SS ஏழுமலையில் இறைவன் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> ஏழுமலையில் இறைவன்
ஏழுமலையில் இறைவன்
ஏழுமலையில் இறைவன்

நீலாத்ரி

நீலப்பெருவரையை மேவும் நெடுமாலை,
மூலப்பொருளை, முழுமையினை- கோலத்
துளப மணிமார்பின் தூயோனை, நெஞ்சில்
உளனை ஒருவனையே நம்பு.

அஞ்சனாத்ரி:

மைக்குன்றம் கொண்டானை, மாசு மனத்தகத்தே
பொய்கின்ற வாறு புரிந்தானை - மெய்க்கென்றும்
வித்தாகி நின்றானை வேங்கடத்து மாமணியை
எத்தாலும் நெஞ்சமே ஏத்து.

கருடாத்ரி:

பருந்தின் வரையுடையான் பாவனனெம் நெஞ்சில்
இருந்து நிறைந்த இயல்பில் - பொருந்தியாம்
அற்றேம் மனப்பிணிகள், உற்றேமே இன்பமெலாம்
பெற்றேரும் பெறற்கரிய பேறு.

சேஷாத்ரி:

பார்தாங்கும் பாந்தள் பெருநாகத் துற்றானைச்
சார்வாரைத் துன்பங்கள் சாராவாம் - சீர்பெற்றிம்
மண்ணிலுறை வானோர் போல் வாழ்வாராம் மாநிலத்தீர்
உண்மையிது கேளீர் உவந்து.

வ்ருஷபாத்ரி:

இடபப் பெருமலையில் ஏறியவர்க்கு (உ)ண்டோ
இடரும் பிறவித் தொடரும் - சுடரும்
திருவாழி கைக்கொண்ட தெய்வத்தைப் பற்றீர்
பெருவாழ்வு பெற்றீர் பெரிது.

வேங்கடாத்ரி:

வேங்கடவன் நாமம் விளங்கு திருமலையில்
ஓங்கு புகழ் தேங்கு முயர் பதியி - னூங்கு
திருவும் எழிலுடனும் தெய்வீகமும் சேரும்
ஒருபதியும் உண்டோ உரை.

நாராயணாத்ரி:

நாரணனின் நாமம் நமைக்காத்துப் பொய்யுறவு
தீருமுழி உய்க்கும் திகழ்தருமால் - பாருளீர்
கள்ளச் சகடம் கடிந்தானைப் போற்றுமினோ
உள்ளம் நிலைபேறு (உ)றற்கு.

தசாவதார வந்தனம்:

வேதங்கள் காத்து வியனுலகைத் தாங்கியொரு
பாதகனைக் கொன்றடக்கிப் பாரளந்து - தீதழிய
வில்லும் மழுவும் உழுபடையும் நேமியொடு
தொல்வாள் எடுத்தான் துணை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar