திருத்தணி முருகன் கோவிலுக்கு நவம்பரில் 6 நாட்கள் ஆட்டோ செல்ல தடை



பகிர்க copied

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு, வரும் நவம்பர் மாதத்தில், ஆறு நாட்கள் ஆட்டோக்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


திருத்தணி முருகன் கோவிலுக்கு, திருமண முகூர்த்த நாள், வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை, கிருத்திகை போன்ற நாட்களில், வழக்கத்திற்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். தற்போது, மலைக்கோவிலில் வளர்ச்சி பணிகள் நடந்து வருவதால், பக்தர்களின் வாகனங்கள் படாசெட்டிகுளம் வரை அனுமதிக்கப்பட்டு, அங்கேயே நிறுத்தப்படுகின்றன. அங்கு, அனைத்து வாகனங்களையும் நிறுத்த போதிய இட வசதியில்லாததால், மேற்கண்ட நாட்களில் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, ஆட்டோ, பேருந்து, வேன் போன்ற வாகனங்கள் செல்ல தடை  திக்கப்பட்டுள்ளது. கார், இருசக்கர வாகனங்கள் மட்டும், இடவசதிக்கு ஏற்ப மலைப்பாதையில் அனுமதிக்கப்படுகின்றன. அந்த வகையில், வரும் நவம்பர் மாதம், 1, 8, 15, 22, 24 மற்றும் 29 ஆகிய ஆறு நாட்கள், மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் சார்பில், மலைப்பாதை நுழைவு பகுதியில் இருந்து, படாசெட்டிக்குளம் வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதர பேருந்துகள், வேன்கள் போன்றவற்றை, கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கட்டணமின்றி நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட தகவலை, கோவில் இணை ஆணையர் ரமணி தெரிவித்துள்ளார்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்