அன்னூர் வட்டார முருகன் கோவில்களில் கிருத்திகை வழிபாடு



பகிர்க copied

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


பழமையான சித்தர்கள் வழிபட்ட சாலையூர், பழனி ஆண்டவர் கோவிலில், கிருத்திகையை முன்னிட்டு, நேற்று மாலை 6:00 மணிக்கு, பழனி ஆண்டவருக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. இரவு முருகப்பெருமான் கோவில் வளாகத்தில் உலா வந்து அருள் பாலித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். எல்லப்பாளையம், பழனி ஆண்டவர் கோவிலில், நேற்று முன்தினம் மாலையில், பழனி ஆண்டவருக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. குன்னத்தூர் பழனி ஆண்டவர் கோயில், கோவில்பாளையம் கால காலேஸ்வரர் கோவில், குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில் உள்பட முருகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்