திருமலைக்கேணியில் சூரசம்ஹாரம்- சூரனை வதம் செய்தார் சுப்பிரமணிய சுவாமி



பகிர்க copied

நத்தம்: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் விழா நடந்தது. இதையொட்டி கடந்த நவ.10 கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.தொடர்ந்து சிவபூஜை திருக்காட்சி, சிவ உபதேச திருக்கோலம், அருணகிரியாருக்கு நடனக்காட்சி அருளுதல், முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது.பின்னர் மதியம் கோவில் வளாகத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது.தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருக்காட்சி அங்குள்ள கிரிவல பாதையில் இன்று மாலை நடந்தது.இதில் முருகப்பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் எழுந்தருளி சிங்கமுகாசூரன்,கஜமுகாசூரன், தாரகாசூரனை தனது வேலால் வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் இறுதியில் சூரபத்மனை வெற்றிவேலை கொண்டு மாமரமாக நின்ற சூரனை வேல் கொண்டு வதம் செய்து சூரசம்ஹாரத்தை நிகழ்த்தினார்.பின்னர் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.இதில் திண்டுக்கல், நத்தம், செந்துறை, வடமதுரை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் அழகுலிங்கம், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் பாலசரவணன் உள்னிட்ட விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்