இன்று ஏகாதசி விரதம்: பெருமாளை வழிபட இப்பிறப்பு மட்டுமல்ல இறப்பிற்கு பிறகும் பலன் கிடைக்கும்!



பகிர்க copied

ஐப்பசி தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி அல்லது ரமா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். 


ஒரு மாதத்திற்கு இரண்டு பட்சம். அதாவது பட்சம் என்பது பதினைந்து நாள். அதில் தேய்பிறையை கிருஷ்ண பட்சம் என்றும், வளர்பிறையை சுக்லபட்சம் என்றும் சொல்வர். இந்த இரு பட்சங்களிலும் வரும் 11வது திதி ஏகாதசி. ஒருவர் மேற்கொள்ளும் இந்த விரதத்தால் அவர்களின் முன்னோர் மற்றும் சந்ததியினர் அனைவரும் துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள். ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும். ஐப்பசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி “இந்திரா ஏகாதசி” எனப்படுகிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளை ஒருவர் படித்தாலோ (அ) கேட்டலோ அவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு இறுதியில் விஷ்ணுவின் பரமத்தை அடைவார் என்பது நம்பிக்கை.  இன்று விரதமிருந்து துளசி சாற்றி பெருமாளை வழிபட நினைத்தது நிறைவேறும்!


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்