பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், துடியலூர் வட்டாரங்களில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா நடந்தது.
சின்னமத்தம்பாளையம் ஆலூர் தேசிலிங்கேஸ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பின்னர், அரிசி சாதம், பல்வேறு காய்கறிகள், பழங்கள் வைத்து, தேசி லிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இதே போல இடிகரை வில்லீஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. சின்னதடாகம் அருகே உச்சையனூர் நஞ்சுண்டேஸ்வரர் கோயிலில் அன்னாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.