SS திருச்செந்தூர் பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> திருச்செந்தூர் பதிகம்
திருச்செந்தூர் பதிகம்
திருச்செந்தூர் பதிகம்

1. வீதிசுற்றிக் கீழ்ப்புறமும் கடலுங் கண்டேன்.
விஸ்தாரக் கொடிமரமு மங்கே கண்டேன்
ஆதியெனும் மூலமதை அங்குக் கண்டேன்
அடியெனும் செந்தில்நகர் வலமாய் வந்தேன்
நீதிபுகழ் கோபுர மேற்புறத்திற் கண்டேன்
நிச்சமாய் உனதழகைக் காண வேண்டி
ஆதியெனும் கடற்கரையில் வந்துநின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

2. மந்தாரை பிச்சிமுல்லை வனமும் கண்டேன்,
மணல்மேட்டுக் குவட்டழகு மலையுங் கண்டேன்
வந்தவர் நோய் பிணிதீர்க்கும் வளமுங் கண்டேன்
வருந்தும் அடியார்க்கு வரமீயக் கண்டேன்
சிந்தா நவமணி விளக்கு ஒளியுங்கண்டேன்
திருச்செந்தூ ரதிபனைக் காணவென்று
அந்தரமாய்க் கடற்கரையில் வந்துநின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

3. நாழிநல்ல கிணறு தன்னை நானுங் கண்டேன்
நன்மைபெறத் தீர்த்தமதில் ஆடிக்கொண்டேன்
வாழிசொலு மறையோர்கள் தன்னைக் கண்டேன்
மண்டபமுந் திருமதிலுஞ் செந்தூருங் கண்டேன்
கோழியெனுஞ் சேவல்மயில் தன்னைக் கண்டேன்
குமரனிரு தாளிணையைக் காண வென்று
ஆறுதலாய்க் கடற்கரையில்  வந்து நின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

4. மூன்றுசுத்து மண்டபமுஞ் சுற்றிப் பார்த்தேன்
முன்னாலே வீரபத்ரன் தன்னைக் கண்டேன்
நானுமே மலைக்குடைவில் பெருமாள் கண்டேன்
நல்லவள்ளி சன்னதியும் பிறகு கண்டேன்
தேனுடன் பாலாபிஷேகம் செய்யக் கண்டேன்
சிவனார்தம் பாலகனைக் காணவேண்டி
ஆனதொரு கடற்கரையில் வந்துநின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

5. ஆறுமுக நயினார் தன்னழகு கண்டேன்
அவருடைய சண்முக விலாசங் கண்டேன்
கூறுமடியார்கள் வினை தீர்க்கக் கண்டேன்
குன்றுருவ வேல் வாங்கி நிற்கக் கண்டேன்.
வேறுவினை யணுகாம லிருக்கக் கண்டேன்,
வேலவனார் தம்பதத்தைக் காண வென்று
ஆறுதலாய்க் கடற்கரையில் வந்து நின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

6. மங்களம்சேர் தெய்வானை தன்னைக்கண்டேன்
மதகரிதான் வாசலிலே வரவுங் கண்டேன்
பங்கயஞ்சேர் பன்னிருகை வேலுங் கண்டேன்
பதக்கமுத்துச் சரப்பளிகள் தன்னைக் கண்டேன்
தங்கமயக் கோபுரத்தில் தீபங் கண்டேன்
சங்கரனார் பாலகனைக் காண வேண்டி
அங்கசங்கக் கடற்கரையில் வந்து நின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

7. மாசிமாதம் திருவீதி சுத்திவரவுங் கண்டேன்
மனிதருக்கு மடத்திலன்னம் வழங்கக் கண்டேன்
தேசிக்காய் சப்பரத்தின் சாயல் கண்டேன்.
தினந்தினமும் பூச்சரங்கள் தூவக் கண்டேன்
வாசனையாம் பெரியோர்கள் தன்னைக் கண்டேன்
வள்ளியுட கணவனைநான் காண வென்று
ஆதியெனும் கடற்கரையில் வந்து நின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

8. மாசிமகம் ரதமேறி வரவுங் கண்டேன்
மனிதரெல்லாம் கூடிவடம் பிடிக்கக் கண்டேன்
தேசிக்காய்ச் சப்பரத்தின் சாயல் கண்டேன்
திருவருளும் பூச்சரங்கள் தொங்கக் கண்டேன்
நீதிபுகழ் சண்முக விலாசங் கண்டேன்
நிச்சமாய் உனதழகைக் காண வேண்டி
ஆசையெனும் கடற்கரையில் வந்து நின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

9. கஞ்சமலர்த் தாளிணையை நானுங் கண்டேன்
கதிர்வேலுஞ் சூலமுமுன் கையிற் கண்டேன்
நெஞ்சமதில் வேதியர்சம் பத்துங் கண்டேன்
தினந்தினமும் சந்தனா பிஷேகங் கண்டேன்
வஞ்சமெனும் மாயமதை நீக்கக் கண்டேன்
மனதறிய வுந்தனை நான் காணவேண்டி
அஞ்சலெனும் கடற்கறையில் வந்து நின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

10 செகத்திலுள்ளோ ருன்பாதம் பணியக் கண்டேன்
தினந்தினமும் மறையோர்கள் துதிக்கக் கண்டேன்
சுகத்திலே நானடியேனி ருக்கக் கண்டேன்
துயரமெல்லா முன்பாதம் செல்லக் கண்டேன்
மகத்திலே ரதத்தில் வருமழகு கண்டேன்
மனதறிய உனதழகைக் காண வேண்டி
அகத்தியமாய்க் கடற்கறையில் வந்து நின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.

11. வண்ணமயில் வாகனத்தில் வரவுங் கண்டேன்
மறையோர்கள் தினமு மன்னம் புசிக்கக் கண்டேன்
திண்ணமுடன் வள்ளிமனை தனையுங் கண்டேன்
தினந்தினமும் பள்ளியறை சேரக் கண்டேன்
கின்னரர்தம் பூர்வீணை முழங்கக் கண்டேன்
கிலேசமெல்லாம் தீர்த்துன்னைக் காண வேண்டி
அன்னம்போல் கடற்கரையில் வந்து நின்று
ஆரூப தரிசனங் கண்டருள் பெற்றேனே.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar