SS வேணுகோபால சாமி பதிகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> வேணுகோபால சாமி பதிகம்
வேணுகோபால சாமி பதிகம்
வேணுகோபால சாமி பதிகம்

காப்பு வெண்பா

கணபதியூர்க் கோயில் கவின்றடியார் போற்றும்
பணபதிமே னிர்த்தப் பதந்தோய்- குணபதியாம்
வேணுகோ பாலனிசை விள்ளவிரா மானந்தன்
மாணுறுசெம் பொற்பதங்கா வல்.

உற்றாரும் பெற்றாரும் மற்றாரு முலகத்
துன்னையல்லா தில்லையென்னு முளத்துரமீங் களித்தும்
பற்றாரு மேடணைப்பேய் பிடித்தாட்ட நெஞ்சம்
பகைப்பாருள் ளமையவைத்துப் படுத்தன்மா பேயோ
முற்றாருங் கருணையுளாய் பகைத்தமர்செய் திட்ட
மூர்க்கருக்கு மருள்புரிந்த முறைமறைந்தாய் கொல்லோ
சற்றாரு நோக்களிப்பாய் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

விதியனந்த முடலளிக்கக் கொண்டுவினைக் காற்றால்
விண்ணுடன்மண் பாதாளத்தில் வீழ்ந்துசுழன் றவமே
நிதியனந்தஞ் சதியனந்தம் பெற்றுமிகச் செருக்கி
நிலையழிந்தேன் பாலவினை நீக்கியுல கிடந்தாம்
பதியனந்தத் திசைகோயி லெங்கணுஞ்சென் றுனையே
பாடியருட் சித்திவிளை யாடிடுமா றருளச்
ததியனந்த சயனமுளாய் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

அண்டபிண்ட மருவுசரா சர நிறைக ளனைத்து
மளந்தநின்றாண் மலருடனங் கவைகவள மெனவே
யுண்டருளுன் வாய்மலருங் கன்னியமாய் நிற்கு
முரமுடையேன் கொல்லோவென் னுடலியிர்ற் கலந்து
கொண்டமையுன் னருள்விளக்க மென்னகத்துட் காணக்
கூட்டிடுவாய் வைகுந்த நாட்டிடுவாய் சரணம்
தண்டலைதோய் வண்டிசையார் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

துட்டர்களை நிக்கிரகஞ் செய்தலுஞ்சிட் டர்களைச்
சுகமுறப்பா லனஞ்செயலுந்த தொன்மையகா லத்தேற்
பட்டவரு ணீதியதை யின்றிசையுங் கலியாம்
பாதகன்மாற் றிடும்வலிமை படைத்தன்னோ வவனுக்
கிட்டமிசைந் தக்கிரமஞ் செய்தியென வரமீந்
தெமையலைக்கத் திருவுள்ள மிசைந்தனையோ வருண்மெய்ச்
சட்டமிசைத் தாண்டருள்வாய் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

உள்ளுரிமை பெற்றமையுன் னொளிமணிமே னியைக்கண்
டுவந்துருகிக் களிப்புடனின் னோப்பிலருட் புகழ்ச்சீர்
விள்ளுரிமை சற்றளித்தா யுலகிலுயிர்த் திரங்கள்
வினையகன்றன் பகையுமின்ப விளையாட லியற்றக்
கொள்ளுரிமை யருள்விளக்க மீந்தருளச் சிறிதுட்
குறித்தருள்வா யடைக்கலமென் குற்றமு தகலத்
தள்ளுரிமை கொண்டணியார் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

பொய்வழக்கோ ரம்புலகத் துணிந்திடும்பா தகராற்
புழுங்கியபர் வுற்றிடுமென் புந்திமுடி மீதிற்
பைவளருந் துளைவிடப்பற் காளிங்க நாமப்
பணிமுடிமே னடம்புரிதாள் பதித்துலகோ ரறியாத்
தெய்வரக சியங்களெலா முணர்த்தியெனை யாளுஞ்
செவ்வியிதுன் பெருங்கருணைத் திருவுளர்ந் ராதோ
தைவகிமா தவச்சுதனே கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

வாதனையே கொடுத்துலகிற் கெடுத்துமடித் திடவே
மாயைதுணிந் திட்டதருள் வள்ளானீ யென்றுஞ்
சோதனையே புரிந்திடவுட் கருதினையே லெவர்பாற்
சோற்றிடுவேன் கதியென்னப் பற்றிடுவே னின்ப
சாதனையே யன்றிமுதிர் சாத்தியமும் வழங்கித்
தரணியும்வா னமும்போற்றத் தக்கபுக ழிசைத்துத்
கருதியென்னப் பற்றிடுவே னின்ப
தாதனையேன் றருள்சரணங் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

புண்ணிறைந்த யாக்கையரு வருப்பகல மூடும்
புறந்தோல்கண் டுருகிமென் புந்தியைமெஞ் ஞான
விண்ணிறைந்த வியற்கையின்பம் பெருக்கெடுத்தள் ளூறுன்
விரிந்தவருட் பெருஞ்சோதி மேனியைக்கண் டுருகிக்
கண்ணிறைந்த வானந்த நீரின்முழுக் காட்டுங்
கரையில்பெருங் காதலுறக் கடைக்கணித்தான் டருள்வாய்
தண்ணிறைந்த மதிச்சிகரிக் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

வினைத்தடையா லுனையடைய முடியாதே வாடி
வெதும்புகின்றே னாயேனுள் விருப்பமொத்தூன் னுளத்தே
நினைத்தருளி லக்கணத்தே யென்மாயை கன்மம்
நீங்கிடுமே நன்மையெலா மோங்கிடுமே யுலகி
லனைத்துயிர்க்கு மூட்டியுறக் காட்டுமூனக் கடியே
னறினித்தே னன்றுவழக் காற்றினுன் னருட்சீர்
தனைத்துணைகொண் டுவந்தவருள்வாய் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரே.

மழையிசையுந் திருமேனி கொண்டுதிருப் பாதம்
வணங்கடியா ரானபயிர் வகைகளிக பரத்துத்
தழையிசையுந் திடப்புரிவான் கணபதியூர்க் கோயில்
சார்வேணு கோபால சாமியருட் சுடரை
விழையிசைதோய் சிரவைபிரா மானற்த குருதாள்
வேண்டுகந்த சாமியன்பில் விரும்பியணி பதிகம்
குழையிசையுள் என்பதனா லேத்தெடுப்பார் பாலோர்
குறையும்ணு காதுசுக நிறையுநிச மாதோ-தவத்திரு. கந்தசாமி சுவாமிகள்


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar