சத்ய சாய்பாபாவின் 100வது ஜெயந்தி விழா; பக்தர்களுக்கு விருந்து படைக்கும் நிகழ்ச்சி | Sri Sathya Sai Baba's 100 Birthday Celebration | Sathya Sai Baba News | Sri Sathya Sai Baba | Sri Sathya Sai Baba photos | ஸ்ரீ சத்ய சாய் பாபா - 100வது பிறந்த நாள்

சத்ய சாய்பாபாவின் 100வது ஜெயந்தி விழா; பக்தர்களுக்கு விருந்து படைக்கும் நிகழ்ச்சி


 பெ.நா.பாளையம்: தடாகம் ரோடு, சோமையனுார், திருவள்ளுவர் நகரில் உள்ள ஸ்வாகதம் சாய் மந்திர் கோவிலில், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 100வது ஜெயந்தி விழாவையொட்டி, ஒரு வாரம் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வரும் 15ம் தேதி காலை மகா கணபதி பூஜையுடன் விழா துவங்குகிறது. கணேஷ் குழுவினரின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி, பஜனை, பிரசாதம், மீரா ரங்கராஜனின் முத்ரா நாட்டியாலயா குழுவினரின் ஆத்ம ராமாயணம் நாட்டிய, நாடகம், இரவு 9:00 மணிக்கு மங்கள ஆரத்தி நடக்கின்றன. 16ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், குரு கீர்த்தனைகள், சிவபூஜை, தேவதா தியானங்கள், மீனாட்சி கல்யாணம் ஆரம்பம், அம்பாள் அலங்காரம், மாலை மாற்றல், திருக்கல்யாணம், மாலை ஸ்ரீ வள்ளி முருகன் கலை குழுவினரின் வள்ளி கும்மியாட்டம் நடக்கின்றன. வரும் 17ம் தேதி வேத பாராயணம், ஏகாதச ருத்ர பாராயணம், மாலை கோவை டி.ஜே.வர்கீஸ் குழுவின் மாயாஜால நிகழ்ச்சி, 18ம் தேதி விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், மாலை லாவண்யா ஸ்ரீ குழுவினரின் பரதநாட்டியம், 19ம் தேதி பஜனை, மாலை ஆன்மிக அமுதம் சொற்பொழிவு, 20ம் தேதி காலை மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வடுபூஜை, மாலை பாரதி பாஸ்கர், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்கும், சமுதாய முன்னேற்றத்துக்கு பெரிதும் துணை செய்வது ஆன்மிகமா, அல்லது அறிவியலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கின்றன.


வரும் 21ம் தேதி காலை கணபதி பூஜை, மாலை திருவள்ளுவர் நகர் குழந்தைகள் வழங்கும் பன்முக கலை நிகழ்ச்சியில், மாறுவேட போட்டி, பேச்சுப்போட்டி, வினாடி வினா, பஜனை, மாலை இன்னிசை நிகழ்ச்சி, 23ம் தேதி காலை கணபதி பூஜை, மாலை சத்ய சாய்பாபாவின் 100வது பிறந்த நாளையொட்டி சாய் கிருபா குழுவினரின் 100வது சாய் பஜன், இரவு வான வேடிக்கை, மங்கள ஆரத்தி நடக்கின்றன. தினமும் அன்னதானம் வழங்கப்படுகின்றன.