்தில் காவிரி தேவி, நீர் வடிவில் இங்கு அவதரிக்கிறார் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இதன்படி. நேற்று  இரவு 7:50 மணிக்கு தீர்த்த உத்சவம் நிகழ்ச்சி நடந்தது. அர்ச்சகர்கள் மகா சங்கல்ப பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, மங்களாரத்தி காண்பித்தனர். அப்போது, பிரம்ம குந்திகையில் இருந்து புனித நீர் வெளியானதை பார்த்த பக்தர்கள், ‘ஜெய் ஜெய்மாதா காவிரி தாயே’ என்று கோஷம் எழுப்பினர். குடகு மக்களுக்கு காவிரி வெறும் நதி மட்டுமல்ல. அவர்களின் குலதெய்வம், பாவங்களை அழிப்பவள். எனவே, காவிரி அன்னையின் தரிசனம் பெற ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த புனித நீரை சேகரிக்க, கையில் பிளாஸ்டிக் கேன், குடத்துடன், பக்தர்கள் நேற்று முன்தினம் காலை முதலே காத்திருந்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்