கொங்கனகிரி கந்த பெருமான் கோவில் சூரசம்ஹார விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு



பகிர்க copied

அனுப்பர்பாளையம்: திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கனகிரியில் புகழ் பெற்ற  ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேய ஸ்ரீ கந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவிலில், 17 ம் ஆண்டு கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக, 5:00 மணிக்கு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேய ஸ்ரீ கந்த பெருமானுக்கு மஹா அபிஷேகம் மற்றும் வேல் பூஜை நடைபெற்றது. விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை16 ம் தேதி காலை 6:30 மணிக்கு கந்த பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை தொடர்ந்து 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் திருகல்யாண நிகழ்ச்சி நடைப்பெறுகிறது.‌ விழா முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது.


பகிர்க copied

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்