SS சவுந்தரிய லஹரி பகுதி-2 - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சவுந்தரிய லஹரி பகுதி-2
சவுந்தரிய லஹரி பகுதி-2
சவுந்தரிய லஹரி பகுதி-2

65. சகலத்திலும் வெற்றி பெற

ரணே ஜித்வா தைத்யா-நபஹ்ருத-ஸிரஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தைஸ் சண்டாம்ஸ-த்ரிபுரஹர-நிர்மால்ய-விமுகை:
விஸாகேந்த்ரோபேந்த்ரை: ஸஸிவிஸத-கர்ப்பூரஸகலா
விலீயந்தே மாதஸ்தவ வதந-தாம்பூல-கபலா:

தாம்பூல சிறப்பு-வாக்கு வெற்றி

அற்றை யருள் சிவசேடம் சண்டனுண்ண அது பொறாது ஆவல் தீரக்
கற்றை மலர்க் குழல் உமை! நின் கருப்பூரச் சகலமதிச் சகலம் போல
உற்ற திருத் தம்பலத்தின் ஒரு சகல மேனும் இனி துண்டு வாழப்
பெற்றிலரேல் அமரரெனும் பெயர்பெறவும் இருத்தனரோ பிழைப்பில் விண்ணோர்.

பொருள்: தாயே! தேவசேனாதிபதியான சுப்ரமண்யர், தேவேந்திரன், மகாவிஷ்ணு ஆகியோரெல்லாம் அசுரர்களை வென்று திரும்பி உன் அருகில் வரும்பொழுது, மரியாதைக்காகத் தலைப்பாகையை எடுத்துத் தம் கைகளில் வைத்திருக்கிறார்கள். அவர்கள் சண்டிகேசுவரரின் பாகமாகிய பரமசிவனின் நிர்மால்யத்தைப் பொருட்படுத்தாமல், வெண்மையான பச்சைக் கற்பூரப் பொடியுடன் கலந்ததும், நீ வாயில் மென்று கொடுத்ததுமான தாம்பூலக் கவளங்களைப் பெற்று நன்கு மென்று தின்கிறார்கள்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் தோல்வியென்பதே இல்லாமல் வெற்றி உண்டாகும். வாக்கு வசியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

66. சர்வ ரோக நிவாரணம்

விபஞ்ச்யா காயந்தீ விவித-பதாநம் பஸுபதே:
த்வயாரப்தே வக்தும் சலிதஸிரஸா ஸாதுவசநே
ததீயைர்-மாதுர்யை ரபலபித-தந்த்ரீ-கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம்

தேவியின் குரலினிமை-சங்கீத ஞானம்

பசுத்த மலர்க் கொடி! கருணை பழுத்தனைய கொம்பே! நின் பரமர் பொன்தோள்
விசைத் தொழிலை கலைவாணி தனிற்பாடிப் பாடியவள் மெலிவதல்லால்
அசைத்திலர் பொன்முடி உனது மதுர மொழிக்கு அசைத்தன ரென்று அதற்கு நாணி
இசைத் தொழிலைக் கைவிட்டாள் எழில் வீணை உறையிலிட்டாள் ஏது செய்வாள்.

பொருள்: தாயே! சரஸ்வதிதேவி பரமசிவனுடைய பலவிதமான அருள்விளையாட்டு லீலைகளை தனது வீணையில் பாடுகிறாள். நீ அதைக்கேட்டு மகிழ்ச்சியோடு தலையை அசைத்து, ஆஹோ என்று சொல்ல ஆரம்பித்தாய். அந்த உன் பேச்சின் இனிமை, தன் வீணைத் தந்தியின் ஒலியைப் பரிகாசம் செய்வது போலிருப்பதால் ஓசைப்படாமல் சரஸ்வதி தேவி உறைத்துணியால் தன் வீணையை மறைத்து விடுகிறாள்.

ஜபமுறையும் பலனும்
3 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 5000 தடவை ஜபித்து வந்தால், எல்லாவித நோய்களும் நீங்கும். வீணை, பிடில், மிருதங்கம் முதலிய வாத்தியங்களை கற்றுக் கொள்பவர்கள் இதைப் பாராயணம் செய்தால் அவைகளில் மிக்க வல்லவர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை.

67. பதவி உயர

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீஸேநோதஸ்தம் முஹுரதர-பாநாகுலதயா
கரக்ராஹ்யம் ஸம்போர்-முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ்-தவ-சுபுக-மௌபம்ய-ரஹிதம்

முகவாய்க்கட்டை-தேவியின் பிரசன்னம் (தமிழ்)

மகவாசையால் இமயமலை அரையன் மலர்க்கை தொட மனத்துள் அன்பு
புகவாசையால் இறைவன் கரத்தேந்தப் பொலிவுறு நின் சிபுகம் போற்றின்
முகவாசி அரன் படிமக்கலம் பார்க்க விட்டமுகிழ்க் காம்பு போலுஞ்
சக வாழ்வை இகழ்ந்து இதயம் தனித்தவர்தம் தவக் கொழுந்து தழைத்த கொம்பே.

பொருள்: மலையரசனின் புதல்வியாகிய தாயே! உன் மோவாய் உன் தந்தையான இமவானால் அன்புப் பெருக்கால் அடிக்கடி தன் நுனிக்கையால் தொடப்பட்டது. அதரபானம் செய்யும் ஆவலுடன் பரமசிவனின் திருக்கரத்தால் அடிக்கடி உயர்த்திப் பிடிக்கப்பட்டது. பரமசிவனின் திருக்கரத்தால் அவ்வாறு தொடுதற்குரியதும், முகமாகிய கண்ணாடிக்குப் பிடி போன்றதுமான அந்த மோவாயை நான் எப்படி வர்ணிப்பேன்?

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். அரசாங்க அலுவல்களில் அனுகூலம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

68. ராஜபதவிகள் கிடைக்க

புஜாஸ்லேஷாந்நித்யம் புரதமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முக-கமலநால-ஸ்ரியமியம்
ஸ்வத: ஸ்வேதா காலாகரு-பஹுல-ஜம்பால-மலிநா
ம்ருணாலீ-லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா

கழுத்தின் வர்ணனை-ராஜவசியம்

வயங்குறு நின் தரளவடம் மான்மதச் சேர் அளைய முமது த்தர் மேனி
முயங்கு தொறும் எழுபுளகம் முட்பொதிந்த பசுங்கழுத்தும் முகமும் கண்டால்
இயங்கு புனல் கருஞ்சேற்றின் எழும் வலய முள்ளரைத்தாள் ஈன்ற கஞ்சம்
பயம்புகுதல் கடனன்றோ மாற்றிலாப் பசுமை யொளி பழுத்த பொன்னே.

பொருள்: பராசக்தி தாயே! பரமசிவனின் கைகள் தோள்களைத் தழுவுவதால் ரோமாஞ்சலி ஏற்பட்டு தாமரை மலரின் முள்ளுடன் கூடிய தண்டைப் போல் உன் கழுத்து காட்சி தருகிறது. அது உன் முகமாகிய தாமரைக்குக் காம்பைப் போல் விளங்குகிறது. அதற்கும் கீழ் நீ கழுத்தில் அணிந்துள்ள முத்துமாலை இயல்பாக வெண்மை நிறத்தினதாயினும், கறுப்பான அகிலுடன் கூடிய சந்தனக் குழம்பால் பூசப்பட்டு சேற்றில் அழுக்கடைந்த தாமரைக் கொடி போல் காணப்படுகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தேவியின் அருளால் அரசாங்கத்தில் நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை.

69. எடுத்த காரியம் நிறைவேற

கலே ரேகாஸ்திஸ்ரோ கதி-கமக-கீதைக நிபுணே
விவாஹ-வ்யாநத்த-ப்ரகுணகுண-ஸங்க்யா-ப்ரதிபுவா:
விராஜந்தே நாநாவித-மதுர-ராகாகர-புவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி-நியம-ஸீமாந இவ தே

கழுத்தின் மூன்று ரேகைகள்-சங்கீத ஞானம் (தமிழ்)

செந்திரு நின் திருமணத்தில் சேர்ந்த சரம் மூன்றெழுந்தித் திகழ்வது என்கோ
மந்தர மத்திம தார மூவகை நாதமும் எல்லை வகுத்த தென்கோ
கொந்திரையுந் துணர்ப்பூகங் கொழுத்த பசுங்கழுத்தின் வரைக் குறிகள் மூன்றும்
இந்திரையும் சயமகளும் கலைமாதும் புகழ் வதல்லால் யான் என் சொல்வேன்.

பொருள்: கதி, கமகம், கீதம் என்னும் மூவகையான சங்கீதத்தில் ஒப்புயர்வற்ற திறமை பெற்ற அம்பிகையே! உன் கழுத்தில் காணப்படும் மூன்று கோடுகள், உன் திருமண காலத்தில் பரமசிவன் உன் கழுத்தில் கட்டிய மாங்கல்யச் சாட்டின் மூன்று நூல்களைக் குறிப்பிடும் பாக்கிய ரேகைகளா? மேலும் இசையில் உள்ள பலவிதமான இனிய இராகங்களுக்கும் அடிப்படையாக உள்ள ஷட்ஜமம், மத்யமம், காந்தாரம் என்ற மூன்று தொகுதிகளுக்கும் இடத்தையும் எல்லையையும் பிரித்துக் காட்டுவன போலவும் அவை விளங்குகின்றன.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சகல காரியங்களிலும் சித்தியுண்டாகும் என்பது நம்பிக்கை.

70. எடுத்த காரியம் நன்கு நிறைவேற

ம்ருணாலீ-ம்ருத்வீநாம் தவ புஜலதாநாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸெளந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதநை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம-மதநா-தந்தகரிபோ:
சதுர்ணாம் ஸீர்ஷாணாம் ஸம-மபய-ஹஸ்தார்ப்பண-தியா

தோளின் வர்ணனை-அபராத சாந்தி

முன்னமொரு தலைசின உன் முதல்வரால் இழந்த அயன் முகங்கள் நான்கால்
உன்னழகுக்கு ஏற்ற பசுங் கழைமணித் தோள் ஒரு நான்கும் வழுத்துகின்றான்
இன்னமொரு சீற்றம் எழுந்து அரிதலையை எனினும் இவள் தடமென் தோளைச்
சொன்ன தலைக்கு அழிவிலையென்று அதில் துணிந்த துணிவன்றோ சுருதி வாழ்வே.

பொருள்: தாயே! உன்னுடைய நான்கு அழகிய கைகளும் தாமரைக் கொடிகளைப் போல் மிருதுவானவை. ஒரு சமயம் பிரம்மாவின் இந்த ஐந்தாவது தலையைப் பரமசிவன் நகத்தால் கிள்ளி எறிந்து விட்டார். அதற்குப் பயந்து பிரமன் மீதமுள்ள தன் தலைகளுக்கு ஒரே காலத்தில் அபயமளிக்க வேண்டுமென்று உன் நான்கு கைகளின் அழகைத் தன் நான்கு வாய்களாலும் துதி செய்கிறார்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் வெற்றியும், அதிக லாபமும் உண்டாகும். பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

71. தேவதைகள் வசியமாக

நகாநா-முத்யோதைர் நவநலிந-ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண-தல-லாக்ஷ-ரஸ-சணம்

கையின் வர்ணனை-திருமகள் அருள்

திருமகள் தன் சீறடியால் துவண்டும் அதில் செம்பஞ்சால் செங்கேழ் பெற்றும்
மருமுளரி எழில் படைத்தது இதுவோ நம் இயற்கை எதிர் அலர்வது என்றே
இருகரமும் நகைத்த நகை ஒளியை உனது எழிலுகிர் என்றிறைஞ்சி நாளும்
அருமறைகள் வழுத்துகின்றது அதிசயமோ பேதைமையோ அன்போ அம்மே.

பொருள்: பார்வதி தாயே! சிறந்த ஒளி சிந்தும் உன் கை நகங்களில் அன்றலர்ந்த தாமரையின் சிவப்பையும் மிஞ்சும் பிரகாசம் மின்னுகிறது. அத்தகைய அழகிய உன் கரங்களை நான் எப்படி வர்ணிப்பேன்? சொல். செந்தாமரை மலரில் உறைகின்ற மஹாலக்ஷ்மியின் உள்ளங்காலில் பூசப்பட்ட மருதோன்றியினாலல்லவா அவ்வளவு ஒளி வந்துள்ளது. அந்தச் செயற்கையொளியும் பதினாறில் ஒரு பங்குதான் உன் கை நகங்களின் அழகுக்கு ஈடாக முடியும் எனத் தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை ஆலமரத்தடியில் உட்கார்ந்து ஜபித்து வந்தால், யக்ஷிணி முதலிய தேவதைகள் வசியமாவார்கள் என்பது நம்பிக்கை.

72. யாத்திரையில் பயம் நீங்க

ஸமம் தேவி ஸ்கந்த-த்விபவதந-பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுத-முகம்
யதாலோக்யாஸங்காகுலித-ஹ்ருதயோ ஹாஸஜநக:
ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஸதி ஹஸ்தேந ஜடிதி

நகில்கள் அமைப்பு-இரவில் பயமின்மை

நித்தரொரு பக்கர் மயில் நிற்களிறு உன் வட்டமுலை நிற்கும் எழிலில் தனது சீர்
மத்தக மெனத்தனில் அயிர்த்து ஒரு கரத்தை முடி வைத்து உறவுறத்தடவுமால்
முத்தமுலை செப்புவது என்களிறு பின் குமரன் முற்புதல்வர் துய்த்த அமுதால்
அத்தலைமை பெற்றனர் அதில் திவலை கிட்டினும் என் அற்ப உயிர் முத்தி பெறுமே.

பொருள்: அம்பிகையே! பால் சுரக்கும் காம்புகளுடன் கூடியதும்; கணபதி, சுப்ரமணியன் ஆகிய உன் இரு குழந்தைகளாலும் ஒரே நேரத்தில் பால் பருகக்கூடியனவும் ஆன உன் தனங்கள் இரண்டு எங்கள் துன்பங்களையெல்லாம் அகற்றட்டும்! யானைத் தலையரான கணபதி, உன் தனங்களைப் பார்த்துவிட்டு, சந்தேகப்பட்டு, கலங்கிய உள்ளத்துடன் தன் தலையிலுள்ள இரு குடங்களும் இருக்கின்றனவா என்று தடவிப் பார்த்துக் கொள்கிறார். (யானையின் தலையில் இருபகுதியாக, மேடான அமைப்பில் காணப்படுவது கும்பஸ்தலம் எனப்படும்.)

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், யாத்திரையில் பேய், பிசாசு, சத்ரு, சிறைவாசம் போன்ற எல்லாவிதமான பயங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

73. பால் பெருக

அமூ தே வ÷க்ஷஜா-வம்ருதரஸ-மாணிக்ய-குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி-பதாகே மநஸி ந:
பிபந்தௌ தௌ யஸ்மா-தவதித-வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதந-க்ரௌஞ்ச-தலநௌ

நகில்கள் கலசங்கள்-ஜீவன் முக்தி

முக்கண் இறைவாக்கு மயல்முற்ற எழில் முற்றும் முலை முட்டிய சுரப்பொழுகு பால்
மக்களிருவர்க்கு அருள அக்களிறும் இக்குகனும் மட்டிளமை முற்று கிலரால்
அக்கடலுதித்த அமுதத்தனை எடுத்து அதில் அடைத்திருகண் முத்திரையின் வாழ்
செக்கர் மணி மெய்க்கலசம் அத்தனை உன் வட்ட முலை செப்பல மலைப்புதல்வியே.

பொருள்: மலையரசனின் மகளான குலக்கொடியே! உன்னுடைய இரு தனங்களும் அமிருதம் நிரம்பிய மாணிக்கக்குடங்கள் என்பதில் எங்கள் மனத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவற்றிலிருந்து பாலைப்பருகும் காரணத்தால் தான் யானை முகத்தோனான கணபதியும், அசுரனை வதைத்த சுப்ரமண்யனும் பெண்களின் சங்கமம் என்பதையே இன்னும் அறியாத குழந்தைகளாகவே இருக்கிறார்கள் போலும்!

ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து, ஜலத்தில் ஒரு வட்டம் வரைந்து, அதன் நடுவே காம் என்று எழுதி அந்த ஜலத்தை அருந்தினால், தாய்ப்பாலில்லாதவருக்குப் பாலுண்டாகும், பசுக்களுக்கும் பால் அபிவிருத்தியாகும் என்பது நம்பிக்கை.

74. புகழ் உண்டாக

வஹத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ-கும்பப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி-ரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்த: ஸபலிதாம்
ப்ரதாப-வ்யாமிஸ்ராம் புரதமயிது: கீர்த்தி மிவதே

முத்துமாலை-நற்கீர்த்தி (தமிழ்)

கொற்ற வாரண முகமகன் பொரு குஞ்சரானன நிருதனார்
இற்ற கோடுதிர் ஆரமாலிகை இதழ் மணிப்ரபை தழையவே
பெற்ற பாக பினாக பாணி ப்ரதாபமோடு அணை புகழெனா
உற்ற தாயினும் உனது பொற்றனம் உரை படா நிறை செல்வியே

பொருள்: தாயே! உன்னுடைய மார்பகத்தின் மத்தியப் பகுதி கஜாசுரனின் கும்பஸ்தலத்திலிருந்து தோன்றிய சிறந்த முத்துக்களால் கோர்க்கப்பட்ட முத்து மாலையைத் தாங்கி நிற்கிறது. நிர்மலமான அந்த முத்து மாலையானது கோவைப்பழத்தைப் போல சிவந்த உன் உதட்டின் ஒளியால், உட்புறம் விந்தையான வண்ணங்களை உடையதாயும், முப்புரத்தை எரித்த சிவபிரானின் பராக்கிரமத்தோடு கலந்து இந்த மாலையாக வந்ததோ என எண்ணும்படியும் அழகுடன் தோற்றமளிக்கின்றது.

ஜபமுறையும் பலனும்
3 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை தெய்வ சந்நிதியில் ஜபித்து வந்தால், நல்ல புகழ் உண்டாகும் என்பது நம்பிக்கை.

75. கவிதா சக்தி உண்டாக

தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு-ராஸ்வாத்ய தவ யத்
கவீநாம் ப்ரௌடாநா-மஜநி கமநீய: கவயிதா

நகில்களின் வர்ணனை-கவிபாடும் திறமை (தமிழ்)

தருண மங்கலை உனது சிந்தை தழைந்த பாலமுது ஊறினால்
அருண கொங்கையில் அது பெருங்கவி அலை நெடுங் கடலாகுமோ
வருண நன்குறு கவுணியன் சிறு மதலை அம்புயல் பருகியே
பொருள் நயம்பெரு கவிதையென்றொரு புனித மாரி பொழிந்ததே.

பொருள்: மலையரசனான இமவானின் புதல்வியே! உன் ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால், இதயத்தில் தோன்றிய பாற்கடல் போலவும், வாக்குத் தேவதையான சரஸ்வதியின் அருளுருவமே பொங்கி வந்தாற் போலவும் எனக்குத் தோன்றுகிறது. உன் பாலை அருந்தித் திராவிட நாட்டில் பிறந்த (சங்கரன்) என்னும் இந்தச் சிசு பெரிய வித்வான்களுக்கிடையே எல்லோரையும் கவரக்கூடிய கவியாக ஆகிவிட்டானல்லவா!

ஜபமுறையும் பலனும்
3 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை ஜபித்து வந்தால், கவிதைகள் இயற்றும் அபாரசக்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

76. சர்வ வல்லமை பெற
ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேந வபுஷா
கபீரே தே நாபீ-ஸரஸி க்ருதஸங்கோ மநஸிஜ:
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவலிரிதி:

நாபியின் அழகு-பரம வைராக்கியம்

மூலமே நின் மகிழ் நர் கோபமுது கனல் பொறாது வேள்
கோல நாபி மடுவினில குளிப்ப வந்த வெம்மையால்
மேல வாவு தூம ரேகை வேரெழுங் கொழுந்தையோ
நீல ரோம ரேகை என்று நீணிலங்கு குறிப்பதே.

பொருள்: மலையரசனின் புதல்வியே! பரமசிவனின் கோபத்தால் தோன்றிய அக்கினி ஜ்வாலையால் சூழப்பெற்ற மன்மதன், அந்தத் தாபம் தாங்க இயலாதவனாய், உன்னுடைய தொப்புளாகிய தடாகத்தில் குதித்து மூழ்கி விட்டான். அவன் நெருப்புடன் நீரில் புகுந்ததால் மெல்லிய புகை மேலே கிளம்புகிறது. கொடி போன்று மெல்லியதான அந்தப் புகைக் கோடு தான் உன் நாபியைச் சுற்றிலுமுள்ள ரோமங்களென மக்கள் நினைக்கிறார்கள்.

ஜபமுறையும் பலனும்
10 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் வெற்றி ஏற்படும் என்பது நம்பிக்கை.

77. வெற்றி பெற

யதேதத் காலிந்தீ-தநுதர-தரங்காக்ருதி ஸிவே
க்ருஸே மத்யே கிஞ்சிஜ்ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தா-தந்யோந்யம் குசகலஸயோ-ரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிஸதிவ நாபிம் குஹரிணீம்

ரோம ரேகை-மக்கள் வசியம் (தமிழ்)

முளிரி மாது உன் முலையினோடு முலைநெருக்க இடையில் வான்
வெளியின் நீல மோடியுந்தி வியன் முழைக்குள் நுழையவே
தெளியும் நீரில் யமுனை நீவு சிறு தரங்கம் அனையபேர்
ஒளியின் ஞாலம் மருளும் ஈது ரோம ரேகை என்னவே.

பொருள்: அம்பிகையே! மிகவும் குறுகியதான உன் இடுப்பின்மேல், கருப்பு வர்ணமுள்ள, யமனா நதியின் சிறிய அலை போன்ற ஒரு ரோம வரிசை சாமுத்ரிக லட்சணமறிந்த வித்வான்களுக்கு மட்டுமே காணப்படுகிறது. இது ஸ்தனங்களுக்கிடையே உள்ள குறுகிய ஆகாசந்தானோ? அந்தக் குறுகிய ஆகாசம், ஸ்தனங்களின் உரைசலால், தான் அழிந்து விடுவோமென்று பயந்து கீழே நாபி கூபத்தில் ஒளிந்து கொள்ளச் செல்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்
15 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால், ஸகல காரிய ஜெயம் உண்டாகும் என்பது நம்பிக்கை. (செந்தாமரைப் பூவைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பசு நெய்யில் குழைத்து, அதில் கீழ்நோக்கிய ஒரு முக்கோணத்தை எழுதி அதன் நடுவே க்லீம் என்று எழுதி ஜபம் செய்தபின் அதை நெற்றியில் தரிக்கவும்.)

78. ராஜாங்க பதவியில் ஜயம் உண்டாக

ஸ்திரோ-கங்காவர்த்த: ஸ்தந-முகுல-ரோமாவலி-லதா
கலாவாலம் குண்டம் குஸுமஸர-தேஜோ-ஹுதபுஜ:
ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிஸ-நயநாநாம் விஜயதே

உந்தி வர்ணனை-உலக வசியம்

தூய கங்கை நிலை படைத்த சுழி தனத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி ஆல வாலம் விரக வேள்
தீயரும்பும் ஓமகுண்டம் இறைவர் செங்கண் இடைவிடா
மேய கஞ்ச மடுவினுந்தி வேறுரைத் தென் விமலையே.

பொருள்: பர்வதராஜனின் புதல்வியாகிய தாயே! உன்னுடைய நாபி, அசைவில்லாத கங்கையின் சுழல் போலவும், ஸ்தனங்களாகிய தாமரை மொட்டுக்களைத் தாங்கும் ரோமாவளியாகிய தாமரைத் தண்டுகளுக்குத் தண்ணீர் பாயும் பாத்தியாகவும், மன்மதனின் ஒளியாகிய அக்னிக்கு ஹோம குண்டமாகவும், அவன் பத்தினியான ரதிதேவியின் விளையாட்டு அறையாகவும், பரமசிவனின் கண்களின் தவப்பயனுக்குக் குகையின் துவாரமாகவும் விளங்குகிறது.

ஜபமுறையும் பலனும்
15 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை ஜபித்து வந்தால், தடைப்பட்டுள்ள அரசாங்க அலுவல்களில் ஜயமுண்டாகும் என்பது நம்பிக்கை. (வாசனைச் சந்தனத்தில் முக்கோணம் எழுதி நடுவில் ஹ்ரீம் என்று எழுதி, ஜபம் ஆனபின் நெற்றியில் தரிக்கவும்).

79. மந்திரங்கள் சித்தி பெற

நிஸர்க-க்ஷ்ணஸ்ய ஸ்தந-தட-பரேண க்லமஜு÷ஷா
நமந்மூர்த்தேர்-நாரீதிலக ஸநகைஸ் த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித-தடிநீ-தீர-தருணா
ஸமாவஸ்தா-ஸ்தேம்நோ பவது குஸலம் ஸைலதநயே

இடையழகு-இந்திர ஜால வித்தை

தரை மடந்தை பரவு மங்கை தனதடம் பொறாது நின்
திருமருங்குலற வளைந்து சிறுகி மூவி ரேகையாய்
வரை பிளந் தொரிடி கரைக்குள் வாழ் மரத்தோ டொத்ததால்
உரை கடந்து விடுமுன் மற்றொருறுதி தேட வெண்ணுமே.

பொருள்: பெண் குலத்தின் திலகமாகிய மலையரசனின் புதல்வியே! உன் இடை இயல்பிலேயே மெல்லிய தோற்றமுடையது. ஸ்தனங்களின் பாரத்தைத் தாங்க முடியாமல் வருந்தி வளைந்த வடிவத்தைப் பெற்றுள்ளது. எனவே ஒடிந்து போவதைப் போல இருக்கும் இடையானது, வெள்ளப் பெருக்கால் உடைந்துபோன நதியின் கரையில் இருக்கும் மரத்துக்கு இணையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. உன் அத்தகைய இடைக்குப் பல்லாண்டு காலத்துக்கு ÷க்ஷமம் உண்டாகட்டும்!

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், இந்திர ஜால வித்தையில் வல்லமையும், ஸகல ஜன மோஹனமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

80. ஜால வித்தையில் வல்லமை பெற

குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸ-பிதுரௌ
கஷந்தௌ தோர்-மூலே கநக-கலஸாபௌ கலயதா
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ

இடையின் வர்ணனை-அழகு பெற

வம்பைத் தொலைத்துதறி இறுகிக் கனத்திளகி வருபுடை நெருக்கி வளர்மாக்
கும்பக் கடாக் களிற்றினையனைய உனது முலை கொடிது கொடிதென்று வெருவா
அம் பொற்றினக் கமல இறை பொறாதிடையென அழுத்து பூணென முனிவரோடு
உம்பர்க்கும்உள மருள ஒளிகெழும்இரேகைமூன்று உலகமோ தெளிவது உமையே.

பொருள்: தேவியாகிய தாயே! சகல உலகங்களுக்கும் இறைவனாகிய ஈசனை நினைத்து, அந்தப் பூரிப்பின் காரணமாக, தங்கக் குடங்களைப் போன்ற உன் தனங்கள், ரவிக்கையைக் கிழித்துக் கொண்டு அக்குள்களில் உராய்கின்ற அளவில் வியர்த்து விளங்குகின்றதைக் கண்ட மன்மதன், தன்னால் மேலும் தூண்டப்பட்டு தனபாரங்களால் இடைஒடிந்து விடாதிருக்கும் பொருட்டு த்ரிவளி என்னும் மும்மடிப்புக் கொண்ட வள்ளிக் கொடிகளால் இடுப்பை மூன்று சுற்றாகக் கட்டியிருக்கிறானோ என எண்ணத் தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், மஹேந்த்ர ஜாலம் என்னும் ஜால வித்தையில் வல்லவனாவான் என்பது நம்பிக்கை.

81. நெருப்பு சுடாமலிருக்கும் சக்தி

குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி:  பார்வதி நிஜாத்
நிதம்பா-தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே!
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய-மஸேஷாம் வஸுமதீம்
நிதம்ப-ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச

நிதம்ப வர்ணனை (தமிழ்)

கொத்து விரியலர் சோலை இமய வெற்பரசன் மெய்க்குல மலைப் பக்கமென வாழ்
அத்தனை விரிந்த வகலத்தொடு பெரும் பாரம் அடைய உன் நிதம்ப விடையே
எத்தனை பெரும்புவனம் இற்றாலும் அழிவிலை இதற்கெனச் சேம நிதிபோல்
வைத்தது பரந்திடங் கொண்டுலகையிட மற வருத்தவோ மதுர அமுதே.

பொருள்: அன்னை பார்வதி தேவியே! மலையரசனான உன் தந்தை கனமானதும் விசாலமானதுமான மலை அடிவாரத்தின் தன்மையை எடுத்து உனக்கு சீதனமாகக் கொடுத்து விட்டார் போலும். அதன் காரணமாகத்தான் பருத்தும் விசாலமாகவும் காணப்படும் உன் பின்பக்கப் பகுதி இப்பூவுலகனைத்தையும் மறைக்கும் வகையில் தோன்றுகிறது. அதை லகுவாகவும் ஆக்கி விடுகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் தென்கிழக்கு முகமாக அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், அக்னி ஸ்தம்பன சக்தி (நெருப்பு சுடாமலிருக்கும் சக்தி) உண்டாகும் என்பது நம்பிக்கை.

82. ஜலத்தில் நடக்கும் சக்தி பெற

கரீந்த்ராணாம் ஸுண்டாந் கநககதலீ-காண்டபடலீம்
உபாப்யா-மூருப்யா-முபயமபி நிர்ஜித்ய பவதீ
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி-கடிநாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுத-கரிகும்ப-த்வய-மஸி

தொடையின் முழந்தாளின் வர்ணனை-பெரும் பதவி (தமிழ்)

பொற்கதலி புறங்காட்டும் குறங்கால் வேழப்புழைக்கை தடிந்துஞ் சிவனைப் பணிந்து தேய்ந்த
வற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து மணி மருப்பைக் கன தனத்தால் வளைத்து மம்மே
நிற்கடின கோபம் அமராமை கண்டோ நித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம்
பிற்சுருதி யிவளுறுப்போ டுவமை வீறு பெற்றதிது என்னு மிந்தப் பெருமை கண்டோ.

பொருள்: பார்வதித் தாயே! பகவதி என்ற திருநாமம் கொண்டவளே! வலிமைமிக்க சிறந்த யானைகளின் துதிக்கைகளையும், பொன் வாழை மரங்களையும் உன் இரு தொடைகளால் வெற்றி கொண்டவளாய், பரமசிவனை அடிக்கடி பணிந்து வணங்கும் வழக்கத்தால், கடினமாகவும் நன்கு உருண்டு திரண்டும் உள்ள முழங்கால் முட்டிகளால் இந்திரனின் யானையான ஐராவதத்தின் தலையிலுள்ள இரு கும்பங்களையும் வென்றிருக்கிறாய்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், ஜலஸ்தம்பனம் (நீர் மேல் சுலபமாக நடத்தல்) செய்வதற்கான சக்தியுண்டாகும் என்பது நம்பிக்கை.

83. சேனையை அசையாமல் நிறுத்த

பராஜேதும் ருத்ரம் த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட-மக்ருத
யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர-பலா: பாதயுகலீ-
நகாக்ரச்சத்மாந: ஸுர-மகுட-ஸாணைக-நிஸிதா:

கணைக்கால் வர்ணணை (தமிழ்)

உம்பர் தொழுந்தொறும் மகுடச் சாணை தீட்டி ஒளிரும் நகநுனைக் கணையோர் ஐந்தும் ஐந்தும்
செம் பொன்மணிக் கனைக்காலாம் இணைப் பொற்றூணி சேர்த்தன்றோசிவன் பகைவேள் தீருகின்றான்
அம்பொருபத்து அளித்தனை யின்றன்று போல ஐங்கணை தொட்டழியினதுபழுதென்றன்றோ
வம்பமருங் கனதனப் பொற்றிருவே உன்றன் மனவிரகின் செயலொருவர் மதிப்பதன்றே.

பொருள்: அம்பிகையே! பரமேசுவரனை வெல்வதற்கு பஞ்சபாணன் எனப்படும் மன்மதன் அவை போதாதலால், உன் முழங்காலுக்குக் கீழேயுள்ள பாகங்களாகிய இரு அம்பறாத் தூணிகளில் பத்து பாணங்களை நிரப்பி வைத்திருக்கிறான். அந்தப் பாணங்கள் எவையெனில் உன் திருவடிகளிலுள்ள பத்து விரல்களேயாகும். அந்த விரல்களின் நகங்கள் பாணத்தின் இரும்பு முனைகளைப் போல உள்ளன. மேலும் அவை உன்னை வணங்கும் தேவர்களின் கிரீடங்களாகிய சாணைக்கற்களால் நன்கு தீட்டப்பெற்றவையாயும் காணப்படுகின்றன.

ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், யானைப்படை, குதிரைப்படை முதலியவைகளுடன் கூடிய பெரியசேனையை அசையாமல் நிறுத்தும் ஸ்தம்பன வித்யை சித்திக்கும் என்பது நம்பிக்கை.

84. கூடுவிட்டு கூடுபாயும் சக்திபெற

ஸ்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ ஸேகரதயா
மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பஸுபதி-ஜடாஜூட-தடிநீ
யயோர்-லாக்ஷ-லக்ஷ்மீ-ரருண-ஹரிசூடாமணி-ருசி:

பாதார விந்தம்-ஜீவன் முக்தி (தமிழ்)

உளமகிழ் மகிழ்நர் சென்னி உறுநதி விளக்க மாயோன்
கிளர் முடிப்பதும ராகக் கேழொளி செம்பஞ்சு ஏய்க்கும்
முளரி நின் பதங்கள் வேத முடியுறப் பதித்த தவ்வாறு
எளிய என் தலைமேல் வைக்க இரங்கு வதென்று தாயே.

பொருள்: தாயே! உன் திருவடிகளை வேதங்களின் தலைபோன்ற உபநிஷத்துக்கள் தம் தலைகளில் அணிகளாக அணிந்து கொள்கின்றன. அந்தத் திருவடிகளை எளியேனாகிய எனது தலையிலும் வைத்தருள்வாயாக! ஏனெனில் அந்தத் திருவடிகள் சிவபிரானின் ஜடாமகுடத்திலுள்ள கங்கை நீரால் கழுவப்படுகின்றனவன்றோ? அந்தத் திருவடிகளில் பூசப்பட்டுள்ள மருதோன்றியின் சிவந்த ஒளி, விஷ்ணுவின் தலையை அலங்கரிக்கும் மாணிக்கமோ என எண்ணும்படி இருக்கிறது.

ஜபமுறையும் பலனும்
ஒரு வருடம் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், கூடுவிட்டுக் கூடுபாய்தலென்னும் பரகாயப் பிரவேச வித்தை சித்தியாகும் என்பது நம்பிக்கை.

85. பூத, ப்ரேத, பிசாசங்களை அகற்ற

நமோவாகம்-ப்ரூமோ நயந-ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட-ருசி-ரஸாலக்தகவதே
அஸூயத்யத்யந்தம் யதபிஹநநாய ஸ்ப்ருஹயதே
பஸூநா-மீஸாந: ப்ரமதவந-கங்கேலி-தரவே

பாதமலர்கள்-பிசாசு பய நீக்கம்

அரியமென் காவில் நீபுக்கு அசோகினிற் பாத மேற்ற
உரிய நம் பதத்தை ஈதோ உறுமெனப் பொறாது பெம்மான்
எரியுற மரத்தை நோக்கும் இயல்பினைக் கேட்டும் யானுன்
வரிமலர்ப் பாதம் போற்றும் வளமினிது இனிது மாதே.

பொருள்: தாயே! கண்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியவையாயும், பிரகாசம் பொருந்தியவையாயும், ஈரமரு தோன்றியால் பூசப்பட்ட செம்பஞ்சுக் குழம்பின் சிவந்த ஒளி மின்னுவதாயும் உள்ள உன் திருவடிகளுக்கு நமஸ்காரம் செய்கிறோம். இத்தகைய சிறப்பு மிகுந்த உன் திருவடிகளினால் உதைக்கப்பட வேண்டுமென நந்தவனத்தில் உள்ள அசோக மரங்கள் காத்துக் கிடப்பதையறிந்து பசுபதியான பரமசிவன் பொறாமைப்படுகிறார். உயர் ஜாதிப் பெண்கள் தம் கால்களால் அசோக மரத்தை உதைத்தால் அது புஷ்பிக்கும் என்பது மரபு.

ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், பூதம், ப்ரேதம், பிசாசு முதலியவைகளை ஓட்டவும் மாரணம் செய்யவும் சக்தியுண்டாகும் என்பது நம்பிக்கை.

86. பிசாசுகளை ஓட்ட

ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலந-மத வைலக்ஷ்யநமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராதந்த: ஸல்யம் தஹநக்ருத-முந்மூலிதவதா
துலாகோடிக்வாணை; கிலிகிலித-மீஸாந-ரிபுணா

மன்மதன் வெற்றி-பகைவர் தோல்வி

மறு மடந்தையை மொழிய நின்பத மலர் வெகுண்டு அரன் நுதலிலோர்
முறையறைந்திட விழியிலும் பட முது பழம் பகை கருதிவேள்
இறையை வென்றனன் விழியை வென்றனன் என முழங்கிய குரலெனாது
அறை சிலம் பெழும் அரவமென்பதென் அருண மங்கல கமலையே.

பொருள்: பார்வதித் தாயே! உன் திருவடிகளால் உதைபட வேண்டுமென்ற ஆசையால் பரமசிவன், தான் வேறொரு பெண்ணைக் காதலிப்பது போல் நடித்து, அவள் பெயரால் உன்னை அழைத்து, பிறகு உன்னிடம் பயந்தவர்போல் உன்னை வணங்குகிறார். நீ கோபத்தால் அவர் நெற்றிக்கண்ணில் உதைத்தாய். இதைக் கண்ணுற்ற மன்மதன், நெற்றிக் கண்ணால் தன்னை எரித்த வெகுநாளைய கோபத்தை விட்டு, உன் கால் தண்டையின் கிலி கிலி ஒலியால், ஜெயித்தேன், ஜெயித்தேன் என்று வெற்றியொலி எழுப்புகிறான் போலும்!

ஜபமுறையும் பலனும்
21 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எந்தவிதமான பிசாசாக இருந்தாலும் ஓட்டி விடலாம் என்பது நம்பிக்கை. கும்ப ஜலத்தில் ஜபித்து முழுக்காட்டவும்.

87. பாம்பு பயம் நீங்க

ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிமகிரி-நிவாஸைக-சதுரௌ
நிஸாயாம் நித்ராணம் நிஸி சரமபாகே ச விஸதௌ
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரிய-மதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத்பாதௌ ஜநநி ஜயதஸ்-சித்ரமிஹ கிம்

பாதத்தாமரை-பாம்பு வசியம் (தமிழ்)

இம நெடுங்கிரி உலவியுங் கவின் எழும் நிரந்தர மலரு மேல்
அமர் பெருந் திரு அருளும் நின்பத அருண முண்டக மனையதோர்
கமல மென்பது பனியில் வெந்திதழ் கரிய கங்குலின் முகுளமாய்
விமலையன் திரு மனை யெனும் பெயர் விளைவது ஒன்றல முதல்வியே.

பொருள்: அம்பிகையே! தாமரை மலர்கள் பனியில் கருகிவிடக் கூடியவை. ஆனால் உன் திருவடிகளாகிய தாமரை மலர்களோ பனிமலையான இமாசலத்திலேயே காலையிலும் மாலையிலும் சற்றும் சுருங்காமல் மலர்ச்சியுடன் காணப்படுபவை. தாமரை இரவு நேரங்களில் உறங்குபவை போல இதழ்களை மூடக் கொள்பவை. உன் திருவடிகள் இரவிலும், இரவு முடிந்த பின்னரும் கூட எப்போதும் மலர்ந்து காணப்படுகின்றன. தாமரை திருமகளான லக்ஷ்மி வாசம் செய்யும் இருப்பிடம். ஆனால் உன் திருவடிகளாகிய தாமரைகளோ வழிபடும் அடியவர்கட்கெல்லாம் அளவற்ற செல்வத்தை (லக்ஷ்மியையே) அள்ளித் தருபவை. எனவே உன் பாத கமலங்கள் தாமரை மலர்களை வென்று விட்டன என்பதில் என்ன அதிசயம்?

ஜபமுறையும் பலனும்
16 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், பாம்புகளால் ஏற்படும் பயம் நீங்கும் என்பது நம்பிக்கை.

88.  மிருகங்களை ஆகர்ஷிக்க

பதம் தே கீர்த்தீநாம் ப்ரபத மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிந-கமடீ-கர்ப்பர-துலாம்
கதம் வா பாஹுப்யா-முபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா

பாதங்களின் மென்மை-கொடிய மிருகங்களின் வசியம் (தமிழ்)

பஞ்சழுத்தினும் வாடும் நின்பத பங்கயத்தினை ஒப்பெனா
விஞ்சை கற்றவர் வன் புறக்கமடத்தை வீணில் வியப்பராம்
அஞ்சனப் புயல் தங்கை நின்வரர் அம்மி மீதிலும் வைப்பராம்
வஞ்சகக் கொடு நெஞ்சரத்தனை வல்லரல்லர் நினைக்கினே.

பொருள்: தேவியே! உன் திருவடிகளின் நுனி அடியவர்களைக் காப்பதெனும் புகழுக்கு உறைவிடமாயுள்ளது. அடியவர்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்குச் சிறிதும் இடமளிக்காமல் காப்பவை. கருணையின் பிறப்பிடமான மென்மையான இத்தகை உன் திருவடிகளை கவிகள் சிலர் எப்படித்தான் ஆமையின் கடினமான முதுகோட்டிற்குச் சமமானவை என வர்ணித்தார்களோ? அவை சிவபிரான் உன்னைத் திருமணம் புரிந்த நேரத்தில் தன் இனிய கரங்களால் மெதுவாக எடுத்து அம்மிக்கல்லின் மீது வைத்த மெத்தென்ற மெல்லிய பாதங்கள் ஆயிற்றே.

ஜபமுறையும் பலனும்
6 மாதங்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சிம்மம், புலி போன்ற கொடிய மிருகங்களையும் வசமாக்கி அடக்கியாளலாம் என்பது நம்பிக்கை.

89. தீராத வியாதிகள் நீங்க

நகைர்-நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஸஸிபி:
தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலாநி ஸ்வ:ஸ்த்தேப்ய: கிஸலய-கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஸ்ரியமநிஸ-மஹ்நாய தததௌ

கால் நகங்கள்-வியாதிகள் நீங்க

அற்றவர்க்கருள் செய்யும் அம்மை! நின் அற்புதப்பதம் அம்பொன் நாடு
உற்றவர்க்கருள் பொன் தருத்தர ஊடறிந்திலம் என்னவே
முற்று பொற்பர மாதர் கைத்தலம் உண்ட கங்குவி வெண்ணிலா
நற்றிறத் தொடு நாடி நாடி நகைக்க வாளுகி ரென்பரே.

பொருள்: சண்டிகா தேவி என்னும் பெயர் கொண்ட தாயே! தேவலோகத்திலுள்ள கற்பக மரங்கள், தம் தளிர்க்கரங்களால், சொர்க்கவாசிகளான தேவர்களுக்கு அவர்கள் விரும்பும் பலன்களை அளிப்பவை. ஆனால் உன் திருவடிகளோ, ஏழை எளியவர்களுக்கும் கூட, அவர்கள் கோரிய கணத்தில் நிறைந்த செல்வத்தை வாரி வழங்குபவை. உன் கால்களின் நகங்கள் தேவ கன்னிகைகளின் கைகளாகிய தாமரை மலர்களையே மூடிக்கொள்ள செய்யும் சந்திரர்களைப் போன்றவை. எனவே கற்பகத் தருக்கள் தம் கைகளால் கொடுப்பனவற்றை நீ உன் திருவடிகளின் நகங்களாலேயே அளிக்கிறாயே!

ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தீராத வியாதிகளெல்லாம் நீங்கிச் சுகமுண்டாகும் என்பது நம்பிக்கை.

90. பில்லி, சூன்யம், ஏவல் நீங்க

ததாநே தீநேப்ய: ஸ்ரியமநிஸ-மாஸாநுஸத்ருஸீம்
அமந்தம் ஸெளந்தர்ய-ப்ரகர-மகரந்தம் விகிரதி
தவாஸ்மிந் மந்தார-ஸ்தப-ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜந்-மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்

பாதங்கள்-துர்மந்திர சேதனம்

அன்பினர் இரப்பதின் இரட்டியருள் செய்யும்
நின்பத தருத்துணர் நிறைந்தொளிர் வனப்பாம்
இன்பமுறு தேன் முழுகும் என் இதய வண்டின்
தன்புளக மெய்க்களி தழைக்க அருள் தாயே.

பொருள்: தேவி! உன் பாதக்கமலங்கள் எப்போதும் ஏழை, எளியவர்க்கெல்லாம் அவரவர் விருப்பத்திற்கேற்ப அளவற்ற செல்வத்தைத் தந்தருள்பவை. அதிகமான அழகிய மகரந்தத் தேனைப் பெருகியோடச் செய்பவை. கற்பகத் தருவின் பூங்கொத்துப் போலுள்ளவை. இத்தகைய உன் பாதக்கமலங்களில், ஐம்புலன்கள், மனம் ஆகிய ஆறு கால்களுடன் புகுந்து உறையும் வண்டின் தன்மையை என் ஜீவன் அடைவதாக!

ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், பில்லி, சூன்யம், ஏவல் முதலியவைகள் எல்லாம் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

91. தனலாபம், பூமிலாபம் பெற

பதந்யாஸ-க்ரீடா-பரிசய-மிவாரப்து-மநஸ:
ஸ்கலந்தஸ்-தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி
அதஸ்தேஷாம் ஸிக்ஷம் ஸுபகமணி-மஞ்ஜீர-ரணித-
ச்சலா-தாசக்ஷணம் சரணகமலம் சாருசரிதே

நடையழகு-தனலாபம் (தமிழ்)

நாடி உனது அற்புத நடைத் தொழில் படிக்கும்
பேடை மட அன்னமொடு பேத நடைகூறும்
ஆடக மணிப்பரி புரத்து அரவம் அம்மே
ஏடவிழ் மலர்ப்பதம் இரைக்கும் அறைபோலும்.

பொருள்: புண்ணியம் மிகுந்த சரித்திரத்தை உடைய தாயே! உன் புனிதமிக்க அரண்மனைத் தடாகத்திலுள்ள அன்னப் பறவைகள் தத்தித் தத்தி நடந்து உனது நடையழகைப் பயிலும் நோக்கத்துடன் தொடர்ந்து துள்ளிக் குதித்து உன் அழகு நடையைத் தொடர்ந்து பயில்கின்றன. அதற்கேற்ப உன் திருவடிகளில் அணிந்துள்ள ரத்தினக் கற்களால் இழைக்கப் பெற்ற சலங்கைகளின் ஒலியின் மூலமாக அப்பறவைகளுக்கு நடைப் பழக்கத்தைக் கற்றுக் கொடுப்பதைப் போலவே உன் திருவடிக் கமலங்கள் திகழ்கின்றன.

ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால், எதிர்பாராத வகையில் தனலாபமும், பூமி பாலமும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

92. உயர்ந்த பதவிகள் பெற

கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண-ஹரி-ருத்ரேஸ்வர-ப்ருத:
ஸிவ: ஸ்வச்ச-ச்சாயா-கடித-கபட-ப்ரச்சதபட:
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலந-ராகாருணதயா
ஸரீரீ ஸ்ருங்காரோ ரஸ இவ த்ருஸாம் தோக்தி குதுகம்

தேவியின் இருக்கை-ஆளுத்திறமை (தமிழ்)

மூவர் மகேசன் முடிகொளு மஞ்சத்து எழிலாயும்
மேவிய படிகத் தனது ஒளி வெளிசூழ் திரையாயும்
ஒவறு செங்கேழ் விம்பம தின்பத்துரு வாயும்
பாவை நின் அகலா இறையொடு நின்னைப் பணிவாமே.

பொருள்: தாயே! பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன் ஆகிய நால்வரும் வேதத்தின் வடிவமாகிய உன் கட்டிலில் நான்கு கால்களாக நின்று உன்னைச் சேவிக்கிறார்கள். உன் கணவரான சதாசிவனோ, தூய வெண்மையான அங்கவஸ்திரத்தைத் தரித்த கோலத்துடன் உன் மேனியின் சிவந்த ஒளிவெள்ளம் பிரதிபலிப்பதால் தாமும் சிவப்பாகத் தோற்றமளிப்பதைக் கண்டுவிட்டு சிருங்கார ரஸமே உருவெடுத்தவரைப் போல் கண்களுக்கு மகிழ்ச்சி தந்தருள்கிறார்.

ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 4000 தடவை ஜபித்து வந்தால், அலுவலகங்களில் உயர்ந்த பதவி, மந்திரி பதவி போன்ற உயர்ந்த பதவி, மந்திரி பதவி போன்ற உயர்ந்த பதவிகளெல்லாம் கிடைக்கும் என்பது நம்பிககை.

93. எண்ணிய எண்ணங்கள் நிறைவேற

அராலா கேஸேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஸிரீஷாபா சித்தே த்ருஷதுபலஸோபா குசதடே
ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது-ருரஸிஜாரோஹ-விஷயே
ஜகத் த்ராதும் ஸம்போர்-ஜயதி கருணா காசிதருணா

உறுப்புகளின் மேல் உண்டாகிய உள்ளன்பு (தமிழ்)

ஓதி இருள் மூரல்ஒளி உற்ற குழைவாக
மோதும் முலை அற்ப இடை முற்றி முனி தம்பம்
ஆதி பரனின்னருள் திரண்டருண மாகும்
மாது நின் மலர்ப்பதம் மனத்தெழுதி வைத்தேன்.

பொருள்: தாயே! மனதுக்கும் வாக்கிற்கும் எட்டாததும், சிவப்பு வர்ணமுள்ளதுமான பரமசிவனின் கருணாசக்தியே நீ. அந்த சக்தியே சுருட்டை மயிரும், இயற்கையான புன்முறுவலும், காட்டு வாகைப் பூப்போல் மெத்தென்ற மனமும், கல்லுக்குள்ளே இருக்கும் மணிக்கல்லின் காந்தியுள்ள ஸ்தனப்ரதேசமும், மிகவும் இளைத்த இடுப்பும், பருமனான ஸ்தனங்களும், பின்தட்டுகளும் தாங்கிய உருவத்துடன் உலகத்தை ரட்சிக்கின்றாய்.

ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால், எண்ணிய எண்ணங்களெல்லாம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

94. பிறரால் போற்றப்பட

கலங்க: கஸ்தூரீ-ரஜநிகர-பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர்-மரகதகரண்டம் நிபிடிதம்
அதஸ்-த்வத்போகேந ப்ரதிதிந-மிதம் ரிக்தகுஹரம்
விதிர்-பூயோ பூயோ நிபிடயதி நூதம் தவ க்ருதே

தேவியும் தூய மதியும் (தமிழ்)

தூயமதி மரகதச் செப்பு ஒளிர் கலையும் களங்கமும் நேர் சொல்லும் காலைக்
காயுமதி தவள கருப்பூர சகலத்தோடு கத்தூரி போலும்
நீ அருந்த அருந்த அவை குறைதொறு அவ்விரண்டும் அயன் நிறைத்தல் போலும்
தேயுமது வளருமது திங்கள் எளிதோ உனது செல்வமம்மே!

பொருள்: தாயே! மரகத ரத்தினத்தால் செய்யப்பட்ட பாத்திரம் போலுள்ள சந்திர மண்டலத்தில் நீ நீராடுகிறாய். அந்த பாத்திரத்தில் சந்திரனின் மத்தியில் காணப்படும் களங்கமே கஸ்தூரியாகவும், சந்திரனே நிர்மலமான ஜலமாகவும், அவன் கிரணங்களே பச்சைக் கற்பூரப் பொடிகளாகவும் உள்ளன. தினந்தோறும் நீ ஸ்நானம் செய்த பின் காலியாக உள்ள அந்த பாத்திரத்தை மெல்ல மெல்ல பிரம்மதேவன் நிரப்புகிறான்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், மற்றவர்களால் நன்கு புகழப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

95. தீராத ரணங்கள், புண்கள் ஆற

புராராதே-ரந்த:புரமஸி ததஸ-த்வச்சரணயோ:
ஸபர்யா-மர்யாதா தரலகரணாநா-மஸுலபா
ததா ஹ்யேதே நீதா: ஸதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த-ஸ்திதிபி-ரணிமாத்யாபி-ரமரா:

தேவி இல்லம் (தமிழ்)

தேவி உன் இல்லம் சிவனுறை அந்தப்புர மானால்
யாவர் உனைக்கண்டு எய்துவர் இமையோர் முதலானோர்
ஆவல் கொடு எய்த்துன் வாயிலில் அணி மாதிகளாலே
மேவிய சித்திப் பேறொடு மீள்வாரானாரே.

பொருள்: திரிபுரங்களை எரித்த பரமசிவனின் பட்டத்தரசியாய் விளங்கும் பகவதித் தாயே! உன்னுடைய திருவடிக் கமலங்களை நெருங்கி அவற்றுக்கு பூஜை செய்யும் தகுதி, புலன்களை வெல்ல இயலாதவர்களால் அடையக்கூடியதன்று. இதன் காரணமாகத்தான் இந்திரன் முதலான தேவர்கள் கூட அந்தப் பாக்கியம் தமக்குக் கிட்டாததால் உன் வாயிற் படியில் அணிமா முதலிய துவாரபாலகிகளை மட்டுமே வணங்கி அணிமா முதலிய எண்வகைச் சித்திகளை மட்டுமே பெற்றுத் திரும்பி விட்டார்கள்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை ஜபித்து வந்தால், தீராத ரணங்கள், புண்கள் ஆறிவிடும். இதற்கான யந்த்ரத்தைத் தகட்டில் எழுதி, எண்ணெயில் வைத்து ஜபித்து, அந்த எண்ணெயைப் பூசினால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.

96. நல்ல அறிவு பெற

கலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:
ஸ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநா-மசரமே
குசாப்யா-மாஸங்க: குரவக-தரோ-ரப்யஸுலப:

கற்புடைமை (தமிழ்)

கலைமகளும் பொதுமடந்தை கமலையுமற்றவளே
மலைமகள் நீ கற்புடைய வனிதையென பகருங்
குல மறைகள் எதிர்கொடு நின்குரவினையும் அணையா
முலை குழையப் புணர்வது நின் முதல்வரலது இலையால்.

பொருள்: பதிவிரதா சிரோன்மணியாகிய பார்வதித் தாயே! பிரம்மாவின் துணைவியான சரஸ்வதி தேவியைத் தொழுது அவளுடைய அருளை எத்தனையோ கவிஞர்கள் பெறவில்லையா? அதைப்போல ஏதோ ஒரு வகையான செல்வத்தைப் பெற்றுவிட்டு ஒருவன் லட்சுமிபதி என்ற பெயருக்குரியவனாக விளங்கவில்லையா? உன்னுடைய தனங்களின் சேர்க்கையானது, மகாதேவனை மட்டுமேயன்றி உன் அருகிலிருக்கும் மருதோன்றி மரத்திற்குக் கூடக் கிடைப்பதில்லையே! நீயல்லவோ சிறந்த பதிவிரதை!

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், நல்ல அறிவைப் பெறலாம். மற்றும் சித்திரங்கள் தீட்டும் கலைஞர்கள் ஜபித்தால், அக்கலையில் வல்லமையும் புகழும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

97. வாக்கு சித்தி, உடல் நலம் பெற

கிராமாஹுர்-தேவீம் த்ருஹிணக்ருஹிணீ-மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ-மத்ரிதநயாம்
துரீயா காபி த்வம் துரதிகம-நிஸ்ஸீம-மஹிமா
மஹாமாயா விஸ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம-மஹிஷி

வடிவெல்லாம் சக்தி வடிவே (தமிழ்)

வேதியர்கள் அயன் நாவில் விஞ்சை மகளென்றும்
சீதரன்தன் மணிமார்பில் செழுங்கமலை யென்றும்
நாதரிடத்தரிவை யென்றும் நாட்டுவ ரெண்ணடங்கா
ஆதிபரன் மூலபரை யாமளை உன் மயக்கால்.

பொருள்: பரப்பிரம்மத்துடன் இணைந்த பராசக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள், உன்னை நீயே பிரம்மனின் பத்தினியாகிய சரஸ்வதி என்றும், நீயே விஷ்ணுவின் பத்தினியாகிய லக்ஷ்மி என்றும், நீயே சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவாறாகக் கூறுகிறார்கள். நீயோ மனத்திற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்ட மகிமையுள்ள நான்காவது தத்துவம். அளவில்லாமல் சிரமப்பட்டும் அடைய முடியாத மஹாத்மியமுள்ள மஹாமாயையாக நீ இருந்து கொண்டு இவ்வுலகை ஆட்டி வைத்து, பிரமிக்க வைத்துக் கொண்டிருக்கிறாய்.

ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சொன்ன வார்த்தை பலித்தலாகிய வாக்கு சித்தியுண்டாகும். உடல் நலம் பெருகும் என்பது நம்பிக்கை.

98. கர்ப்பம் நிலைத்து குழந்தை செல்வம் பெற

கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண-நிர்ணேஜந-ஜலம்
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா-காரணதயா
கதா தத்தே வாணீ-முககமல-தாம்பூல-ரஸதாம்

செம்பஞ்சுக் குழம்பு-வாக்கு சித்தி

செய்ய பஞ்சு குழம் பெழும் புனல் செல்வி நின்பதம் நல்கவே
துய்ய பங்கய வாணி தம்பல ஊறல் உய்த்த சொல் வாணர்போல்
மையல் நெஞ்சுறும் ஊமருங்கவி வாணராகி மலிந்ததால்
மெய்யடங்கலு மூழ்க முன்கவி வீறு நாவிலடங்குமோ.

பொருள்: தாயே! மருதோன்றிக் குழம்பின் பூச்சுடன் கலந்து வருவதும் உன் திருவடிகளை அலம்பி வருவதுமான தீர்த்தத்தை, வித்தைகள் பலவற்றிலும் சிறந்து விளங்க விரும்பும் நான், எப்பொழுது பருகப் போகிறேன்? கூறியருள்வாயாக. இயல்பாகவே ஊமைகளுக்கும் கூட, கவிதை இயற்றும் ஆற்றலைத் தரவல்லது அந்தத் தீர்த்தம் என்பதால், சரஸ்வதி தேவியின் திருவாயால் மெல்லப்பட்ட தாம்பூலச் சாற்றினையொத்த அந்தத் தீர்த்தத்தை நான் என் வாயில் எப்பொழுது அடையப்போகிறேன்?

ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், கர்ப்பம் தரிக்காத பெண்கள் கர்ப்பம் தரிப்பார்கள். ஸ்த்ரீ சுகம் பெறமுடியாத ஆண்களுக்கு அச்சுகம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

99. ஆரோக்யமும், சகல சுகமும் பெற

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி-ஹரி-ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஸிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித-பஸுபாஸ-வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்-பஜநவாந்

இம்மை மறுமைப் பயன் பெற்றிட (தமிழ்)

சுந்தரி நின் தொண்டர் தமைத் தோய்வதற்கு நாமகளும்
இந்திரையும் மலரயன் மால் இடருழப்ப இரதியின் கண்
அந்தமில் பேரழகொடு கற்பழித்து நெடு நாள் கழியச்
சிந்தையுறு பாசம் போய்ச் சிவமயத்தைச் சேர்குவரால்.

பொருள்: தாயே! உன்னை பூஜிப்பவன் பிரம்மாவும், விஷ்ணுவும் கூடப் பொறாமைப்படக்கூடிய அளவில் நிறைந்த ஞானத்துடனும், செல்வத்துடனும் எல்லையில்லா இன்பத்தை அடைகிறான். மன்மதனைப் போன்ற மேனி எழிலைப் பெற்று ரதிதேவியின் பதிவிரதைத் தன்மையைமும் கலங்கச் செய்கிறான். சம்சார பந்தம் எனும் இகவாழ்வின் கட்டுகளெல்லாம் நீங்கியவனாக பிரசித்தமான பேரானந்தம் எனும் இன்ப ரசத்தைப் பெற்று சிரஞ்சீவியாக வாழ்கிறாள்.

ஜபமுறையும் பலனும்
15 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், உடல் வலியும், சகல சுகமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

100. சகல காரிய சித்தி பெற

ப்ரதீப-ஜ்வாலாபிர்-திவஸகர-நீராஜந விதி:
ஸுதாஸூதேஸ்-சந்த்ரோபல-ஜலலவை-ரர்க்யரசநா
ஸ்வகீயை-ரம்போபி: ஸலிலநிதி-ஸெளஹித்ய கரணம்
த்வதீயாபிர்-வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம்

தேவி அளித்த சக்தியால் தேவியைப் பாடியது (தமிழ்)

ஆதவனுக்கு அவன் கிரணத் தங்கியைக் கொண்டு ஆலாத்தி சுழற்ற லென்கோ
சீதமதிக்கு அவன் நிலவின் ஒழுகு சிலைப்புனல் கொடு உபசரிப்பதென்கோ
மோதியமைக் கடல் வேந்தை அவன் புனலால் முழுக்காட்டும் முறைமை யென்கோ
நீ தரு சொற் கவிகொடுனைப் பாடி உனது அருள் பெறும் என் !

பொருள்: வாக்கிற்கதிபதியான தேவியே! தீவட்டியின் ஜ்வாலையைக் கொண்டே சூரியனுக்கு ஆரத்தி செய்வதைப் போலவும், சந்திரகாந்தக் கல்லிலிருந்து  பெருகும் அமுத கிரணங்களாகிய நீரைக் கொண்டே சந்திரனுக்கு அர்க்யம் தருவது போலவும், சமுத்திர ஜலத்தைக் கொண்டே சமுத்திரத்தை திருப்தி செய்வது போலவும், உன்னுடைய அருளால் உருவான வாக்குகளைக் கொண்டே இந்த ஸ்தோத்திரம் அமைந்துள்ளது. இதை உனக்கு மகிழ்வுடன் அர்ப்பணம் செய்கிறேன்.

ஜபமுறையும் பலனும்
16 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சகல காரியங்களிலும் சித்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar