ஒரு சமயம் சத்ய சாய் பாபா சில பக்தர்களுடன் சித்ராவதி நதி மணலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவர் ஒரிடத்தை பார்த்து ‘இதோ! நாக சாயி வருகிறார்!’ என்றார். ஒரு பெரிய ஆனால் அழகான பாம்பு, நடனமாடும் தோற்றத்தில், மும்மூர்த்தி அவதாரமான விஷ்ணு சாய்ந்திருக்கும் தெய்வீக பாம்பான ஆதி சேஷனைப் போல, அழகாக வளைந்து நெளிந்து வருவதைக் அங்கிருந்த பக்தர்கள் பார்த்தனர். அது நெருங்க நெருங்க, அதன் தலை திடீரென்று பாபாவின் அழகிய முகமாக மாறியது. இது அதிர்ச்சியூட்டும் காட்சியாக இருந்தபோதிலும், அருகில் வந்தபோது கூடியிருந்தவர்களிடையே பயத்தை தூண்டியது. அவர்கள் பாபாவை பார்த்து இல்லை சுவாமி, இல்லை! தயவுசெய்து அதை அப்புறப்படுத்துங்கள் என்று மன்றாடினர். பாபா பாம்பை மெதுவாகப் பார்த்து, ‘இப்போது போ, நாக சாயி’ என்று கூறி, பாம்பை மறைந்து போகச் செய்தார்! இந்நிகழ்ச்சி அங்கிருந்த பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.