Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம்>மாவட்ட கோயில்>வேலூர் மாவட்டம்>வேலூர் சிவன் கோயில்
 
வேலூர் சிவன் கோயில் (263)
 
அருள்மிகு நாகநாதர் திருக்கோயில்
தண்டலம்கிருஷ்ணாபுரம், குடியாத்தம் வட்டம் வேலூர் மாவட்டம்
காட்பாடியிலிருந்து தென்மேற்கே 4 கி.மீ.
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 8 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு சுவர்ணமுத்தீஸ்வரர் திருக்கோயில்
கழிஞ்சூர், குடியாத்தம் வட்டம் வேலூர் மாவட்டம்
காட்பாடிக்கு வடக்கே 2 கி.மீ.
இக்கோயில் 9 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு நந்திராஜர் திருக்கோயில்
வேலகால்நத்தம், திருப்பத்தூர் வட்டம் வேலூர் மாவட்டம்
திருப்பத்தூர்க்கு வடமேற்கே 18 கி.மீ.
இக்கோயில் 25 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு காங்கேசுவரர் திருக்கோயில்
காங்கேயநல்லூர், குடியாத்தம் வட்டம் வேலூர் மாவட்டம்
காட்பாடியிலிருந்து தென்கிழக்கில் 4 கி.மீ.
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் பாலகுஜாம்பாள். தீர்த்தம் பாலாறு, தலவிருட்சம் பலா. முருகப்பெமானுக்கு காங்கேயன் என்னும் பெயர். முருகப்பெருமானால் வழிபடப் பெற்றதால் இத்தல இறைவனுக்கு காங்கேசப் பெருமான் என்றும், ஊர் பெயர் காங்கேயநல்லூர் என்றும் பெயர் பெற்றது. இக்கோயிலில் நான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. திரிபுவனச்சக்ரவர்த்தி இராசராசதேவர். இராசநாராயண சம்புவராயர் காலத்தைச் சேர்ந்தது. இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. பங்குனி உத்திரம் அன்று பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு பரமேசுவரர் திருக்கோயில்
திருப்பத்தூர் வேலூர் மாவட்டம்
வேலூர்க்கு தென்மேற்கே 87 கி.மீ
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்புலிங்க மூர்த்தியாக உள்ளார். இவருக்கு பிரம்மேசுவரர் என்ற திருநாமமும் உண்டு. இக்கோயில் உள் சன்னதியில் சோமநாதர், இராமநாதர், காசிவிசுவநாதர் முதலிய சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் இரண்டு கல்வெட்டுக்கள் உள்ளன. ஒன்றில் விசயநகர மன்னர் வீரதேவராயர் மகன் வீரவிசய பூபதிராயர் கல்வெட்டு நிகரிலிச் சோழ மண்டலத்தின் உயில்நாடுமாதவ சதுர்வேதிமங்கலம் என்கிற திருப்பத்தூர் பிரம்மேசுவரமுடைய நாயனார் கோயிலுக்கு நிலக்கொடை வழங்கியதைக் கூறுகிறது. ஒரு கால பூஜை நடைபெறுகிறது. சிவராத்திரியன்று உற்சவர் நடைபெறுகிறது.
அருள்மிகு பசுவன்னீசுவரர் திருக்கோயில்
அம்மன்கோயில், திருப்பத்தூர் வட்டம் வேலூர் மாவட்டம்
திருப்பத்தூர்க்கு வடமேற்கே 7 கி.மீ.
இக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு கூத்தாண்டேசுவரர் திருக்கோயில்
வளையம்பட்டு, வாணியம்பாடி வட்டம் வேலூர் மாவட்டம்
வாணியம்பாடிக்கு வடகிழக்கே 3 கி.மீ.
இக்கோயில் ஒரு செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
அருள்மிகு அதிதீசுவரர் திருக்கோயில்
வாணியம்பாடி வேலூர் மாவட்டம்
வேலூர்க்கு தென்மேற்கே 67 கி.மீ
பாலாற்றங்கரையில் இக்கோயில் 5 செண்ட் நிலப்பரப்பளவில் இராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிரமநாயகி. தலவிருட்சம் வில்வம். உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், துர்க்கை, கருமாரியம்மன், சப்தமாதர், வயிரவர், நால்வர், நவக்கிரகங்கள் முதலிய சன்னதிகள் உள்ளன. வாணி சிவபெருமானைப் பாடியதால் சிவபெருமான் விருந்தினராக (அதிதியாக) வந்து விருந்து கண்டதால் இத்தலத்திற்கு வாணியம்பாடி என்று பெயர் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது. கல்வெட்டுக்களில் பெரும்பாணப்பாடி வணிகன்பாடி என்றும், நரசிம்ம சதுர்வேதிமங்கலம் என்றும், முதலாம் குலோத்துங்கனின் சாசனப்படி சம்புகளூர் நாட்டு மதுராந்தக சதுர்வேதிமங்கல பெரும்பாணப்பாடி என்றும் குறிப்பிடப்படுகிறது. பார்த்திபவந்திர வர்மன் காலத்து கல்வெட்டும் ஒன்று உள்ளது. நிலதானம் வழங்கியதைக் குறிக்கிறது. நாள்தோறும் இரு கால பூஜை நடைபெறுகிறது. சித்திரையில் பிரமோற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு நாகரத்தினசுவாமி திருக்கோயில்
ஆம்பூர், வாணியம்பாடி வட்டம் வேலூர் மாவட்டம்
வாணியம்பாடிக்கு வடக்கே 18 கி.மீ.
பாலாற்றின் தென்கரையில் இக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் 3 நிலை ராஜகோபுரம், பிரகாரங்களுடன் மூலவர் சுயம்புலிங்கமாக உள்ளார். அம்மன் அபயவல்லி, தலவிருட்சம் வில்வம், தீர்த்தம் நாகதீர்த்தம் உள்பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், மரகதவல்லி உடனுறை மார்க்கபந்தீசுவரர், ஞானம்பிகை உடனுறை காளத்திநாதர், வயிரவர், நடராஜர், 63 நாயன்மார்கள் முதலிய சன்னதிகள் உள்ளன. இக்கோயில் கிழக்கு நோக்கியவாறு சற்றுப் பள்ளமான இடத்தில் அமைந்துள்ளதால் 7 படிகள் இறங்கிக் கடந்தே உள்செல்லல் வேண்டும். ஒரு பசு, புற்று ஒன்றில் பால் சொரிவதைக் கண்டு அகழ்ந்து பார்த்தபோது சிவலிங்கம் காணப்பட்டது. பாம்புப்புற்றில் இப்பெருமான் இருந்ததால் இப்பெருமானுக்கு நாகரத்தின சுவாமி என்று பெயர் பெற்றார். இக்கோயிலில் 3 கல்வெட்டுக்கள் உள்ளன. விசயநகரமன்னர் சாளுவ நரசிங்கதேவர் காலத்தைச் சேர்ந்த ஒரு கல்வெட்டும், சோழர் திரிபுவனச் சந்கரவர்த்தி குலோத்துங்கச் சோழதேவர் இக்கேவிலுக்கு நன்கொடை அளித்ததைப் பற்றி ஒருகல்வெட்டும், ஒய்சாள வீரவல்லாள தேவர் நிலம் அளித்தது பற்றியும் குறிப்பிடுகின்றன. நாள்தோறும் நான்கு கால பூஜை நடைபெறுகிறது. ஐப்பசி மாதத்தில் உற்சவம் நடைபெறுகிறது.
அருள்மிகு சென்ராயசுவாமி திருக்கோயில்
வடக்குப்பட்டு, வாணியம்பாடி வட்டம் வேலூர் மாவட்டம்
வாணியம்பாடிக்கு மேற்கே 4 கி.மீ
பாலாற்றின் வடகரையில் இக்கோயில் 10 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.
<< Previous  22  23  24  25  26  27  Next >> 
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar