மீஞ்சூர் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை



மீஞ்சூர்: வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூர் பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் கோவில், 800ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், நேற்று, கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.

கடந்த, 24ம்தேதி, அக்னி பிரதிஷ்டை, கோபுர கலச ஸ்தானம், யாகசால புண்யாஹம் ஆகிய பூஜைகளுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், கோபூஜை, நவக்கிரக பூஜை, புதிய சிலைகள் பிரஷ்டை ஆகியவை நடைபெற்றன. நேற்று காலை, 6:00மணிக்கு, விஸ்வரூபம் கோதர்சனம், தசதானம் ஆகிய பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, பட்டாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியம் முழுங்க, காலை, 9:00மணிக்கு, விமான கோபுரங்களுக்கு புனிதநீர் ஊற்றி, கும்பாபிஷே கம் நடந்தது. இரவு, 8:00மணிக்கு, பெருமாள் விசேஷ அலங்காரங்களுடன் மாடவீதிகள் வழியாக வலம் வந்து அருள்பாலித்தார்.

பட்டாபிஷேகம்; திருத்தணி மடம் கிராமம் அனுமந்தபுரம் தெருவில் உள்ள கல்யாண ராமர் கோவிலில் ஸ்ரீராம நவமியின், 57 வது ஆண்டு விழா கடந்த, 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 19ம் தேதி ராமர்- --சீதா திருக்கல்யாணம் நடந்தது. நிறைவு நாளான நேற்று காலை கோவில் வளாகத்தில் ராமர் பட்டாபிேஷகம் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறப்பு யாகம் நடந்தது. இரவு, 7:00 மணிக்கு உற்சவர் ராமர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மடம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்