கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது



பகிர்க copied

கீழக்கரை: கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை தீப விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இன்று காலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. கோயில் விமான கலசம் அருகே 36 அடி உயரமுள்ள இரும்பு பீடத்தில் 100 கிலோ நெய், 15 கிலோ நூல் திரி, 10 கிலோ சூடம் ஆகியவற்றால் மூன்று நாட்களுக்கு மிகாமல் எரியும் வகையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை 6:00 மணிக்கு கோயில் விமானம் அருகே உள்ள பீடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் முழங்கினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹிந்து நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


பகிர்க copied

ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்