SS சவுந்தரிய லஹரி பகுதி-1 - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> சவுந்தரிய லஹரி பகுதி-1
சவுந்தரிய லஹரி பகுதி-1
சவுந்தரிய லஹரி பகுதி-1

1. எல்லா நன்மைகளும் பெற

ஸிவ: ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி

இன்ப அலைப்பெருக்கு (தமிழ்)

சிவன் எனும் பொருளும் ஆதி சக்தியொடு சேரின் எத்தொழிலும் வல்லதாம்;
இவள் பிரிந்திடின் இயங்குதற்கு அரிதரிது என மறை இரைக்குமால்
நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில், நடத்தி யாவரும் வழுத்து தாள்,
அவனியின் கண், ஒரு தவம் இலார், பணியல் ஆவதோ? பரவல் ஆவதோ?

பொருள்: அன்னையே! பராசக்தியான உன்னுடன் பரமசிவன் சேர்ந்திருந்தால்தான் ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் (ஆக்கல், காத்தல், அழித்தல்) என்னும் முத்தொழில்களையும் செய்ய முடியும். அவ்வாறில்லையேல் அவரால் அசையவும் இயலாது. எனவே ஹரி, ஹரன், பிரம்மன் ஆகியோர் அனைவரும் போற்றித் துதிக்கும் பெருமை பெற்றவளான உன்னைத் துதிக்க முற்பிறவிகளில் புண்ணியம் செய்யாதவனால் எப்படி முடியும்?

ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில் கிழக்கு முகமாக அமர்ந்து இந்த ஸ்லோகத்தை 1000 தரம் தொடர்ந்து ஜபித்தால், தடைகளெல்லாம் நீங்கி, எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். எல்லா நன்மைகளையும் பெறலாம் என்பது நம்பிக்கை.

2. ஜடப்பொருள்களால் தடை நீங்க

தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா-நவிகலம்
வஹத்யேநம் ஸெளரி: கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம்
ஹர: ஸம்ட்சுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந-விதிம் டி

பாத துளியின் சிறப்பு (தமிழ்)

பாத தாமரையின், நுண்துகள், பரம அணுவினில், பல இயற்றினால்,
வேத நான்முகன் விதிக்க, வேறுபடு விரிதலைப் புவனம் அடைய; மால்,
மூது அரா வடிவு எடுத்து, அனந்தமுது கணபணாடவி பரிப்ப; மேல்
நாதனார், பொடிபடுத்து, நீறணியின் நாம் உரைத்தது என்? அவள் பாண்மையே!

பொருள்: தாயே! தாமரை மலர்களைப் போன்று சிவந்த உன் திருவடிகளிலிருந்து எழுந்த மிக நுண்ணிய தூளியை சேர்த்து வைத்துக் கொண்டு பதினான்கு உலகங்களையும் பிரம்மா விசாலமாகப் படைக்கிறார். அதுபோன்றே, மகாவிஷ்ணுவும் ஆதிசேஷன் என்னும் உருவில் பதினான்கு உலகங்களையும் மிகுந்த சிரமத்துடனாவது தாங்குகிறார். பரமசிவனோ, இதை நன்றாகப் பொடி செய்து கொண்டு, விபூதி பூசுவதைப் போன்று உடல் முழுவதும் பூசிக் கொள்கிறார்.

ஜபமுறையும் பலனும்
55 நாட்கள் தினமும் காலையில், வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் ஞானம், செல்வம், புத்ர ஸந்ததி, பதவி, புகழ் முதலிய ஸகல நன்மைகளும் உண்டாகும். ஜடப்பொருள்களால் ஏற்படும் தடைகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

3. வேதப் பொருள் நீங்க

அவித்யாநா-மந்தஸ்திமிர-மிஹிர-த்வீப-நகரீ
ஜடாநாம் சைதந்ய-ஸ்தபக-மகரந்த ஸ்ருதிஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி-குணநிகா ஜந்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய பவதி

பாத துளி - அறிவின்மையை போக்கவல்லது (தமிழ்)

அறிவு இலர்க்கு, இதய திமிரம் ஈரும் அளவு அற்ற ஆதவர், அளப்பு இலா
எறி கதிர் ப்ரபை, குழைத்து இழைத்தனைய தீவி, யாமளை நினைப்பு இலார்.
செறி மதிக்கு, இணரின் ஒழுகு தேன் அருவி தெறு கலிக்கு அருள் மணிக்குழாம்
பிறவி மைக்கடல் விழாது எடுப்பது ஓர் பெரு வராக வெண் மருப்பு அரோ.

பொருள்: அம்பிகையே! உன் திருவடித் துகள் அஞ்ஞானிகளின் உள்ளத்தில் உள்ள இருளைப் போக்கும் கதிரவனின் உதயத் தீவைப் போலும், விவேகமற்ற மூடர்களுக்கு ஞானம் என்னும் கற்பக விருட்சத்திலிருக்கும் பூங்கொத்தின் மகரந்தத்தைப் போலும், ஏழையருக்கு நினைத்ததைத் தரக்கூடிய சிந்தாமணியைப் போலும், பிறவிக்கடலில் மூழ்கித் தத்தளிப்பவர்களுக்கு, வராகமாய்த் தோன்றிப் பூமியைத் தாங்கிய விஷ்ணுவின் கோரைப் பல்லைப் போன்றும் விளங்குகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், வடகிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால் வேதங்களிலும், சகல கலைகளிலும் வல்லமை உண்டாகும். செல்வம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

4. வியாதிகள் நீங்க

த்வதந்ய: பாணிப்ப்யா-மபயவரதோ தைவதகண:
த்வமேகா நைவாஸி ப்ரகடித-வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா ஸமதிகம்
ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுணௌ

பாத கமலங்கள்-யாவையும் அளிக்கும் (தமிழ்)

தேவெனப் புகழ, அதில் நிமிர்ந்து நிகர் செப்புவார் அபய வரதமாம்
பாவகத்து, அபினயத் தொடு உற்ற, கை பரப்பி, என் பயம் ஒறுக்குமே?
யாவருக்கும் அஃது அரிது, நின்பதம் இரப்ப, யாவையும் அளிக்குமால்,
மூவருக்கும் ஒரு தாவரப் பொருள் என, மூலமே தழையும் ஞாலமே!

பொருள்: அம்பிகையே! உன்னைத் தவிர, மற்ற தேவர்களெல்லாம் அபயம், வரதம் என்னும் ஹஸ்த முத்திரைகளைக் காட்டுகிறார்கள். நீ ஒருவள் தான் அந்த அபிநயங்களைச் செய்வதில்லை. ஏனென்றால், உன்னுடைய திருவடிகளே பயத்திலிருந்து காக்கின்றன. அவைகளே, அவரவர் விரும்பியதற்கு அதிகமாகவே வரம் அளித்து விடுகின்றன.

ஜபமுறையும் பலனும்
36 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 3000 தடவை ஜபித்து வந்தால் எல்லா விதமான நோய்களும், மற்ற பயங்களும் நீங்கும். பட்டம், பதவிகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

5. பகை நீங்கி நட்பு வளர

ஹரிஸ்-த்வா-மாராத்த்ய ப்ரணத-ஜந-ஸெளபாக்ய-ஜநநீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி ÷க்ஷப-மநயத்
ஸ்மரோசபி த்வாம் நத்வா ரதி-நயந-லேஹ்யேந வபுஷா
முநீநா-மப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

தேவியின் அருளினின்றி ஒருவருக்கும் வலி இல்லை (தமிழ்)

தொடுகரச் சிலை தொடப் பொறா மலர் கருப்பு நாண், இடுவது ஐந்து கோல்
அடுபடைத் தலைவனார் வசந்தம், அலை தென்றல் தேர், உருவம் அருவம் ஆம்
உடுகு ஒற்ற மதன், ஒருவன் இப்புவனம் முற்றும் வெற்றிகொள், முடிவு இலா
நெடுமலர்க் கண்அருள், சிறிது அளித்தனை கொல் நீலியே! கர கபாலியே.

பொருள்: சகல சௌபாக்கியங்களையும் வணங்குவோருக்கு அருளும் தேவி! உன்னை முன்னொரு சமயத்தில் பூஜை செய்து தான், விஷ்ணு பெண் உருவம் கொண்டு, முப்புரங்களை எரித்த சிவனையும் மோகமுறச் செய்தார். மன்மதனும் உன்னை வணங்கித்தான், ரதி தேவியே கண்டு மயங்கும் அளவிலான எழில் பொங்கும் வடிவத்தைப் பெற்று, மகான்களையும், முனிவர்களையும் தனிமையில் மதிமயக்கம் கொள்ள வைக்கும் அளவில் சக்தியைப் பெறுகிறான் என்பது உறுதி.

ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால் ஆண், பெண்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

6. கணவன் மனைவி பிரச்சனை தீர

தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஸிகா;
வஸந்த: ஸாமந்தோ மலயமரு-தாயோதந-ரத;
ததாப்யேக; ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித-மநங்கோ விஜயதே

பூசித்தவர், அடையப்படாத வரமெல்லாம் அடையலாம் (தமிழ்)

மாயன் வணங்கி உன்மால் வடிவம் கொள வாடும் அரன் துயர் போதாதோ
தூய மதன் தொழ ஆண் வடிவம் புணர் தோகை கண் வண்டு அயில் தேனே போல்
மேய வழங்கும் உரூபது என் சொல மேலிது கண்டவர் வாழ்வாரோ
நீ அதி ரஞ்சகி மோகன வஞ்சகி நீ செய்வது ஒன்றல மாதாவே

பொருள்: பனிமலையான கயிலையங்கிரியை ஆள்பவனின் மகளே! மன்மதனின் வில், மலர்களாலானது. நாண் தேனீக்களால் ஆனது. ஐந்து பாணங்களும், மலர்கள், மந்திரி வஸந்தருது, நீ போர் செய்யப் பூட்டிவரும் தேர், தென்றல் காற்று. அப்படியிருந்தும் உடலில்லாத மன்மதன் தனியாகவே, உன் கடைக்கண் பார்வையால் உன் பூரணமான கிருபையைப் பெற்று உலகனைத்தையும் வெற்றி பெறுகிறான்.

ஜபமுறையும் பலனும்
21 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 500 தடவை ஜபித்து வந்தால், தம்பதிகளிடையே ஒற்றுமை உண்டாகும். ஆண்மையற்றவனுக்கும் ஆண்மையுண்டாகி, புத்திர சந்ததியும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

7. எதிரிகளை வெற்றி கொள்ள

க்வணத் காஞ்சீ-தாமா கரிகலப-கும்ப-ஸ்தந-நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத-ஸரச்சந்த்ர-வதநா
தநுர்-பாணாந் பாஸம் ஸ்ருணி-மபி ததாநா கரதலை:
புரஸ்தா-தாஸ்தாம் ந: புரமதிது-ராஹோ-புருஷிகா

தேவியின் தோற்றம் - பகை களைய (தமிழ்)

மேகலை பொங்க மதாசல கும்பமெ னாமுலை கண்டு இடை சோரா, நீர்
மாகம் வளம் கெழு நாள் நிறை அம்புலி வாள்முகம் அம்புவில் ஏடார் போது
ஏக நெடுங்கழை, பாச மொடு அங்குசம் ஏற் பெற வந்து அருள், காபாலி!
நீ கமலம் திகழ் தாள் வருடு என்று அரன் நீர்மையின் விஞ்சிய கோமாதே!

பொருள்: அம்பிகை, சலங்கைகள் ஒலிக்கும் தங்க ஒட்டியாணத்தை அணிந்தவள்; யானையின் மத்தகத்தைப் போன்ற பெரிய தனங்களைக் கொண்டு சற்று வணங்கிய வடிவுடையவள்; மெலிந்த இடையையுடையவள்; சரத் காலத்தில் தோன்றும் பூர்ணசந்திரன் போன்ற முகம் படைத்தவள். கைகளில் கரும்பு வில், மலர் பாணம், பாசம், அங்குசம் ஆகியவற்றை ஏந்தியிருப்பவள். முப்புரங்களையும் எரித்த ஆச்சர்யமான சிவனுடைய அகம்பாவ வடிவினளுமாவாள். இத்தகைய பராசக்தி எங்களுக்கு முன்னே எழுந்தருளிக் காட்சியளிக்கட்டும்.

ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபம் செய்தால் அரசாங்க காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். பகைவரை வெல்லலாம் என்பது நம்பிக்கை.

8. ஸம்ஸார பந்தம் நீங்க

ஸுதா-ஸிந்தோர்-மத்யே ஸுரவிடபி-வாடீ-பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவநவதி சிந்தாமணி க்ருஹே
ஸிவாகாரே மஞ்சே பரமஸிவ-பர்யங்க-நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த-லஹரீம்

தேவி யோக நித்திரை கொள்ளும் கோலம் (தமிழ்)

ஆர் அமுது இன்கடல் வேலி செழும் தருவாய் மணி பம்பிய தீவு ஊடே
பார கடம்பு அடர் கானில் அருங்கொடை பாய்மணி மண்டப வீடு ஊடே
கோர சிவன் பரமேசன் உன் மஞ்சம், ஓர் கூர் பரி அங்கம் எனா மேலே
சீர் அடரும் பரஞானம் உறும் களி தேவர் அருந்துவர் பூமாதே!

பொருள்: அமுதக் கடலின் மத்தியில் கற்பக விருட்சங்கள் அடர்ந்த தோப்புகள் நிறைந்த ரத்தினத் தீவில் கதம்ப மரங்கள் நிறைந்த வனத்தினிடையே அமைந்துள்ள சிந்தாமணிகள் நிறைந்த அழகிய மாளிகையில், மங்கள வடிவமுள்ள சிம்மாசனத்தின் மீது பரமசிவனின் மடியில் அமர்ந்துள்ள ஞானானந்தக் கடலின் அலை போன்ற உன்னை, புண்ணியவான்களான சிலரே வழிபட்டு வருகிறார்கள்.

ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் சம்ஸார பந்தங்கள் நீங்கும்; சிறைவாச பயம் நீங்கும்; எண்ணியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை.

9. வியாதிகள் நீங்கி உடல்நலம் பெற

மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டாநே ஹ்ருதி மருத-மாகாஸ-முபரி
மநோசபி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே

ஆனந்தமுறும் பொருளை அறிய (தமிழ்)

மூல மண்பூரகத்தோடு இலிங்க மார்பு முதுகளம் வில்புருவ நடு மொழிவது ஆறு
ஞாலமும் மென்புனலும் அனல் பிழம்பும் காலும் நாதமுறு பெருவெளியும் மனமும் ஆக
மேல் அணுகிக் குளபதத்தைப் பின்னிட்டு அப்பால் மென்கமலத்து ஆயிரம்தோட்டு அருணபீடத்து
ஆலவிடம் பருகிய தன் மகிழ் நரோடும் ஆநந்தமுறும் பொருளை அறியலாமே.

பொருள்: அம்பிகையே! மூலாதாரத்தில் பூமி தத்துவத்தையும், மணிபூரகத்தில் நீர் தத்துவத்தையும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னி தத்துவத்தையும், இருதயம் என்னும் அனாஹதத்தில் வாயு தத்துவத்தையும், புருவங்களிடையே ஆக்ஞாவில் உள்ள மனஸ் தத்துவத்தையும், இவ்வாறாக ஸுஷும்னா மார்க்கத்திலுள்ள எல்லாச் சக்கரங்களையும் ஊடுருவிப் பிளந்து சென்று மேலே ஸஹஸ்ராரமாம் ஆயிரம் இதழ்களைக் கொண்ட ரகசியமான இடத்தில் உன் கணவனான பரமசிவனுடன் நீ களிப்புற்றிருக்கிறாய்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்தால், விட்டுப்பிரிந்த பந்துக்கள் வந்து சேருவர். அவர்கள் சென்ற திக்கை நோக்கி ஜபம் செய்ய வேண்டும். பஞ்ச பூதங்களும் சுவாதீனமாகும் என்பது நம்பிக்கை.

10. தியானம் வெற்றி பெற

ஸுதாதாராஸாரைஸ்-சரணயுகலாந்தர்-விகலிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹாஸ:
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப-மத்த்யுஷ்ட-வலயம்
ஸ்வமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி

துஞ்சும் சக்தியைக் காண்பது காட்சி (தமிழ்)

தாள் இணைக் கமலம் ஊறித்தரும் அமிழ்து உடலம் மூழ்க
மீள அப்பதங்கள் யாவும் விட்டு முற் பழைய மூலம்
வாள் அரவு என்ன, ஆகம் வளைத்து, உயர் பணத்தினோடு
நாளும் மைக்கயல் கண் துஞ்சும் ஞான ஆனந்த மின்னே.

பொருள்: தேவியே, உன் திருவடிகளிடையே பெருகும் அமிர்த தாரையின் வெள்ளத்தால் (பாய்ச்சலால்) ஐம்பூதங்களான உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு அமிர்த கிரணங்களைப் பொழியும் சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான மூலாதாரத்தை அடைந்து, பாம்பைப் போல வட்ட வடிவாக உன் உடலைச் சுருக்கிக் கொண்டு தாமரைக் கிழங்கு போன்ற பகுதியில் சிறு துவாரமுள்ள மூலாதார குண்டத்தில் யோக நித்திரை புரிகிறாய்.

ஜபமுறையும் பலனும்
6 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் சரீர சுத்தியுண்டாகும். ஆண்மையற்றவருக்கு ஆண்மையும், மாதவிடாய் சரியாக இல்லாதவர்களுக்குச் சரியாதலும், தாய்ப்பால் இல்லாத குழந்தைகளுக்கு தாõய்ப்பால் கிடைத்தலும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

11. சந்தான(குழந்தை) பாக்கியம் பெற

சதுர்ப்பி: ஸ்ரீகண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: ஸம்போர்-நவபிரபி மூலப்ரக்ருதிபி:
சதுஸ்சத்வாரிம்ஸத்-வஸுதல-கலாஸ்ர-த்ரிவலய-
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா:

தேவி இருக்கும் சக்கரம் (தமிழ்)

சிவகோணம் முன் பகர்வது ஒரு நாலு சத்திநெறி செறி கோணம் அத்தொடு ஒரு மருவுகோள்
நவகோணம் உட்படுவது எழுமூ இரட்டி ஒரு நவில் கோணம் உற்றதுவும் வலயமாய்
இவரா நிரைத்த தளம் இருநாலும் எட்டு இணையும் எழிலாய வட்ட மொடு சதுரமாய்
உவமானம் அற்ற தனி தனி மூவகைக்கணும் என் உமை பாதம் உற்ற சிறு வரைகளே.

பொருள்: நான்கு சிவசக்கரங்களாலும், சிவசக்கரங்களிலிருந்து வேறுபட்ட சக்தி சக்கரங்கள் ஐந்தினாலும் ஒன்பதாய் உள்ளதும், பிரபஞ்சத்தின் மூலகாரணமான தத்துவங்களுடன் கூடியதுமான உன் இருப்பிடமான ஸ்ரீ சக்கரத்தின் கோணங்கள் எட்டுத் தளம், பதினாறு தளம், மூன்று மேகலை வட்டங்கள், மூன்று பிரகாரக் கோடுகள் ஆகியவற்றுடன் கூடி நாற்பத்து நான்கு கோணங்களாக அமைந்துள்ளன.

ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் புத்திர சந்ததி இல்லாதவர்களுக்கு ஸத்புத்ர லாபம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

12. கவிதை உண்டாக

த்வதீயம் ஸெளந்தர்யம் துஹிநகிரிகந்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி-ப்ரப்ருதய:
யதாலோகௌத்ஸுக்யா-தமரலலநா யாந்தி மநஸா
தபோபிர்-துஷ்ப்ராபாமபி கிரிஸ-ஸாயுஜ்யபதவீம்

தேவியின் திருவழகு வியந்தது (தமிழ்)

ஆதி சுந்தரி வடிவினை அயன்முதல் புலவோர்
ஏது கண்டு அளவிடுவது தமை இகழ் இமையோர்
மாதர், இங்கு, இவள் மகிழ்நரோடு உறைகுவம் எனின் ஓர்
பேதை கொங்கைகள் பெறுகுவம் என மறுகுவரால்!

பொருள்: பனிமலையரசனின் புதல்வியே! உன் உடலழகை வர்ணிப்பதற்கு கவிதையில் வல்லவர்களாலும், பிரம்மா போன்றவர்களாலும் கூட இயலாது. அழகுக்கு சரியான உவமை கூற எப்படியெல்லாமோ முயன்று பார்த்தும் அவர்களால் முடியவில்லை. அழகில் சிறந்த தேவர் உலக மகளிரும் பரமசிவனின் கண்களை கொண்டுதான் அதைப் பார்க்க முடியும் என்று நினைத்து அடைதற்கரிதான பரமசிவ ஸாயுஞ்ய பதவியை மானசீகமாய் அடைகிறார்கள்.

ஜபமுறையும் பலனும்
முதலில் ஒரு பாத்திரம் நிறைய ஜலம் எடுத்து, அந்த ஜலத்தில் ஒரு நீள்வட்டத்தில் நாற்கோணம் எழுதி, அதன் நடுவே ஸெள: ஸெள: என்று எழுதி, அந்த ஜலத்தின் முன் 45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து, பின் அந்த ஜலத்தை அருந்தச் செய்தால் ஊமையும் பேசுவான். படித்தவன் பேச்சில் வல்லவனாவான். கவிதையும் புனைவான் என்பது நம்பிக்கை.

13. நல்ல மனைவி அமைய

நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித-மநுதாவந்தி ஸதஸ:
கலத்வேணீபந்தா: குசகலஸ-விஸ்ரஸ்த-ஸிசயா
ஹடாத் த்ருட்யத்-காஞ்ச்யோ விகலித-துகூலா யுவதய:

தேவியின் கருணை வியந்தது (தமிழ்)

அறக்கிழவன் மனிதன் விரகு இல்லாக் கொச்சை அழகு இருந்த ஊரில் இருந்து அறியானேனும்
உறக்கருணை கொழிக்கும், உனது அமுதவாரி ஊடு அணுகின் அவனை, அரமகளிர் எல்லாம்
நறைக்குழலும் சரிந்திட, உத்தரீயம் சோர நாண் அழிய, வளைசிதற, உடுத்த ஆடை
புரத்துவிழ, மயலொடும் பின்தொடர்வர் என்றால் பொற்கொடி, நின்புதுமை எவர் புகழவல்லார்!

பொருள்: அம்பிகையே! உன் கடைக்கண் பார்வையில் விழுந்த ஒருவனை, அவன் முதியவனாகவோ, குரூபியாகவோ, சிற்றின்பக் கேளிக்கைகளில் விருப்பமற்றவனாகவோ இருப்பினும், நூற்றுக்கணக்கான அழகிய இளம் மகளிர் வெட்கத்தை விட்டு ஆசையோடு அவனைப் பின் தொடர்ந்து ஓடிவருவார்கள்.

ஜபமுறையும் பலனும்
6 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தார்மீக முறையில் தாம் விரும்பும் பெண்ணை அடைவதற்கு ஏற்பட்ட தடைகள் நீங்கி அந்த ஸ்த்ரீ லாபம் ஏற்படும். (அதர்ம வழியில் முயற்சித்தால் விபரீத பலன்தான் கிடைக்கும்) என்பது நம்பிக்கை.

14. பில்லி, சூனியம் விலக

க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத்-த்விஸமதிக-பஞ்சாஸ-துதகே
ஹுத்õஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ-தநிலே
திவி த்விஷ் ஷட்த்ரிம்ஸந்-மநஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ்-தேஷா-மப்யுபுரி தவ பாதாம்புஜ-யுகம்

தேவியின் பாதாரவிந்தம் உறையும் இடம் (தமிழ்)

பணை, பார், புனல், கனலி, வளி, வான் மனத்தில் அறு பதில் நால் ஒழித்தது முன் அடைவிலே
இணை நால் ஒழித்தது, இருகதிர் ஏற உற்றது மூ இணை போயது எட்டினோடு கதிர்கள் நால்
அணையா நிரைத்தது உறுகதிர்நால் அடுத்ததன் அளவாய் இலக்கம் அறுவகையினால்
உணரா உரைத்த கதிர்களின் மேல் இருக்குமெனது உமைபாத செக்கர் விரிகமலமே!

பொருள்: தேவியே! பூமி தத்துவமாகிய மூலாதாரத்தில் 56, ஜல தத்துவமாகிய மணிபூரகத்தில் 52, அக்னி தத்துவமாகிய ஸ்வாதிஷ்டானத்தில் 62, வாயு தத்துவமாகிய அநாஹதத்தில் 54, ஆகாச தத்துவமாகிய விசுக்தியில் 72, மனஸ்தத்துவமாகிய ஆக்ஞையில் 64 என கிரணங்கள் உள்ளன. இந்த கிரணங்களுக்கும் மேலாக உள்ள ஸஹஸ்ரார கமலத்தின் மத்தியில் உன் திருவடிகள் விளங்குகின்றன.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் நாட்டிலோ, வீட்டிலோ ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறைகளும், கலவரங்களும் நீங்கி சுபிக்ஷமும் அமைதியும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

15. கவிதைகள் சொந்தமாக இயற்ற

ஸரஜ்-ஜ்யோத்ஸ்நா ஸுத்தாம் ஸஸியுத-ஜடாஜூட-மகுடாம்
வர-த்ராஸ-த்ராண-ஸ்படிக கடிகா-புஸ்தக-கராம்
ஸக்ருந் நத்வா ந த்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது-க்ஷீர-த்ராக்ஷ-மதுரிம-துரீணா: பணிதய:

தேவியின் தோற்றம்-துரகவி பாட அருள் பெற (தமிழ்)

உனது சரற்காலமதி அனைய மெய்யும், உடல் குழைத்த பிறைச் சடையுங் கரங்கள் நான்கும்
அனவரதம் உறும், அபய, வரத, ஞான அருட் பளிங்கு வடமொடு புத்தகமும் ஆக
நினைகிலர், முன்வழுத்திலர் பின் வணங்கார் எங்ஙன் நிறைத்த பசும் தேனும், அடுபாலும், தூய
கனியுமென, மதுரம் விளைந்து ஒழுகு பாடல் கவிதை பொழிவது கயிலைக் கடவுள் வாழ்வே!

பொருள்: அம்பிகையே! சரத்கால நிலவைப் போன்ற நிர்மலமான வடிவுடையவளும், சந்திரனுடன் சடைமுடியும் கிரீடமும் உடையவளும், வரத அபய முத்திரை, ஸ்படிக மாலை, புத்தகம் ஆகியவற்றைக் கரங்களில் ஏந்தியுள்ளவளுமான உன்னை ஒருமுறை வணங்கும் பக்தர்களுக்கு தேன், பால், திராட்சை ஆகியவை கலந்தாற் போன்ற இனிய சொற்கள் ஏன் என் வசமாகி வந்து சேராது?

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து ஜலத்தில் ஒரு வட்டம் வரைந்து, அதன் நடுவே 6 முறை ஸம் என்னும் பீஜாக்ஷரத்தையும் எழுதி, மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்தால் நல்ல கவிதைகள் இயற்றும் வல்லமையும், பரீட்சையில் வெற்றியும் ஏற்படும் என்பது நம்பிக்கை. (ஜப முடிவில் ஜலத்தை அருந்தவும்)

16. கல்வி, ஞானம் பெற

கவீந்த்ராணாம் சேத: கமலவந பாலாதப-ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா-மேவ பவதீம்
விரிஞ்சி-ப்ரேயஸ்யாஸ்-தருணதர-ஸ்ருங்காரலஹரீ
கபீராபிர்-வாக்பிர்-விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ

தேவியின் தோற்றம்-இன்பச்சுவை பெறுங்கவிதை பாட அருள் பெற

வாரின்ப முலை மலை மடந்தை கவி நாவலர் மனக்கமல வனம் அலர நீள்
தேர் இன்ப இளவெயில் தழைக்கும் ப்ரபை செய்ய செவ்வி நிறம் உணரும் உரவோர்
தார் இன்ப நறவு ஒழுகு சுருள் ஓதி இருள் விரவு தவள நிற வாணி கலைதேர்
பேர் இன்ப மதுரவலை எறி அமுத கவிதை கொடு பேர் உலகை மகிழ்விப்பரே.

பொருள்: அம்பிகையே! கவிஞர்களின் உள்ளம் என்னும் தாமரை வனத்திற்கு சிவந்த கிரணங்களைப் பெய்யும் உதயசூரியனைப் போல் பிரகாசிப்பவளும், அதன் காரணமாக அருணா எனப் பெயர் பூண்டவளுமாகிய உன்னைப் பணிந்து தொழும் சான்றோர்க்கு பிரம்மாவின் புத்திரியும், வாக்குக்குத் தெய்வமுமான சரஸ்வதி தேவியின் அருளுடன் சிருங்கார ரசத்தின் வெள்ளத்தைப் போன்ற கம்பீரமான வாக்குவன்மை உண்டாகி சாதுக்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறார்கள்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் வேத வேதாங்க சாஸ்திர ஞானம் ஏற்பட்டு சபைகளில் முதன்மையாக விளங்குவார்கள். பேய், பிசாசு பிடித்தவர்களுக்காக ஜபித்தால் அவை அகன்று ஓடி விடும் என்பது நம்பிக்கை.

17. ஸகல கலைகளிலும் வல்லமையுண்டாக

ஸவித்ரீபிர்-வாசாம் ஸஸிமணி-ஸிலா-பங்க-ருசிபிர்-
வஸிந்யாத்யாபிஸ்-த்வாம் ஸஹ ஜநநி ஸஞ்சிந்தயதி ய:
ஸ கர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர்
வசோபிர்-வாக்தேவீ-வதந-கமலாமோத-மதுரை:

தேவியின் தோற்றம் - காவியம் புனைய (தமிழ்)

இந்து சிலையைப் பிளந்து உள்நிறம் வகுத்து அனைய எழில் வசினி ஆதி மடவார்
அந்த இணை நால்வர் புடைசூழ மலைமங்கை தனது அருண வடிவு உணர அறிவோர்
கொந்து அவிழ விரி தவள மலர் மங்கை முககமல கோல பரிமள கவிதையால்
செந்தமிழின், வடகலையின், முதுமொழிக்காவியத் தெளி பாடல் செய்யும் அவரே.

பொருள்: தாயே! நீ வசினி முதலிய எண்வகைச் சக்திகளுடன் கூடியிருப்பவள். அந்த சக்தி தேவியர் சந்திர காந்தக் கல்லைப் பிளந்தது போல் வெண்மைநிறப் பொலிவை பெற்றவர்கள். இத்தகைய வாக் தேவதைகளுடன் கூடிய உன்னைச் சிந்தித்துத் தொழுபவர் யாராக இருப்பினும், அவர் சரசுவதி தேவியின் தாமரை மலர் போன்ற முகத்தின் நறுமணம் மிக்கதும், பெருங் கவிஞர்களின் காவியப் படைப்புகளைப் போன்றதுமான சொற்சுவை நிரம்பிய காவியங்களைப் படைக்கும் வல்லமை பெற்றவர் ஆவார்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் சகல கலைகளிலும் வல்லமையும், வாக்குச்சாதுர்யமும், சபைகளில் பெருமதிப்பும் உண்டாகும் என்பது நம்பிக்கை,

18. ஸ்த்ரீ வசியம்

தநுச்சாயாபிஸ்-தே தருண-தரணி-ஸ்ரீ ஸரணிபிர்-
திவம் ஸர்வா-முர்வீ-மருணிம-நிமக்நாம் ஸ்மரதி ய:
பவந்த்யஸ்ய த்ரஸ்யத்-வந ஹரிண-ஸாலீந-நயநா:
ஸஹோர்வஸ்யா வஸ்யா: கதிகதி ந கீர்வாண-கணிகா:

தேவியின் தோற்றம் - மகளிர் வசியம் வேண்டுதல் (தமிழ்)

உனது நிறம் எனும் இளைய கதிர் இரவி வெயில் முழுகும் உலகு அடைய என நினைகுவோர்
வினை கெழுமு கொலை மறலி அனைய வழி உருவசிமுன் விரவும் அரமகளிர் விழைவோர்
அனவரதம் எனதமுது பொழி கவியும் உனது அருளும் எனது உடலும் உயிரும் உயிர்சூழ்
மனமும் அதில் உணர்வும் வருகளியும் என நினவுருக மலை அரையன் உதவும் மயிலே!

பொருள்: அம்பிகையே! இளஞ்சூரியனின் அழகினைப் போன்ற உன் உயிர் ஒளியால் பரவும் கிரணங்களால் தேவருலகத்தையும், பூவுலகத்தையும் இளஞ்சிவப்பு வண்ணத்தில் மூழ்கியிருப்பதாய் எண்ணி யார் உன்னைத் தியானம் செய்கிறானோ அவனுக்கு, மருண்ட விழிகளுடன் மிரண்டோடும் மானின் விழிகளைப் பெற்ற ஊர்வசி உள்ளிட்ட தேவமாதர் பலரும் வசமாவர்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் விரும்பிய பெண் வசியமாவாள். சித்திரக் கலைஞன் ஜபிக்க, வல்லவனெனப் புகழ் பெறுவான், செல்வாக்கு உண்டாகும் என்பது நம்பிக்கை.

19. மூவுலகையும் வெல்லும் ஆற்றல்

முகம் பிந்தும் க்ருத்வவா குசயுக-மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மந்மதகலாம்
ஸ ஸத்ய: ஸம்÷க்ஷபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து- ஸ்தநயுகாம்

தேவியின் தோற்றம் - மகளிரை மோகிப்பிக்க வேண்டிய அருள் பெற

ஆதி விந்துவை முகம் என இணை முலை கீழ் இரண்டு அதன் வடிவு என, அருகு தாழ்
கோதறும் சுடர் எழ அழகு ஒழுகுத்ரி கோணம் ஒன்று என உனது எழில் இரதிதோய்
காதலன் கலை தமது இடம் நினைப்பவர் காணும் மங்கையர் கலைகொளல் அரியதோ
ஒதில், இங்கு இரு சுடர் முலை அணைய உலோக மங்கையை மயல் செய்வர் கமலையே!

பொருள்: பரமசிவ பத்தினியே! பிந்துவை உன் முகமாக தியானம் செய்து கொண்டு அதன் கீழே இரு தனங்களையும், அதன் கீழே சிவனின் பாதி வடிவான உன் அருள் சக்தி சொரூபத்தையும் கண்டு உன் க்லீம் என்ற பீஜ மந்திரத்தை எவன் அந்த அங்கங்களில் தியானம் செய்கிறானோ, அவன் உடனே காம சக்திகளை வசமாக்கிக் கொள்ளுதல் எளிதாகும். சூரிய சந்திரர்களையே தனங்களாகக் கொண்ட மூவுலகின் வடிவான மடந்தையையும் மயக்கி விடுவான். இவ்வாறு தியானம் செய்பவன் தேவியின் ஸ்வரூபமாகவே மாறி காம எண்ணங்களை வெல்வான்.

ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தர்மமுறையில் விரும்பிய பெண் வசமாவாள். பேய் அகலும். மிருகங்கள் பணியும். அரசாங்கத்தில் செல்வாக்கு ஏற்படும் என்பது நம்பிக்கை.

20. விஷ பயம் நீங்க

கிரந்தீ-மங்கேப்ப்ய: கிரண-நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர-ஸிலா-மூர்த்திமிவ ய:
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா

தேவியின் தோற்றம்-விஷமும், சுரமும் தீர்த்து அருள் பெற (தமிழ்)

ஆடல் அம்பிகை, இமகர சிலை வடிவு ஆளும் நெஞ்சினுள் வழிவுறு கிரணம் மேல்
ஓடி, எங்கணும் உடல் பெருகு அமிழ்தென ஊடெழும் ப்ரபை தமது இடம் உணர்குவோர்
நாடவும் கொடும் விடம் ஒரு கலுழனை நாடும் வெங்கொலை அரவெனமுறியும் மேல்
மூடு அருஞ்சிரம் விழிபொழி அமுதினின் மூழ்க என்பொடு அழல் உடல் குளிருகே.

பொருள்: தாயே! உன் திருமேனியிலிருந்து கிரண வடிவில் அமிருத ரஸம் வெளிப்படுகிறது. இத்தகைய உன் திருக்கோலத்தை எவன் உள்ளத்தில் நிலைநிறுத்தி தியானம் செய்கிறானோ அவன், பறவைகளின் அரசனான கருடனைப் போல், பாம்புகளின் கர்வத்தை அடக்குவான். அமிர்த நாடியோடு கூடியுள்ள தன் பார்வையாலேயே ஜுரத்தால் வருந்துபவர்களைக் குணப்படுத்துவான். இம்மந்திரப் பாடல் சகலவிதமான விஷங்களையும் போக்குவதால் இதைப் பதினாறு முறைக்குக் குறையாமல் சொல்லி தீர்த்தத்தையோ, விபூதியையோ அளித்து நோயை நீக்கலாம்.

ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தீராதென முடிவுசெய்த விஷ சுரம் நீங்கும். பூரான், செய்யான் முதலிய விஷ ஜந்துக்கள் தீண்டியதால் ஏற்பட்ட வியாதிகள் மற்றும் திருஷ்டி தோஷத்தால் ஏற்படும் தீங்குகளும் நீங்கும் என்பது நம்பிக்கை.

21. பகைமை நீங்கி வெற்றி உண்டாக

தடில்லேகா-தந்வீம் தபந-ஸஸி-வைஸ்வாநர-மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா-மப்யுபரி கமலாநாம் தவ கலாம்
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மல மாயேந மநஸா
மஹாந்த: பஸ்யந்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்

தேவியின் தோற்றம்-சமாதியும், நிட்டையும் உடையோர் தரிசிப்பது (தமிழ்)

ஆன மின் கொடி போலும் என் முண்டகம் ஆறின் மண்டல மூவகையின் கண் ஓர்
பானு அம்புலி தீயின், நிறம் கிளர் பான்மை கொண்டு இதழ் ஆயிர கஞ்சம் நீள்
கானில் உன் களிஞானம் உறும் கலை காழ் மலங்களின் மூவகை பொன்றியே
போன சிந்தையின் மாயை ஒழித்தவர் போதம் இன்புறும் ஆதியோடு அந்தமே.

பொருள்: அன்னையே! ஆறு கமலங்களுக்கு மேலுள்ள ஸஹஸ்ரார கமலத்தில் அமர்ந்ததும், சூரியன், சந்திரன், அக்னி என்னும் உருவில் உள்ளதும், மின்னற்கொடி போன்றதுமான உன் கலையை, காமம் முதலிய அழுக்குகளும், அவித்யை முதலிய மயக்கங்களும் நீங்கப்பெற்ற தூய்மையான மனத்தினால் கண்டு தியானம் செய்யும் மகான்கள், அலையலையாகப் பொங்கியெழும் பேரானந்தத்தை அடைவார்கள்.

ஜபமுறையும் பலனும்
11 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் எல்லோரும் மரியாதை செலுத்துவர். மற்றவர்கள் காரணமில்லாமல் தன் மீது பகைமை பாராட்டுதல் நீங்கும். எந்த விஷயத்திலும் தைரியமும் வெற்றியும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

22. இஹலோக ஸுகம் பெற

பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ-ஸாயுஜ்ய-பதவீம்
முகுந்த-ப்ரஹ்மேந்த்ர-ஸ்புட-மகுட-நீராஜித-பதாம்

தேவி விரைந்து வரம் கொடுத்தல் (தமிழ்)

பேர் உறும் கயிலாசன் மகன் பெறு பேரன் அன்புறு பேரன் எனும் சொலால்
வாரம் அன்பொடு பார்வை வழங்கென வாய் திறந்திட ஓடி வழங்கினாய்
வேரி முண்டகன் மால் மகுடங்களின் வீசரும் ப்ரபை தீபம் உவந்ததாள்
சேரு நன் பெரு வாழ்வும் வழங்குவை தேடரும் சிவமாய மதங்கியே!

பொருள்: பவானி என்ற பெயருடையவளும் பரமசிவனின் பத்தினியுமான தேவியே! உன் அடிமையாகிய என்னை கருணையுடன் கூடிய உன் கடைக்கண்ணால் பார்ப்பாயாக என்று கேட்க நினைக்கும் ஒருவன், பவானி! நீ என்று சொல்லத் தொடங்கி, முடிக்கும் முன்பே, அவனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியோரின் கிரீடங்களால் மங்கள ஆரத்தி செய்யப்பெற்ற திருவடிகளையுடைய உனது மேலான ஸாயுஜ்ய பதவியையே அளித்து விடுகிறாய்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் அரச பதவி, மந்திரி பதவி போன்ற உயர் பதவிகள் ஏற்படும். தேர்வுகளில் வெற்றியுண்டாகும். கோயில் அல்லது நதிக்கரையில் ஜபிக்க வேண்டும். இம்மைப் பயன்களெல்லாம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

23. வியாதி, கடன் தொல்லை நீங்க (ருண, ரோகம் நீங்க)

த்வயா ஹ்ருத்வா வாமம் வபு-ரபரித்ருப்தேந மநஸா
ஸரீரார்த்தம் ஸம்போ-ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத்
யதேதத் த்வத்ரூபம் ஸகல-மருணாபம் த்ரிநயநம்
குசாப்யா-மாநம்ரம் குடில-ஸஸி-சூடால-மகுடம்

சக்தியிடம் சிவாம்சம் அடக்கம் (தமிழ்)

ஆதி சங்கரர் பாதி உடம்பு இனிது ஆளும் அம்பிகை பாதியும் விஞ்சுமோ
நீதி அன்று என, நாயகர் பங்கையும் நீ கவர்ந்தனையால் அவர் எங்குளர்
சோதி செங்கதிர் மேனி நிறைந்தது தூய கண்களும் மூவகை கொங்கையோ
ஈது இரண்டு உடல் கூனும் இளம்பிறை ஏர் பொழிந்தது நீள் முடி எங்குமே.

பொருள்: அம்பிகையே! என் இதயத்தில் குடிகொண்டு பிரகாசிக்கும் உன் வடிவம் முழுவதும் சிவந்த ஒளியுடனும், முக்கண்களுடனும், இரு தனங்களால் சற்று வளைந்தும் பிறைச்சந்திரனைச் சூடிய திருமுடியுடனும் விளங்குவதால், நீ பரமசிவனின் இடது பாகத்தை அபகரித்துக் கொண்டு, மனம் திருப்தியடையாமல் அவருடைய மற்றொரு பாதியையும் அபகரித்துக் கொண்டாயோ என்று சந்தேகம் கொள்கிறேன்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தீராத வியாதிகள், கடன் தொல்லைகள் நீங்கும். பல வழிகளில் பணம், பொருள் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

24. பேய், பூதம் முதலியவை நீங்க

ஜகத்ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வந்-நேதத் ஸ்வமபி வபு-ரீஸஸ்-திரயதி
ஸதா-பூர்வ: ஸர்வம் ததித-மநுக்ருஹ்ணாதி ச ஸிவஸ்
தவாஜ்ஞா-மாலம்ப்ய க்ஷண-சலிதயோர் ப்ரூ-லதிக-யோ:

தேவி புருவத்தினால் ஏவும் ஏவலை வியந்தது (தமிழ்)

ஆதி முண்டகன், மால், சிவன், அண்டர்ம மகேசன், அந்த சதாசிவன், ஐந்து பேர்
மேதகும் தொழில் போல, வனைந்து அருள் வீறும் அங்கு அதன் ஊறலும் உண்டென
யாதும் இன்றியும், மேனியொடு எங்கணும் மாயை தந்ததும் ஞானம் இரங்கு மோர்
நீதியும், திருவே! புருவங் கொடு நீ சொல் இங்கித ஏவலை புரிந்ததே.

பொருள்: பராசக்தி அன்னையே! பிரம்மா இவ்வுலகைப் படைக்கிறார். விஷ்ணு காக்கிறார். ருத்ரன் உரிய காலத்தில் அழிக்கிறார். இவர்களுக்கு மேற்பட்ட மகேசுவரன் இம்மூவரையுமே தம் சொரூபத்தில் மறையுமாறு செய்து தம் உடலையும் மறைத்துக் கொள்கிறார். ஸதா என்ற அடைமொழியை முன்னால் கொண்ட ஸதாசிவன், கொடி போன்ற புருவங்களை நீ சற்று அசைத்தால், அதை ஆதாரமான கட்டளையாய் ஏற்று கொண்டு மறுபடியும் பிரம்மன், விஷ்ணு, ருத்திரன், ஈசுவரன் என்னும் நான்கு தத்துவங்களையும் படைக்கிறான்.

ஜபமுறையும் பலனும்
20 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் பேய், பிசாசு முதலியவைகள் ஓடிவிடும். அடிக்கடி வரும் சிறிய நோய்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.

25. உயர் பதவி கிடைக்க

த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுண-ஜநிதாநாம் தவ ஸிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹந மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந்-முகுலித-கரோத்தம்ஸ-மகுடா:

தேவியின் பாத பூஜை சிறப்பு (தமிழ்)

மூவருக்கு முதற் பிறப்பு நின் முக்குணக் கடல் என்று, முன்
சேவடிக்கண் இருப்பர், சென்னி குவித்த செங்கை பிரிக்கிலார்;
பூ எடுத்து அவர் சென்னி வைத்திடு போதம் உற்றவர், அம்மை! நின்
கா அலர்ப் பொதி தாளில் வைக்கவும் மூவர் சென்னி களிக்குமே.

பொருள்: சிவனின் பத்தினியான அன்னையே! உன் திருவடிகளில் செய்யப்படும் பூஜை ஸத்வம், ரஜஸ், தமஸ் என்னும் உன் முக்குணங்களால் தோன்றிய பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் செய்யும் பூஜையாகும். ஏனென்றால் உன் திருவடித் தாமரைகளைத் தாங்கும் ரத்ன பீடத்தின் அருகில் கிரீடங்களின் மீது கைகளைக்கூப்பிக் கொண்டே நின்று கொண்டிருப்பதால், உன் திருவடிகளைப் பூஜித்தாலே அவர்களையெல்லாம் பூஜித்ததாக ஆகிவிடுமன்றோ!

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் முறைப்படி கிடைக்க வேண்டிய உயர்பதவி கிடைக்கும். அரசியல் செல்வாக்கு உண்டாகும் என்பது நம்பிக்கை.

26. பகைமை நீங்க

த்ரவிரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்
விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதநம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித-த்ருஸா
மஹா-ஸம்ஹாரேசஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதி-ரஸெள

தேவியின் மங்கல நாண் சிறப்பு (தமிழ்)

வேத ரஞ்சகன், மால், புரந்தரன், வேக சண்ட குபேரனோடு
ஆதி எண் திசை பாலர் பொன்றவும் ஆதி அந்த மிலாத தோர்
நாதர், பொன்றிலர், ஏது? உன் மங்கல நாண் உறும் திறம்! ஆதலால்,
நீ தழைந்தது யோகம் அம்பிகை, நீலி என்பது பாவமே!

பொருள்: பதிவிரதையான தாயே! மகாப் பிரளய காலத்தில் பிரம்மா, விஷ்ணு, யமன், குபேரன், இந்திரர்கள் 14 பேர் ஆகிய எல்லோருமே அழிவை அடைகிறார்கள். ஆனால் உனது நாயகனான சதாசிவன் மட்டுமே உன் பதிவிரதா தன்மையால் அந்தப் பிரளய காலத்திலும் அழியாமல் உன்னுடன் இருந்து விளையாடுகிறார். (பிரளய காலத்திலும் கூட சிவனும் சக்தியும் அழிவற்று நிலைத்து நிற்பார்கள்.)

ஜபமுறையும் பலனும்
ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை அன்று (6 அமாவாசை தினங்களில்) தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தம் மீது பகைமை பாராட்டுபவர்கள் பகைமை நீங்கி வசமாவார்கள் என்பது நம்பிக்கை.

27. ஆத்ம ஞானம் உண்டாக

ஜபோ ஜல்ப: ஸில்பம் ஸகலமபி முத்ரா-விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மஸநாத்யாஹுதி-விதி:
ப்ரணாம: ஸம்வேஸ: ஸுகமகில-மாத்மார்ப்பண-த்ருஸா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யந்மே விலஸிதம்

தேவியிடம் தன்னையே அர்பணித்துக் கொள்ளுதல் (தமிழ்)

மொழிவது உன் செப முத்திரை பாணியின் முயல்வது, எங்கு நடப்பன கோயில்
சூழ்தொழில், அருந்துவ முற்றும் உன் ஆகுதி, துயில் வணங்கல், களிப்பன யாவும் நீ,
ஒழிவு அறும் களி, என் செயல் யாவையும் உனது நன்செய் பரிச் செயலாகவே
அழிவு அறும் பதம் வைத்தருள், பேரொளி! அளி விளைந்து களிப்பெழு நாதமே.

பொருள்: அம்பிகையே! எல்லாமே உனக்கு அர்ப்பணம் என்று ஆத்ம சமர்ப்பண பாவனையுடன் நான் பேசும் வெற்றுப் பேச்சு ஜபமாகவும், என் உடல் அசைவுகள் உன் முத்திரைகளின் விளக்கமாகவும், நடையெல்லாம் உனக்குச் செய்யும் பிரதட்சிணமாகவும், நான் புசிப்பதெல்லாம் உனக்குச் செய்யும் ஹோமமாகவும், நான் படுப்பது உனக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், இம்மாதிரி என் சுகத்திற்காக நான் செய்யும் மற்ற செயல்களும் உனக்குச் செய்யும் பூஜையாக நிறைவேறட்டும்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தன்னிலை அறிதலாகிய ஆத்ம ஞானம் உண்டாகிப் பேரின்ப வழி திறக்கும் என்பது நம்பிக்கை.

28. மரண பயம் நீங்க

ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜராம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி-ஸதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா
ந ஸம்போஸ் தந் மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா

தேவியின் தோடுகளின் சிறப்பு (தமிழ்)

பிரமன், இந்திரன், முன்பிற தேவர்கள், ஊண் எல்லாம்,
நரை பெருந்திரை அற்றநல் ஆரமுதே கொலாம்,
ஒருவர் தங்கிலர்! நின் சிவன் ஊண்விடம் வாழ்வன்! மாது!
இரு பெருங்கழைஇட்ட பொன்னோலையின் வாசியே!

பொருள்: தாயே! பயங்கரமான மூப்பு, மரணம் ஆகியவற்றை போக்கக்கூடிய அமிர்தத்தைப் பருகியும் பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களெல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விடுகிறார்கள். ஆனால் மிகக் கொடிய நஞ்சைப் பருகியும் சிவன் அழியாதிருக்கிறார். அவருக்கு மட்டும் காலத்தின் முடிவு இல்லையென்றாலும் அதற்குக் காரணம் உன் செவிகளில் அணிந்திருக்கும் தாடங்கம் என்னும் காதணியின் மகிமைதான்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் தாம் தொடங்கிய எல்லாக் காரியங்களிலும் வெற்றியுண்டாகும். விஷ வ்யாதி பயங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

29. முரட்டுத்தனம் நீங்க

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே

தேவிக்கு ஏவல் செய்வோர் சொல்லும் மங்கல மொழி (தமிழ்)

முது மறை சொல் இளவனிதை, அயனோடு, அரி, குலிசன் உனை முறை பணியும் நெறியின் இடையே
பதறி, உனது அருகு வரும் அரனை, எதிர் கொள உனது பரிசனம், உன் அடிவளமையால்,
இதுபிரமன்மகுடம், அரிமகுடம்இது, குலிசன்முடி இது கடினம், இடறும் இருதாள்
கதி அமர அமர வழி விலகி வரவர, எமது கடவுள் எனும் மொழி தழைகவே!

பொருள்: தாயே! உன்னை பிரம்மா, விஷ்ணு, இந்திரன் ஆகியோர் நாள்தோறும் வணங்க வரும்போது எதிரிலுள்ள பிரம்மாவின் கிரீடத்தை விட்டு விலகி வாருங்கள். விஷ்ணுவின் கிரீடத்தில் தவறிப் போய் இடறிக் கொள்ளாதீர்கள். இந்திரனின் கிரீடத்தை ஒதுக்கிவிட்டு வாருங்கள் என்றெல்லாம் உன்னுடைய பணிப்பெண்கள் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, உன் மாளிகைக்கு பரமசிவன் வருவதையறிந்து நீ எழுந்து சென்று எதிர்கொண்டு வரவேற்பது சிறப்பாயுள்ளது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் வீட்டில் பிள்ளை, பெண் முதலியவர்களின் முரட்டுத்தனம் நீங்கும். வீட்டில் பிரசவம் ஆக வேண்டியவர்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

30. அஷ்ட சித்தி பெற

ஸ்வதேஹோத்பூதாபிர்-க்ருணிபி-ரணிமாத்யாபி-ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா-மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந-ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்த்தாக்நிர்-விரசயதி நீராஜந-விதிம்

தேவியின் மேனியை தன் மேனியாக சிந்தித்தல் (தமிழ்)

அம்மே நின் மெய்ப் பிரிவாம் அணிமாதி தொழும் அழியா
இம்மேனி தம்மேனி எனத் தெளிந்து பாவிப்பார்
செம்மேனி அரன் வாழ்வுஞ் சிதைவது எனப் புறக்கணித்து
வெம்மேனி ஊழி அனல் தீபமிட விளங்குவார்.

பொருள்: ஆதியும் அந்தமும் இல்லாத நிலையான பரம்பொருளான தாயே! உன் உடலிலிருந்து தோன்றிய அணிமா முதலிய எண்வகைச் சித்திகளாகிய தேவதைகளால் சூழப்பெற்றவளே! எவன், உன்னைத் தன் ஆத்மா என்றெண்ணி எப்போதும் சிந்திக்கிறானோ அவனுக்கு சிவசாயுஜ்யமெனும் செல்வத்தைக் கூடப் பெரிதாகக் கருதாத அவனுக்கு, பிரளய காலத்தில் எழும் ஊழித் தீ கூட, மங்கள ஆரத்தி செய்யும் என்பதில் என்ன வியப்பு?

ஜபமுறையும் பலனும்
96 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் அணிமாதி அஷ்ட சித்திகள் உண்டாகும். எந்தக் காரியத்தைத் தொடங்குவதிலும் அதைரியம் நீங்கி தைரியம் உண்டாகும். கூடுவிட்டுக் கூடுபாய்தலென்னும் பரகாய ப்ரவேச சக்தியும் சித்திக்கும் என்பது நம்பிக்கை.

31. தேவியின் உபாசனை பெற

சது:ஷஷ்ட்யா தந்த்ரைஸ் ஸகல-மதி ஸந்தாய புவநம்
ஸ்தி தஸ்-தத்தத் ஸித்தி-ப்ரஸவ-பரதந்த்ரை: பசுபதி:
புநஸ்-த்வந்நிர் பந்தா-தகில-புருஷார்த்தைக-கடநா-
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல-மவாதீதர-திதம்

தேவியினுடைய வித்தை வந்தவாறு (தமிழ்)

பசுபதி தன் நீதி கொண்டு, அறுபத்துநாலு பல கலை ஞானமும், கருணையால்
வசிவுஅற நெடும்புவனம் மாயையின் மயக்கி, அதன் வழிவரும் பெரும்பயன் எலாம்,
இசை பெற விளைத்ததுவும், பின்னும் உனது ஏவலால், இணையில் உனது ஆகமம் எலாம்,
விசைபெற விளைத்து, எவையும் இது தர அளித்தும் விமலை! உனது உரிமை அலவோ!

பொருள்: பராசக்தி தாயே! பரமசிவன் இவ்வுலகில் அவரவர் விரும்பும் சித்திகளை மட்டும் அளிக்கும் 64 சாஸ்திரங்களால் திருப்தியடையச் செய்துவிட்டு பேசாதிருந்துவிட்டார். ஆனால் பின்னர் உன்னுடைய நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த 64 சாஸ்திரங்களின் வாயிலாகவும் அடையக்கூடிய பிறவிப் பயன்களையெல்லாம் ஒருங்கே கிடைக்கச் செய்யக்கூடிய ஆற்றல் வாய்ந்த முக்கியமான பஞ்சதசீ என்னும் உன்னுடைய உபாசனா முறையே இப்பூவுலகில் வெளியிட்டார்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் ராஜ வசியமும், பொன், பொருள், மனைவி, மக்கள், வீடு, வாகனம் போன்ற சகல விதமான செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

32. சுவர்ணாபரணங்கள் பெற

ஸிவ: ஸக்தி: காம: க்ஷித-ரத ரவி: ஸீதகிரண:
ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ்-ததநு ச பரா-மார ஹரய:
அமீ ஹ்ருல்லேகாபிஸ்-திஸ்ருபி-ரவஸாநேஷு கடிதா
பஜந்தே வாணாஸ்தே தவ ஜநநி நாமாவயவதாம்

தேவியின் மூலமந்திரம் (தமிழ்)

அரியதாகும் சிவம், சக்தி, மதன், அவனி, பின்பு ஆதித்தன், மதி, மதன வேள்,
பெருகுவான், இந்திரன், பின்புபரை, மதனன், மால் பேசின் முக்கண்டம் அடைவே
உரியதாம் அந்தத்தின் மாயை மும்முறை அமைத்து உறு மெழுத் தடைய உணர்வால்
தெரியின், நாமத்தினொடும் உனது உறுப்பாம் என்று செப்பும், நான் மறைகள், உமையே!

பொருள்: அம்பிகையே! சிவ பீஜாக்ஷரமான க; சக்தி பீஜாக்ஷரமான ஏ; காம பீஜாக்ஷரமான ஈ; பிருதிவி பீஜாக்ஷரமான ல ; சூரிய பீஜாக்ஷரமான ஹ; சந்திர பீஜாக்ஷரமான ஸ; மன்மத பீஜாக்ஷரமான க ; ஆகாச பீஜாக்ஷரமான ஹ; இந்திரனின் பீஜாக்ஷரமான ல ; பரா பீஜமாகிய ஸ; மன்மத பீஜமாகிய க ; ஹரி பீஜமாகிய ஸ ஆகிய இந்த உன்னுடைய அட்சரங்கள் புவனேசுவரி பீஜமான ஹ்ரீங்காரங்கள் மூன்றுடன் சேர்ந்து 15 அட்சரங்களும் மகாமந்திரத்தின் பகுதிகள் ஆகின்றன.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் செப்பைத் தங்கமாக மாற்றும் சக்தி ஏற்படும். மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததற்கு மேலாக அதிக லாபம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

33. செல்வம் செழிக்க

ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரிதயமித-மாதௌ தவ மநோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண-நிபத்தாக்ஷ-வலயா:
ஸிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத-தாராஹுதி-ஸதை:

எல்லா நலங்களையும் தரும் மந்திரம்

மோக போக விழைவினார், உன் மூல வித்தை தன்னின் முன்னாக,
மாரன், யோனி, பொன், அணங்கு, அமைத்து நெய்யினால்
யோகம் ஆர் சிவத்தழற்குள், ஓமம் உற்று, விமலையே
தியாக மா மணிக் கொடு, அக்க வலயம் உள் செவிப்பரே.

பொருள்: ஹே தேவியே! உன் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதலில் காம பீஜமான க்லீம், புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம், லக்ஷ்மி பீஜமான ஸ்ரீம் ஆகிய மூன்று அக்ஷரங்களையும் சேர்த்து இடைவிடாமல் ஜபித்து அதன் மகிமையை உணர்ந்த சிலர், தொடர்ந்து ஜபம் செய்து, சக்தி முக்கோணத்திலுள்ள அக்னியில் (சிவாக்னி) காமதேனு தந்த நெய்யைப் போன்ற மனமகிழ்ச்சியைக் கொண்டு எண்ணற்ற அர்ப்பணங்களைச் செய்து ஆராதித்து வருகிறார்கள்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் செல்வம் மேன்மேலும் வளரும். மற்றும் இந்த சுலோகத்தைப் பாராயணம் செய்யும் போது, தம் கையில் மூடி வைத்துக் கொள்ளும் பணத்தைப் போல் பத்துமடங்கு பணம் அதிகமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

34. சந்தேகம் நீங்க

ஸரீரம் த்வம் ஸம்போ: ஸஸி-மிஹிர-வ÷க்ஷருஹ-யுகம்
தவாத்மாநம் மந்யே பகவதி நவாத்மாந-மநகம்
அத: ஸேஷ: ஸேஷீத்யய-முபய-ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பராநந்த-பரயோ:

சக்தி வடிவும் சிவன் வடிவும் ஒன்று (தமிழ்)

இருசுடர் முலைத்துணைச் சிவன் வடிவு நீ, அதனை யானும்  நவமாக நினைவேன்
உருவு நிறை தன்னில் அளவு ஒத்த பரமானந்தம் உடைய பரனோடு, பரையுமாய்,
மருவும் இனிதாம், உங்கள் கூட்டம், அது சேடமும் கொல்? மறுத்து அதனை,
உடையதுவுமாய், அருகில், இருவர்க்கும் ஒரு பொதுவாகி, நிற்கும் அழிவு அற்ற ஞான முதலே.

பொருள்: பராசக்தி! சூரிய, சந்திரர்களைத் தனங்களாக உடைய நீ பரமசிவனுக்கு உடல் என்றும், காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன் ஆகிய ஒன்பது வியூகங்களின் சொரூபியான சிவனை உன்னுடைய உடல் என்றும் மனக்கண்ணால் என்னால் காண முடிகிறது. ஆகையால் உடைமை, உடையவர் என்னும் இந்த உறவு சமரசப்பட்ட ஆனந்த பைரவர், ஆனந்த பைரவி என்ற உங்களில் இருவருக்கும் சமமாகவே தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் எல்லாவிதமான சந்தேகங்களும் நீங்கும். மற்றும் ஜலோதரம், தீராச்சளி, சீதள ஜ்வரம் போன்ற சகல ஜலரோகங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

35. இதயநோய் நீங்க

ஸ்மமநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி
த்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி-பாவேந பிப்ருஷே

ஆறு சக்கரங்களிலும் வியாபிக்கும் தேவி (தமிழ்)

மனமும் நீ, வெளியும் நீ, வளியும் நீ, கனலும் நீ, மறிபுனலும் நீ, புவியும் நீ
நினையில் நீ பரம் அறவளர்ந்து ஒளிபரந்து விடில் நீ அன்றி ஒன்றும் உளதோ?
உனது, மா ஞான ஆனந்த உருவைப், புவன உரு என வகுத்து அருளவோ?
அனையுமாய், மகவும் ஆமாறு போல் நீ சக்தி அருண வடிவு ஆயது உமையே!

பொருள்: அம்பிகையே! நீயே ஆக்ஞா சக்கரத்தில் மனமாக விளங்குகிறாய். விசுத்தி சக்கரத்தில் ஆகாசமாக விளங்குகிறாய். அநாஹதத்தில் வாயுவாக இருக்கிறாய். ஸ்வாதிஷ்டானத்தில் அக்கினியாக இருக்கிறாய். ஜல தத்துவமும் பிருதிவி தத்துவமும் ஆன நீயே பிரபஞ்சமாகவும் வடிவெடுக்கும் போது உன்னைத் தவிர வேறுபொருள் இல்லை. இவ்வாறாக நீ வடிவெடுப்பதற்காக சிவபிரானின் பத்தினி என்ற நிலையை ஏற்றுக் கொள்கிறாய்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் மார்பு நோய் நீங்கும். கடுக்காயில் ஜபம் செய்து, அதை நீரில் உறைத்துச் சாப்பிடச் செய்யவும் என்பது நம்பிக்கை.

36. சகல நோய்களும் நீங்க

தவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸஸி-கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித-பார்ஸ்வம் பரசிதா
யமாராத்த்யந் பக்த்யா ரவி-ஸஸி-ஸுசீநா-மவிஷயே
நிராலோகேசலோகே நிவஸதி ஹி பாலோக-புவநே

ஆக்கினைச் சக்கரத்தில் காட்சி (தமிழ்)

அருளும்உனது ஆக்கினைத் திகிரிக்குள் உட்பட்டு, அருக்கன், மதி, அனைய வடிவாய்ப்
பருவமுதிர் பர சின்மயத்தோடு உறு பான்மையாம் பரமசிவனைப் பணிகுவாம்,
ஒரு பொழுதில் இப்பரமசிவனை, எழுகதிர் மதிய ஒளி கடந்து, ஒளிரும், ஒருபால்
பெருகு பரமானந்த விழைவு ஒளி, நினைப்பது கொல்? பெறுமுத்தி, சக்தி ஒளியே!

பொருள்: அம்பிகை தாயே! உன் ஆக்ஞா சக்கரத்தில் இருப்பவரும், கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசத்தை கொண்டவரும், ஸகுண, நிர்க்குண சக்திகளை இரு பக்கமும் அணைக்கப் பெற்றவருமான பரமசிவனை வணங்குகிறேன். அப்படி பரமசிவனை பக்தியுடன் வணங்கும் ஒருவன் சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய மூவரின் ஒளியும் பரவாத பரஞ்சோதி வடிவமான உன்னுடைய ஸாயுஜ்ய பதவியைப் பெற்று மகிழ்வான்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் சாதாரண நோய்களும், தீராத நோய்களும் தீரும். பிரம்மராக்ஷஸ் பிடித்தவர்களை அது விட்டு ஓடி விடும் என்பது நம்பிக்கை. சுலோகத்தை ஜலத்தில் எழுதச் செய்து ஸ்நானம் செய்விக்கவும்.

37. பிசாசு பீடை நீங்க

விஸுத்தௌ தே ஸுத்தஸ்படிக-விஸதம் வ்யோம-ஜநகம்
ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமாந-வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: ஸஸிகிரண-ஸாரூப்ய-ஸரணே:
விதூதாந்தர்-த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ

விசுத்தி சக்கரத்தில் காட்சி (தமிழ்)

இறைவி! நின் விசுத்தித் தலத்திடை பளிங்கு நிற எழிலொடு, உலகருள் தந்தையாய்,
உறையுமொரு சிவனையும், அவன் போலும் ஆரம்பம் உடைய உனையும் பணிகுவாம்,
நிறை மதி ஒளிக்கு ஒத்த, நெறி ஏகும், உமது ஒளியின் நிலவுண்டு, பசி களைவது ஓர்
முறை பெறு சகோதரம் என, உலகு பாதக இருள் முடித்துக் களித்து உறையுமே.

பொருள்: தாயே! உன்னுடைய விசுத்தி சக்கரத்தில் தெளிவான பளிங்கைப் போன்ற வடிவினரும், ஆகாச தத்துவத்தைத் தோற்றுவிப்பவருமான சிவனையும் அதே போன்ற நிலையினளான உன்னையும் வணங்குகிறேன். சந்திரனின் சந்திரகிரணத்தைப் போல வெளிவரும் உங்கள் இருவரின் ஒளியினால் உலகம் முழுவதும் அஞ்ஞானமென்னும் அகவிருள் நீக்கப் பெற்று, நிலவில் களிக்கும் சகோரப்பக்ஷி போல் விளங்குகிறது. (இருள் நீங்கினால் சகோரங்கள் கண் தெரிந்து ஒன்றோடொன்று சேருமென்பது கவிமரபு.)

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 5000 தடவை ஜபித்து வந்தால் பேய், பிசாசு, பூதம், பிரும்ம ராக்ஷஸ் போன்றவை நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

38. குழந்தைகள் நோய் நீங்க

ஸமுந்மீலத்-ஸம்வித்-கமல-மகரந்தைக-ரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்
யதாலாபா-தஷ்டாதஸ-குணித வித்யாபரிணதி;
யதாதத்தே தோஷாத் குணமகில-மத்ப்ய: பய இவ

அனாகத சக்கரத்தில் தோற்றம் (தமிழ்)

முன்னைத் தபோதனர் தம் இதயமான தவாவி முது ஞான முளரி நறவு ஆர்ந்து,
அன்னத்தின் வடமொழி பெயர் பெற்று, மொழி பயிலும் அறு மூன்று விஞ்சை விரிவால்,
பன்னப் பொதிந்த, தீவினை நீரில், நற்குணப்பால் பிரித்து உண்டு, களியா,
மன்னப் படுஞ்சிறைப் புள் இணையை, நாடொறும் வழுத்ததும், மலர்க்கமலையே!

பொருள்: பராசக்தியே! நான் இரண்டு அன்னப்பறவைகளை வணங்குகிறேன். அவை நன்றாக மலர்ந்த ஞானம் என்னும் தாமரையிலிருந்து ஆனந்தம் என்னும் இனிய தேனைப் பருகுபவை. மகான்களின் மனம் என்னும் தடாகத்தில் நீந்துபவை. அவை பேசிக் கொள்ளும் இன்பப் பேச்சிலிருந்தே பதினெட்டுக் கலைகளும் தோன்றுகின்றன. அன்னங்கள் நீரையும் பாலையும் பிரித்து விடுவதைப் போல, இவை குற்றங்களையும் குணங்களையும் பிரிக்கின்றன. (இங்கு சிவனும் சக்தியுமே அன்னப்பறவைகள் எனக் குறிப்பிடப்படுவன.)

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 5000 தடவை ஜபித்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் பாலாரிஷ்டம் என்பது நீங்கி சுகமாகும் என்பது நம்பிக்கை.

39. கெட்ட கனவுகள் வராமல் இருக்க

தவ ஸ்வாதிஷ்ட்டாநே ஹுதவஹ-மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாஞ்ச ஸமயாம்
யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: ஸிஸிர முபசாரம் ரசயதி

சுவாதிட்டானத்தில் காட்சி (தமிழ்)

நிலை பெறு சுவாதிட்டான நின் சிவ அனலும், நீயும்,
இலகிய தன்மை நெஞ்சத்து இறைஞ்சுவம், உரைக்கமாட்டோம்;
உலகம் அப்பார்வை செந்தீக்கு உருகில், நின் கருணை பொங்கி
அலை எறி அமுதப் பார்வை அளித்து, இனிது அருளும் அம்மே!

பொருள்: அம்பிகையே! உன் ஸ்வாதிஷ்டான சக்கரத்தில் அக்னி தத்துவத்தைச் சிந்தித்து அதில் எப்பொழுதும் ஒளிர்கின்ற பிரளய கால அக்னி வடிவினரான ருத்ரனையும், மஹத் என்னும் மகிமை வாய்ந்தவளான பராசக்தியையும் போற்றித் துதிக்கின்றேன். அந்தப் பரமசிவனின் பார்வையாகிய அக்னி உலகங்களையெல்லாம் எரிக்கும்போது குளிர்ச்சி மிகுந்த கருணை பொழியும் உன் திருவிழிப் பார்வைதானே குளிர்வித்துக் காக்கிறது!

ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை ஜபித்து வந்தால் பயத்தை உண்டாக்கும் கெட்ட கனவுகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

40. வருங்காலம் உணர

தடித்வந்தம் ஸக்த்யா திமிர-பரிபந்த்தி-ஸ்புரணயா
ஸ்புரந்-நாநாரத்நாபரண-பரிணத்தேந்த்ர-தனுஷம்
தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக-ஸரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர-தப்தம் த்ரிபுவநம்

மணிபூரக சக்கரத்தில் தரிசனம் (தமிழ்)

விரித்த இருள் விழுங்கும் சக்தி மின்னொடும் பன் மணி இந்திர வில்லினோடும்,
தரித்தமறை பரவு சிவ தபனகதிர் எறிப்ப, அதில் தழன்று, தீயில்
பிரித்து உலகம் குளிர, ஒளி தழைத்து ஒளிரப், பொழி அமுத தாரை மாரி
பரித்த மணி பூரகத்துள், பச்சை முகில் பணிவன், அருள் பழுத்த கொம்பே!

பொருள்: ஹே பகவதி, நீலமேக ரூபமான உனது ஸதாசிவ தத்வத்தை நான் வணங்குகிறேன். அந்த மேகம் மணிபூரகமென்னும் சக்கரத்தையே இருப்பிடமாகக் கொண்டது; அங்குள்ள இருளையகற்றும் சக்தியாகிய மின்னல்களை உடையது; பல்வேறு வர்ணமுள்ள ரத்தின ஆபரணங்களின் ஒளியாகிய வானவில்லுடன் கூடியதும்; கறுத்ததும் காலாக்னி ருத்ரனால் பிரளய காலத்தில் எரிக்கப்பட்ட மூவுலகையும் அமிர்தமாகிய மழையைப் பொழிந்து குளிரச் செய்வதுமாகிய உன் சதாசிவ தத்துவத்தை வணங்குகிறேன்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், வருங்காலத்தை அறியலாம். தாம் விரும்பிய பொருளை அடையும் வகையைக் கனவில் காணலாம் என்பது நம்பிக்கை.

41. வயிற்று வலி நீங்க

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மாநம் மந்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம்
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி-முத்திஸ்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்

மூலாதார சக்கரத்தில் தாண்டவம் (தமிழ்)

நீ நந்து மூல ஆதாரத்தில், ஆனந்த நிர்த்தமிடும் இறைவி! நின்னோடு
ஆனந்தத் தாண்டவம் விளைத்து, நவ வடிவுபெறும் ஆதி சிவனைப் பரவுவாம்;
வானம் தொடுத்து, உலகம் அடையப்படைத்து இடும், இவ்வகையின் புணர்ச்சி அலவோ?
ஞானங்கொள், அனை, தந்தை, என, உலகு தெளிவுற நடத்துவது, ஞான ஒளியே!

பொருள்: தாயே! உன்னுடைய மூலாதாரமென்னும் சக்கரத்தில் நர்த்தனம் புரிபவளான ஸமயா தேவியோடு சிருங்காரம் முதலிய 9 ரஸங்கள் பொருந்திய தாண்டவமென்னும் நடனம் புரிகின்ற மஹாபைரவமென்னும் உன் ரூபத்தைத் தியானம் செய்கிறேன். பிரளயத்திற்குப் பின் மறுபடியும் தோன்றுகிற இந்த உலகத்திற்கு, மஹாபைரவர், மஹாபைரவி என்னும் நீங்கள் இருவரும் கருணையால் ஒன்றுகூடி இந்த உலக ஜீவர்களுக்குத் தாயும் தந்தையுமாகிறீர்கள்.

ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 4000 தடவை ஜபித்து வந்தால், வயிற்று வலி நீங்கும். குல்மம் என்னும் வயிற்றுக் கட்டியும் நீங்கி சௌக்கியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

42. வயிற்றில் ஏற்படும் நோய்கள் நீங்க

கதைர்-மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ர-கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய:
ஸ நீடேயச்சாயா-ச்சுரண-ஸபலம் சந்த்ர ஸகலம்
தநு: ஸெளநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம்

அழகின் அலைப்பெருக்கு(சௌந்தர்ய லஹரி) கிரீட வர்ணனை-வசியம் பெருக்க

அந்தரம் மணித்தபனர் பலமணியின் வடிவெடுத்து அமரும் உனது அம்பொன் முடிமேல்
இந்த கலை நவமணியின் ஒழுகு பல நிறமடைந்து இலகும் அதிசய வடிவினால்,
சந்திரகலை நன்று நன்று என்பர் சிலர்; அன்று அன்று சந்திர கலை இந்த நிறமே
இந்திர சிலை இந்திர சிலை என்பர் சிலர் ஆதலால் யாது என வழுத்த உமையே.

பொருள்: மலையரசனின் மகளே! உனக்குச் சேவை செய்யும் பொருட்டு மாணிக்கங்களாக உருவெடுத்துள்ள பன்னிரண்டு சூரியர்களால் நன்கு இழைக்கப்பட்ட உன் பொற்கிரீடத்தை வர்ணிக்க எவன் மனம் விரும்புகிறதோ அவன், கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள நவரத்தினங்களின் ஒளியால் விந்தையான வர்ணம் உள்ளது போலத் தோற்றமளிக்கும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்று நினைத்துக் கொள்ள மாட்டானா?

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், மஹோதரம் என்னும் நோய் விலகும். மற்றும் பசு, பக்ஷி, மனிதர்கள், தேவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் சக்தியும் ஏற்படும் என்பது நம்பிக்கை.

43. ஜயம், புகழ் பெறவும், வியாதி நீங்கவும்

துநோது த்வாந்தம் நஸ்-துலித-தலிதேந்தீவர-வநம்
கந-ஸ்நிக்த-ஸ்லக்ஷ்ணம் சிகுர-நிகுரும்பம் தவ ஸிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸநமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதந-வாடீ-விடபிநாம்

கூந்தல் அழகு-சகல காரியங்களில் வெற்றி பெற (தமிழ்)

அலர்ந்த கரு நெய்தல் அங்காடு எனக் கடை குழன்று அற நெய்த்து இருண்டு செறிவோடு
இலங்குறும் இயற்கை மணம் எண் திசை அளப்ப அதில் இதழ் மூழ்கு நறை விழைவினால்
பொலன் கொள் முடி ஆகண்டலேசன் பொற்று உணர்விரி பொதும்பர் மது மலர் படிவதோர்
சிலம்பு அளி பரந்த உனது ஓதி என் மனத்திருள் செறிவு தெற அருள் கமலையே.

பொருள்: அம்பிகையே! உன் கருங்கூந்தல் மலர்ந்த கருநெய்தல் காடு போல அடர்ந்து, வழவழப்பாயும், மிருதுவாயும் உள்ளது. அது எங்கள் அகஇருளை அகற்றட்டும். அதிலுள்ள இயற்கையான நறுமணத்தை அடைய விரும்பியே இந்திரனின் நந்தவனத்திலுள்ள கற்பக மலர்களெல்லாம் அந்தக் கேசத்தில் வாசம் செய்கின்றன என எண்ணுகிறேன்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் எடுத்த காரியங்கள் எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும். நோய்களெல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை.

44. ஜனங்களின் மனதைக் கவர

தநோது ÷க்ஷமம் நஸ் தவ வதந-ஸெளந்தர்யலஹரீ
பரீவாஹ-ஸ்ரோத:-ஸரணிரிவ ஸீமந்த-ஸரணி:
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல-கபரீ-பார-திமிர-
த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீ-க்ருதமிவ நவீநார்க்க-கிரணம்

வகுட்டின் வர்ணனை-எல்லா நோயினின்றும் விடுதலை பெற (தமிழ்)

மோதிய வெங்கதிர் மீள வெருண்டு இருள் மூட ஒதுங்கிய வாறேயோ
சோதி முகம் கவின் ஏறி வழிந்தன சோரவிடும் கவர் காலேயோ
ஓதி பிணைந்து பின் வீழ வகிர்ந்து அதன் ஊடு எழுதும் ப்ரபை யாதேயோ
கோதறு சிந்துர ரேகை வளம் பிறர் கூறுவது அன்று இது மாதாவே.

பொருள்: பராசக்தியே! உன் திருமுகத்தின் அழகு வெள்ளம் பெருகிப் பொழிவது வழிந்தோடும் வாய்க்காலைப் போலுள்ளது. அது உன் கரிய கற்றைக் கூந்தல் என்னும் பலம்மிக்க பகைவர்களால் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்ட இளஞ்சூரியனின் கிரண ஒளியைப் போன்று தெரிகிறது. குங்குமம் அப்பியதுமான அந்த வகிடு எங்களுக்கு ÷க்ஷமத்தை அளிக்கட்டும்.

ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எல்லோரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

45. முக்காலத்தையும் உணர

அராலை: ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸஸ்ரீபி-ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ-ருசிம்
தரஸ்மேரே யஸ்மிந் தஸநருசி கிஞ்ஜல்க-ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மர-தஹந-சட்சுர்-மதுலிஹ:

குஞ்சத்தின் வர்ணனை-திருவின் நோக்கு பெற, வாக்கு பலிதத்திற்கு (தமிழ்)

கூர் எயிற்றின் அக இதழுங் கொண்கர் விழி வரி வண்டும் குழற் படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப்
பேரியற்கை மணம் பொதிந்து புன்மூரல் முகை அவிழப் பிறழும் உனது அருணமுக கமலம் என்றால்
ஒரியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவது மற்று ஒரியற்கை செயற்கை மணம் போது செய்யும்
நீரியற்கை மலர்க்கமலம் இதற்குடைந்து பங்கமுறல் நீதியென்பது யாரறியார் நிகரில் மாதே.

பொருள்: அம்பிகையே! புன்னகையால் சிறிது மலர்ந்தாற் போலவும், அழகிய பல்வரிசைகளுடன் பிரகாசிப்பதும், தாமரை மலரின் நறுமணம் கூடியதுமான, உன் முகமாகிய தாமரை மலரில், மன்மதனை எரித்த சிவனின் கண்கள் என்னும் தேன் வண்டுகள் மயங்குகின்றன. அத்தகைய உன் முகம் இயல்பாகவே சுருள் சுருளாகவும், சிறு வண்டுகள் மொய்த்திருப்பன போன்ற அழகைக் கொண்டதாகவும் உள்ள முன்நெற்றி மயிர்கள் பரவியுள்ளதால் உன் முகம் தாமரை மலரைப் பரிகாசம் செய்வது போல் இருக்கிறது.

ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் வருங்காலத்தை உணரும் சக்தியுண்டாகி சொன்னதெல்லாம் பலிக்கும் என்பது நம்பிக்கை.

46. புத்ர பாக்கியம் பெற

லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுட-கடிதம் சந்த்ரஸகலம்
விபர்யாஸ-ந்யாஸா துபயமபி ஸம்பூய ச மித:
ஸுதாலேப-ஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர:

நுதல் தோற்றம்-புத்திரப் பேற்றுக்கு

கோதை நீண்டமுடி கொண்டொளிர் திங்கள் சேர்
பாதி வாள் நுதல் என்று படிந்ததோ
வீது கூடி இரண்டு நிறைந்ததோ
சீத பூரணத் திங்கள் சிறந்ததே.

பொருள்: ஹே பகவதி! உன்னுடைய நெற்றியானது உன் கிரீடத்தில் கீழ்நோக்கி தொங்கவிடப்பட்ட மற்றொரு சந்திரகலை போல் காட்சி தருகிறது. ஏற்கனவே மேல் நோக்கிக் கிரீடத்திலுள்ள சந்திரகலையையும் உன் நெற்றியாகிய சந்திர கலையையும் மாற்றி வைத்தால் இரண்டும் சேர்ந்து பூர்ணசந்திரனாகக் காட்சி தரும். (தேவியின் நெற்றி, மனத்தின் அதிஷ்டான தேவதை என்பதால், அதைச் சந்திர கலையாகத் தியானம் செய்தால் மனஜயம் உண்டாகும்.) இவ்வாறு மனத்தில் எண்ணி அமாவாசையன்று வானில் முழுநிலவைக் கொணர்ந்து காட்டிய அபிராம பட்டரின் சாதனை வியக்கத்தக்கது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் பிள்ளையில்லாதவருக்குக் குணமுள்ள பிள்ளை உண்டாகும். தவிர, கோரிய பலன்களெல்லாம் வெற்றியடையும் என்பது நம்பிக்கை.

47. இறை அருள் பெற

ப்ருவெள புக்நே கிஞ்சித்புவந-பய-பங்க வ்யஸநிநி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருத-குணம்
தநுர்-மந்யே ஸவ்யேதர கர-க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர-முமே:

புருவ அழகு-எல்லா காரியங்களில் வெற்றி பெற (தமிழ்)

கருவிழிச் சுருப்பு நாண் உன் கண்மலர் அம்பு, கன்னல்
புருவவில், நடுவொழித்தல் போன்றது வளைத்துப் போர்மேல்
வருமதன் பிடித்த கைக்குள் மறைந்தது போலும் என்றால்
திருமகள் பரவும் அம்மே சிலை இது புருவம் அன்றே.

பொருள்: தாயே! உலக மக்கள் அனைவரின் அச்சத்தை அகற்றுவதிலேயே மிகுந்த அக்கறை கொண்டவளே! சற்று வளைந்து காணப்படும் உன் புருவங்கள், வண்டுகள் போன்ற நாண் பூட்டப்பட்டும், இடக்கையில் பிடிக்கப்பட்டு, முழங்கையாலும் மணிக்கட்டாலும் மறைக்கப்பட்டு அதன் நடுப்பாகத் தோற்றம் தெரியாமலும் உள்ளதால், அது மன்மதனின் வில் என்றே எண்ணுகிறேன்.

ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சகல தேவதைகளும் வசியமாவார்கள். அதன் மூலம் விரும்பிய காரியங்களிலெல்லாம் வெற்றி உண்டாகும் என்பது நம்பிக்கை.

48. சகல தோஷங்களும் விலக

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயந-மர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ-நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித-ஹேமாம்புஜ-ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ-நிஸயோ-ரந்தரசரீம்

கண்களின் எழில்-நவகோள்களினின்று விடுபெற (தமிழ்)

ஒரு மலர்க்கண் இரவி வலத்துதித்து அருளு நண்பகலும்
ஒரு மலர்க்கண் மதியம் இடத்து உதித்து அருளும் பேரிரவும்
திருநுதற்கண் பொற் கமலச் செந்நிறத்தீ விளைத்தருளும்
விரவு செக்கர் மாலையும் உன் விழை வகலா விழுப்பொருளே.

பொருள்: தாயே! உன் வலது கண் சூரியனாக இருப்பதால் அது பகலையும், உன் இடது கண் சந்திரனாக இருப்பதால் இரவையும் தோற்றுவிக்கிறது. உன்னுடைய மூன்றாவது கண் சற்று மலர்ந்த தங்கத் தாமரை மலர் போலிருப்பதால், இரவுக்கும் பகலுக்கும் இடையேயுள்ள காலை மாலைச் சந்தியா காலங்களை அமைக்கிறது.

ஜபமுறையும் பலனும்
9 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், நவக்ரஹங்களால் உண்டாகும் தோஷங்களும், சிரமங்களும் நீங்கி சுகம், சம்பத்து உண்டாகும் என்பது நம்பிக்கை.

49. வியாபாரம் விருத்தியாக

விஸாலா கல்யாணீ ஸ்புடருசி-ரயோத்யா குவலயை:
க்ருபாதாரா தாரா கிமபி மதுரா போக-வதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர-விஸ்தார-விஜயா
த்ருவம் தத்தந்-நாம-வ்யவஹரண-யோக்யா விஜயதே

எண்வித கண்ணோட்டம்-நிறைந்த வெற்றி பெற (தமிழ்)

கோல நகர் விசாலையாய் நிரந்தர கல்யாணியாய்க் குவலயத்தால் அயோத்தியாய்க் குல மதுரை தானாய்ச்
சால ஒளிர் போகவதியாய் அமுததாரையாய்த் தண்ணளியால் அவந்தியாய்ச் சகவிசயை எனலாய்
நீல விழி புடைபரந்து நெடுநகரப் பெயர் கவர்ந்து நீண்டு சேந்து அரிபரந்து நிக ரொழிக்கும் என்றால்
ஆலவிடம் அமுதமெனக் கொண்டு அருந்திய உன்மத்தர்புரம் அதனில் ஒரு புறங்கவர்தல் அதிசியமோ தாயே!

பொருள்: அம்பிகையே! உன் கண்ணோட்டம் பரந்து விரிந்ததாகும். அது மங்களகரமாகவும், மலர்ந்து ஒளி வீசுவதாகவும், கருநெய்தல் மலர்களையும் மிஞ்சும் அழகு வாய்ந்ததாகவும், கருணைப் பெருக்கிற்கு ஆதாரமாகவும், வர்ணிக்க முடியாத அழகுமிக்கதாகவும், ஆழங்காண முடியாத அளவுக்கு நீண்டதாகவும், அடியவர்களைக் காப்பதாகவும், பல நகரங்களிலும் பார்வையின் பிரவாகம் வெளியாகியுள்ளதாக இருப்பதால் அந்தந்த நகரங்களில் குறிப்பிடத்தக்கதாகவும் அனைத்தையுமே வெல்லக்கூடியதாகும்.

ஜபமுறையும் பலனும்
10 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், புதையல் உள்ள இடத்தைக் காணலாம். இதற்குரிய யந்திரத்தை மஞ்சளில் எழுதி, அந்த மஞ்சளைச் சுட்டு, நல்லெண்ணெயில் உறைத்து மையாக்கி, பூனைக் கண்ணுள்ள பெண் கையால் மை தீட்டிக் கொண்டால் புதையல் உள்ள இடம் காணப்படும் என்பது நம்பிக்கை.

50. அம்மை நோய் நீங்க

யாகவீநாம் ஸந்தர்ப-ஸ்தபக-மகரந்தைக-ரஸிகம்
கடாக்ஷ-வ்யா÷க்ஷப-ப்ரமர-கலபௌ-கர்ணயுகலம்
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ
அஸூயா-ஸம்ஸர்கா-தலிக-நயநம்-சிஞ்சிதருணம்

மூன்றாவது கண்-தூரபார்வைக்கு, வைசூரி நோய் நீங்க (தமிழ்)

இரு செவியுண் பலகவிதை இணரொழுகு பசுந்தேனில்
பெருகும் நவரசமருந்திப் பிறழ்ந்திடும் உன் பிணை விழியாம்
கருநிற வண்டு இணைகளிப்பக் கண்டு பொறாது என்னேயோ
வரி நுதல்கண் அளி சிவந்த வளம்பாராய் மலர்க்கொடியே.

பொருள்: தாயே! உன்னுடைய இரண்ட காதுகளும் கவிகளின் காவியப் படைப்பாகிய புஷ்பக் கொத்திலுள்ள தேனைப் பருகும் ஆவலுடன் கூடியவை. அந்தக் காதுகளைச் சற்றும் பிரியாமல் உள்ள உன் கண்கள் இரண்டும் குட்டி வண்டுகளைப் போலத் துள்ளித் திரிந்து கவிதைகளிலுள்ள நவரசங்களையும் அனுபவித்து மகிழும் ஆவல் கொண்டவை. எனவே, உன் இரண்டு கண்களையும் பார்த்துப் பொறாமையினால் தான் உன்னுடைய நெற்றிக்கண் சற்றே சிவந்து காணப்படுகிறது என்பது நம்பிக்கை.

ஜபமுறையும் பலனும்
5 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் வைசூரியனால் உடலெரிச்சல், கை கால்கள் முடமாதல், கண்பார்வை இழத்தல் போன்ற சிரமங்களெல்லாம் நீங்கிச் சுகம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

51. புகழ் பெற

ஸிவே ஸ்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ-ஸௌபாக்யஜநநீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா

தேவியின் பார்வையில் எண் ரசங்கள்-மக்கள் வசியம் அடைய (தமிழ்)

அரனிடத்தில் பேரின்பம் அருளும், அவனல்லார் பால்
அருவருக்கும், அவன் முடிமேல், அணி நதியைச் சீறும்
பரவு நுதல் விழியழல் முன் பார்த்தில போல் அதிசயிக்கும்,
பணியான பணிவெகுளப் பயந்தன போல் ஒடுங்கும்
விரைமுளரிப் பகைதடிந்து வீராதம் படைக்கும்
வினவு துணைச் சேடியர்க்கு விருந்து நகை விளைக்கும்
இரவு பகல் அடிபரவும் எளியனைக் கண்டு அருள் புரியும்
இத்தனையோ படித்தன உன் இணை விழிகள் தாயே.

பொருள்: தாயே! உன்னுடைய பார்வையில் எண்வகை ரஸங்களும் பொதிந்துள்ளன. அதாவது, சிவபிரானிடம் மட்டும் உன் பார்வை சிருங்கார ரஸத்தைப் பிரதிபலிப்பதாகவும், அவரைத் தவிர மற்றவர்களிடம் வெறுப்பைக் காட்டுவதாகவும், கங்கா தேவியிடம் கோபமுடையதாகவும், சிவனின் திருவிளையாடல்களில் வியப்புடையதாகவும், சிவன் அணிந்துள்ள பாம்புகளிடம் பயமுடையதாகவும், தாமரை மலரை விடச் சிவந்தும், வீர ரஸம் ததும்புவதாகவும், தோழிகளிடம் இனிய நகைச்சுவை உடையதாகவும் என்னிடம் கருணை நிரம்பியதாகவும் விளங்குகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், நல்ல புகழ் உண்டாகும். (சந்தனத்தின் மீது நீண்ட சதுரம் எழுதி, அதன் நடுவில் க்லீம் என்ற மூன்று முறை எழுதி, பொட்டு இட்டுக் கொண்டு உடலில் பூசிக் கொள்ளவும்.) சர்வஜன வசியம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

52. கண் நோய், காது நோய் நீங்க

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துஸ்-சித்தப்ரஸம-ரஸ-வித்ராவண-பலே
இமே நேத்ரே கோத்ராதரபதி-குலோத்தம்ஸ-கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட-ஸ்மரஸர-விலாஸம் கலயத:

மன்மத பாணங்களைப் போன்ற கண்கள்-காமம் வெல்ல, காது, கண்களின் நோய்கள் நீங்க (தமிழ்)

இகல் பொரக் குழையை முட்டும் இமைமயிர் ஒழுங்கிற்றூவல்
நிகராறு நித்தர் யோகம் நீக்கி வெம் போகம் நல்கும்
சிகர வெற்பரசன் தொல்லைத் திருமரபு என்னும் தெய்வம்
மகுட மாமணி நின் கண்கள் வயமதன் வாளி தானே.

பொருள்: அம்பிகையே! மலையரசனின் குலவிளக்கே! உன் திருவிழிகள் இரண்டும் காதுகள் வரை நீண்டிருப்பதாலும், பாணங்களின் இருபுறமும் கட்டப்படும் இறகுகளைப் போன்ற இமை உரோமங்களைக் கொண்டிருப்பதாலும், முப்புரங்களையும் எரித்த சிவபிரானின் மனத்தில் சாந்தியை விலக்கி, சிருங்கார நினைவைத் தோற்றுவிப்பதை நோக்கமாய்க் கொண்டு காது வரை இழுக்கப்பட்ட மன்மத பாணத்தையும் நினைவுபடுத்துபவை போல உள்ளன.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், கண்களின் பார்வை மங்குதல், எரிச்சல், காதுகளில் சீழ் வடிதல், குத்துதல் போன்ற நோய்களெல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை.

53. சகல காரியங்களும் வெற்றி பெற

விபக்த-த்ரைவர்ண்யம் வ்யதிகரித-லீலாஞ்ஜந-தயா
விபாதி த்வந்நேத்ர-த்ரிதய-மித-மீஸாந-தயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண ஹரி-ருத்ரா-நுபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரய்மிவ

முக்குணங்கள் படைத்த கண்கள்-தேவி தோன்ற, உலகையாள (தமிழ்)

வரிவிழிச் செம்மை வெண்மை வனப்புறு கருமை மூன்றும்
எரிதெறு கற்ப காலத்து இறந்த முப்பொருளும் தோன்றும்
கருஎனக் குணங்கள் மூன்றின் காரணம் என்னப் பெற்றால்
அரு மறைப் பொருளே உன்றன் அருளலாது உலகம் உண்டோ.

பொருள்: பரமேசுவரனின் அன்புக்குரியவளே, நீ விளையாட்டிற்காகக் கண்களில் மையைத் தீட்டியிருக்கிறாய். எனவே, உன்னுடைய மூன்று கண்களும் சிவப்பு, வெளுப்பு, கருப்பு என்னும் மூன்றும் வர்ணங்களைக் கொண்டிருக்கின்றன. இதைப் பார்த்தால், பிரளய காலத்தில் உன்னில் அடங்குகிற பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என்னும் தேவர்களை மறுபடியும் படைப்பதற்காக முறையே ரஜோகுணம், ஸத்வகுணம், தமோகுணம் என்பவைகளை உன் கண்கள் தாங்குகின்றனவா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தேவியின் அருள் கிடைக்கும். குத்து விளக்கேற்றி அதனடியில் ஜபம் செய்ய வேண்டும். சகல காரியங்களும் அனுகூலமாகும் என்பது நம்பிக்கை.

54. துஷ்ட ரோகங்கள் நீங்க

பவித்ரீ-கர்த்தும் ந: பஸுபதி-பராதீந-ஹ்ருதயே
தயாமித்ரைர்-நேத்ரை-ரருண-தவல-ஸ்யாம ருசிபி:
நத: ஸோணோ கங்கா தபந-தநயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தாநா-முபநயஸி ஸம்பேத-மநகம்

கண்களின் வர்ணனை-உலக பீடை நீங்க (தமிழ்)

அம்மை நின்கருணை பொங்கி அலையெறி நயன வேலை
மும்மணி கெழும் உன் தொண்டர் மும்மலம் களைய மூழ்கச்
செம்மை தன் சோணையாறு தெளிகங்கை யமுனை மூன்றும்
தம்மயத் தொடும் வந்துற்ற தன்மை ஈதென்பர் மிக்கோர்.

பொருள்: பரமசிவனிடம் உள்ளத்தை அர்ப்பணித்த தாயே! உன்னுடைய கண்களில் சிவப்பு, வெளுப்பு, கருப்பு என்னும் மூன்றுவிதமான ரேகைகள் வெவ்வேறு வழியாகச் செல்கின்றன. அவைகள் மேற்கு நோக்கிச் செல்லும் சிவப்பு வர்ணமுள்ள சோணா நதி, கிழக்கு நோக்கிச் செல்லும் வெளுப்பான கங்கை, கிழக்கு நோக்கிச் செல்லும் கருப்பு வர்ணமுள்ள யமுனை இவைகளின் சங்கமத்தை எங்களைப் புனிதம் செய்வதற்காக அமைத்திருக்கிறாய் என்றே எண்ணுகிறேன்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் சூதக நோய் முதலிய கொடிய நோய்களெல்லாம் நீங்கும் என்பது நம்பிக்கை.

55. எதிரிகளின் பயம் நீங்க

நிமே÷ஷாந் மேஷாப்யாம் ப்ரலய-முதயம் யாதி ஜகதீ
தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர-ராஜந்ய-தநயே
த்வதுந்மேஷாஜ்ஜாதம் ஜகதித-மஸேஷம் ப்ரலயத:
பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத-நிமேஷாஸ்-தவ த்ருஸ:

கண்கள் இமையாது இருக்கும் காரணம்-அருள் பாலிக்கும் சக்தி, எல்லா வியாதிகள் அகல (தமிழ்)

இணைவிழி இமையா நாட்டம் எய்தியது அலரத் தோன்றும்
பணை நெடும் புவனம் இந்தப் பார்வை சற்று இமைக்குமாயில்
துணையிழந்து அழிவதெண்ணித் துணிந்த நின் கருணை என்றால்
கணையினும் கொடியது என்னக் கடவதோ கடவுள்மாதே.

பொருள்: மலையரசனின் மகளே! உன் கண்ணின் இமைகளை மூடுவதாலும், திறப்பதாலும் உலகம் அழிவதும், மீண்டும் தோன்றுவதும் நிகழ்வதாகச் சான்றோர் கூறுகிறார்கள். உன் கண்கள் திறப்பதால் தோன்றும் இந்த உலகம் முழுவதையும், அழியாமல் காப்பதற்காகவே உன் கண்கள் இரண்டும் இமைக்காமலே இருக்கின்றனவா என நான் எண்ணுகிறேன்.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2500 தடவை ஜபித்து வந்தால், நம்மை அழிக்க நினைக்கும் பகைவன் அழிவான். விரைவாதம் முதலான அண்ட நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

56. நல்ல நண்பர்கள் கிடைக்க

தவாபர்ணே கர்ணே-ஜப-நயந-பைஸுந்ய-சகிதா
நிலீயந்தே தோயே நியத-மநிமேஷா: ஸபரிகா:
இயஞ் ச ஸ்ரீர்-பத்தச்சத-புட-கவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஸி ச விகடய்ய ப்ரவிஸதி

அழகினால் வெல்லும் கண்கள்-விடுதலை பெற, கண் நோய் நீங்க

இடம் படர் கொடியே நின்கண் இருசெவிக்கு உரைப்பது ஏதென்று
அடர்ந்து எழு கயலின் கண்கள் அடைப்பில பயப்பட்டு அம்மா
கடும்பகல் கமலவீடும் கங்குல் வாய் நெய்தல் வீடும்
அடைந்தனள் கமலை ஒன்றொன்று அடைப்பன கண்டு கொண்டாய்.

பொருள்: அபருணா எனப் பெயர் பெற்ற தாயே! உன் கண்கள் உன் காதுகளின் அருகில் சென்று கோள் செய்கின்றனவோ என்ற பயத்தால் உன்னைப் போல் இமைக்கொட்டாத மீன்கள் தண்ணீரில் மறைந்து விடுகின்றன. இந்த உன் கண்களிலுள்ள ஒளியாகிய லக்ஷ்மி விடியற்காலையில் இதழ்களாகிய கதவுகளால் மூடப்பெறும் கருநெய்தல் புஷ்பத்தை விட்டு அகல்வதைப் போலவும், மறுபடியும் இரவில் அந்த இதழ்களைத் திறந்து கொண்டு உள்ளே புகுவதைப் போலவும் தோன்றுகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 20,000 தடவை ஜபித்து வந்தால், தடைகள் விலகும். பந்த விமோசனம் உண்டாகும் என்பது நம்பிக்கை.

57. சுபிட்சம் ஏற்பட

த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித-நீலோத்பல-ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி-ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர-நிபாதோ ஹிமகர:

நிலவென பொழியும் அருள்-எல்லா நன்மையுடைய (தமிழ்)

நெடிய கண் கரிய நெய்தல் நிறையருள் சலதி எய்தாக்
கொடியனேன் பிறவித்துன்பக் குறைகடல் கடந்து மூழ்க
விடின் அதின் குறைவதுண்டோ மெத்தவர்க்கு ஒழிந்துறாதோ
கடிநகர் நிலவு காட்டிற் காயுமே கருணை வாழ்வே.

பொருள்: சகல மங்களங்களையும் அளிப்பவளே! உன் கடைக்கண் பார்வை சற்றே மலர்ந்த கருநெய்தல் புஷ்பம் போல் விளங்குகின்றது. காது வரை நீண்டுள்ளது. உன்னை நெருங்காமல் உள்ள இந்த ஏழையை அந்தப் பார்வையால் தயவு செய்து ஸ்நானம் செய்துவை. அதனால் நான் புண்ணியமும் செல்வமும் பெறுவேன். இதனால் உனக்கு எந்தக் குறையும் இல்லை. சந்திரன்; காட்டிலும், அரண்மனையிலும் பாரபட்சமின்றி ஒரே விதமாகத்தானே காய்கின்றான்?

ஜபமுறையும் பலனும்
6 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை ஜபித்து வந்தால், ஒவ்வொருவருக்கும் வீடு, வாகனம், மனை, மனைவி முதலான ஸகல சுகங்களும் உண்டாகும். நாட்டில் சுபிட்சம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

58. புகழ் பெறவும், நோய் நீங்கவும்

அராலம் தே பாலீயுகல-மகராஜந்யதநயே
ந கேஷா-மாதத்தே குஸுமஸர-கோதண்ட-குதுகம்
திரஸ்சீநோ யத்ர ஸ்ரவணபத-முல்லங்க்ய விலஸந்
அபாங்க-வ்யாஸங்கோ திஸதி சரஸந்தாந-திஷணாம்

கடைக்கண் பார்வை-காமனை வெல்ல, நோய் நீங்க (தமிழ்)

கருங்குழல் நுதற்கட் பின்னற் கவின் கடைக் கபோலந் தாழ்ந்த
அருங்குழை கடந்த கண்ணின் அயிற்கடை அனங்கசாப
நெருங்குறத் தொடுத்த ஏவின் நிமிர்தலை ஏய்க்கும் என்றால்
மருங்கில் பொற்றிருவே யாருன் மதர்விழி பரவ வல்லார்.

பொருள்: பர்வதராஜனின் புத்திரியே! வளைந்த கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட இரு பகுதிகளையும் பார்த்தால், மலர்ப் பாணங்களையுடைய மன்மதனின் வில் போன்ற தோற்றத்தை யாருக்குத்தான் ஏற்படுத்தாது? உண்மையில் குறுக்காகச் செல்லும் உன் கடைக்கண் பார்வை, காதுகளின் வழியே ஊடுருவிப் பாய்வது, மன்மதன் பாணங்களைப் பயன்படுத்துவதைப் போன்றுதானே உள்ளது? (அம்பிகையின் கடைக்கண் பார்வை சகல நலன்களையும் நல்கக்கூடியது.)

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எங்கும் செல்வாக்கும், புகழும் உண்டாகும். சகல நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

59. மனைவியின் அன்பைப் பெற

ஸ்புரத்கண்டாபோக-ப்ரதிபலித-தாடங்க-யுகளம்
சதுஸ்சக்ரம் மந்யே தவமுகமிதம் மந்மதரதம்
யமாருஹ்ய த்ருஹ்யத்-யவநிரத-மர்கேந்து-சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே

ரதம் போன்ற முகம்-சர்வ ஜன வசியம் (தமிழ்)

தோகை நின் கபோலம் சார்ந்த துணைநிழல் சுவடும் தோடும்
ஆக இவ்வுருளை நான்கின் ஆனன விரதம் வாய்த்தோ
ஏக நன் புடவி வட்டத்து இரு சுடராழித் திண்தேர்ப்
பாகரைப்பொருது மாரன் பழம்பகை தீரப்பெற்றான்.

பொருள்: ஹே தேவி! உன்னுடைய தாடகங்கள் என்னும் ஸ்ரீசக்ர ரூபமான வைரத் தோடுகள் உன் கன்னங்களில் பிரதிபலிக்கின்றன. அவைகளுடன் கூடிய உன் திருமுகத்தை நான்கு சக்கரங்களுடன் கூடிய மன்மதனின் ரதமெனக் கருதுகிறேன். இந்த ரதத்தில் ஏறிக் கொண்டுதான் மன்மதன் சூரியனையும் சந்திரனையும் சக்கரங்களாகக் கொண்ட பூமியாகிய ரதத்தில் ஏறி, திரிபுரங்களை அழித்த பரமசிவனை எதிர்த்துப் போரிடுகிறானோ?

ஜபமுறையும் பலனும்
3 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை ஜபித்து வந்தால், மனைவியின் அன்பைப் பெறலாம், சிறந்த பதவியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

60. கல்வி அறிவு பெற

ஸரஸ்வத்யா: ஸூக்தீ-ரம்ருத-லஹரீ-கௌஸலஹரீ:
பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவண-சுலுகாப்யா-மவிரலம்
சமத்கார-ஸ்லாகாசலித ஸிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்-தாரை: ப்ரதிவசந-மாசஷ்ட இவ தே

சொல்லின் இனிமை-வாக்கு பலிதம், ஊமை பேச (தமிழ்)

வேரி நாள் மலர்க்குள் வாணி விலையில் பாடல் அமுதெலாம்
சேர மாமடந்தை நின் செவிக்குணா வருத்தவே
ஆரமாலை முடியசைப்ப ஆடியெற்று குண்டலம்
பூரை பூரை யென்ற சொல் பொலிந்த ஓசை பெற்றதே.

பொருள்: பரமேஸ்வரனின் பத்தினியே! அமுதப் பெருக்கின் இனிமையையும் வெல்லும் வல்லமை மிக்கது உன் இனிய சொல்லமுதம். அதை இடைவிடாது தன் காதுகளாகிய பாத்திரங்களால் பருகிக் கொண்டிருப்பவரும், அதைப் பாராட்டும் வகையில் அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருப்பவருமான சரசுவதி தேவி, தன் காதணிகளாகிய குண்டலங்களை அசைத்து ஜணத்ஜணத் என்ற உயர்ந்த ஒலி கேட்பது, உன் சொல்லினிமையை ஆம் ஆம் என்று பாராட்டுவதைப் போல் தெரிகிறது.

ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், ஸகலகலா ஞானமும், சென்றவிடமெல்லாம் செல்வாக்கும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

61. கல்வி அறிவு பெற

அஸௌ நாஸாவம்ஸஸ்-துஹிநகிரிவம்ஸ-த்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பல-மஸ்மாக-முசிதம்
வஹத்யந்தர்-முக்தா: ஸிஸிரகர-நிஸ்வாஸ-கலிதம்
ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர:

மூக்குத்தி முத்தின் அழகு-மனோ வெற்றி (தமிழ்)

இமய மன்னன் மரபில் வெற்றி இடுபதாகை அனைய என்
அமலை உன்றன் வதன துண்ட அணி சிறந்த மணியையோ
விமலு மன்னு கவிஞர் முத்தை வெற்பில் வல்லி யலர்வதோர்
கமல மன்னு குமிழ் அளித்தல் கண்டதல்ல என்பதே.

பொருள்: பனிமலையரசனின் குலக்கொடியே! மூங்கில் தண்டைப் போன்ற உன் அழகிய மூக்கின் உள்ளே பளபளக்கின்ற அழகிய முத்துக்கள் நிறைய இருக்கின்றன போலும்! அதனால் தான் உன் இட நாசித் துவாரத்தின் வழியே வெளியாகும் சந்திர நாடி என்னும் மூச்சுக்காற்று, முத்துக்களை வெளியேயும் கொண்டு வருகிறதென எண்ணுகிறேன். அத்தகைய அழகிய நாசி, எங்களுக்குத் தேவையானதும், விரைவில் பலன் தரக்கூடியதுமான நன்மைகளை அளித்துக் காக்கட்டும்.

ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் எல்லாவற்றிலும் தடையின்றி வெற்றியுண்டாகும் என்பது நம்பிக்கை.

62. சுகமான தூக்கம் பெற

ப்ரக்ருத்யா ரக்தாயாஸ்-தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஸ்யம் ஜநயது பலம் வித்ருமலதா
ந பிம்பம் தத்பிம்ப-ப்ரதிபலந-ராகா-தருணிதம்
துலா-மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா

இதழ்களின் அழகு-நல்ல நித்திரை

இறைவி நின் இதழ்ச்சிவப்பு இயற்கை இத்தொடு இணைசொனா
நிறைகொள் கொவ்வை இந்நிறத்தின் நீழல் பெற்று விம்பமாய்
உறைதல் கொண்டு நாணும் மற்றோர் உவமை இல்லை உண்டெனா
அறை கடல் துகிர்ப் பழுக்கின் அன்று சொல்வன் அளியனே!

பொருள்: அழகிய பற்கள் அமைந்த தேவி, இயல்பிலேயே சிவந்திருக்கும் உன்னுடைய உதடுகளின் வர்ணம் இயற்கையாகவே சிவப்பு. இதற்கு உவமை கூற முற்படுகிறேன். பவழக்கொடிக்குப் பழம் கிடையாது. அது பழத்தைத் தோற்றுவித்தால் அதை உவமையாகக் கூறலாம். கோவைப்பழமும் இயற்கையாகச் சிவந்ததல்ல; உன் உதட்டின் சிவப்பு அதில் பிரதிபலித்திருப்பதால் தான் அதுவும் சிவப்பாக இருக்கிறது. ஆகவே, கோவைப்பழம் பதினாறில் ஒரு பங்கு கூட உன் உதட்டுச் சிவப்புடன் ஒப்பிட முடியாமையால் வெட்கமுற்றிருக்கிறது.

ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், தூக்கம் இல்லாமல் வருந்துபவர்களுக்கு நல்ல தூக்கம் உண்டாகும் என்பது நம்பிக்கை. (ஒரு தங்கத் தகட்டில் சதுரமாகக் கோடு அடித்து, அதன் மத்தியில், மம், மம், மம் என்று எழுதி வைத்து ஜபம் செய்தபின் தலைகாணிக்கு அடியில் வைத்துப் படுக்கவும்.)

63. உயர்ந்த பதவி, அதிகாரம் பெற

ஸ்மித ஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந-சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா-மாஸீ-ததிரஸதயா சஞ்சு-ஜடிமா
அதஸ்தே ஸீதாம்ஸோ-ரம்ருதலஹரீ-மாம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா

சிரிப்பின் அழகு-எல்லா உயிர்களும் விரும்ப (தமிழ்)

அன்பு முற்றி வடிவாய, அம்மை நினது ஆனனத்து மதி நகைநிலா
நன்புறத்தமுதம் ஒழுகும் மாமதுர நறை கொள் சீதளமயின்றவாய்
இன் புளிப்பலது உவட்டுறாதினி யெனத் தெவிட்டிய சகோரம் வான்
முன்பரப்பு நிலவு உண்ணுமால் உனது மூரலுக்கு நிகர் மூரலே.

பொருள்: அம்பிகையே! உன்னுடைய முகமாகிய சந்திரன் பொழியும் புன்சிரிப்பாகிய அமுதம் போன்ற நிலவொளியை அளவின்றிப் பருகும் சகோர பக்ஷிகள், அதன் மிகையான தித்திப்பால் தங்கள் அலகுகள் உணர்விழந்தனவாக ஆகிவிட்டன எனக் கருதி, மாற்று ரஸமாகப் புளிப்பை விரும்பி சந்திரனின் கிரணங்களான அமுதப் பெருக்கை, புளித்த கஞ்சியாக எண்ணி வேண்டியவரை ஒவ்வோர் இரவிலும் அதைத் திருப்தியாகப் பருகி மகிழ்கின்றன.

ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 30,000 தடவை ஜபித்து வந்தால், உயர்ந்த பதவியையும், அதிகாரத்தையும் பெறலாம். இவ்வுலகில் எல்லோரையும் மோகிக்கச் செய்யும் சக்தியும் உண்டாகும் என்பது நம்பிக்கை.

64. ஸ்த்ரீகளின் வியாதி நீங்க

அவிஸ்ராந்தம் பத்யுர்-குணகண-கதாம்ரேடநஜபா
ஜபாபுஷ்பச் சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷத்-தச்சச்சவி-மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா

நாவின் எழில்-நாமகள் அருள்

விள்ள நாவுரை எழுந்தொறும் தலைவர் வீரமும் புகழும் அழகுமே
தெள்ளு பாடல் மதுரம் பழுத்தனைய செய்ய கேழ் ஒளி வனப்பினால்
அள்ளன் மாமலரை விட்டு வாணியுனது அருண நாவுறைய வெள்ளையாய்
உள்ள மேனியும் என் அம்மை நீ அருள உன் நிறம் பெறுவது ஒத்ததே.

பொருள்: தாயே! உன்னுடைய நாவானது உன் பதியாகிய பரமசிவனின் மங்களகரமான கதைகளை இடைவிடாமல் எந்நேரமும் திரும்பத் திரும்ப மந்த்ர ஜபத்தைப் போலச் சொல்லி வருவதால் செம்பருத்திப் பூவைப் போலச் சிவந்து காணப்படுகிறது. அந்த நாக்கின் நுனியில் சரஸ்வதி தேவி வசிக்கின்ற காரணத்தால் தான், தெளிவான ஸ்படிகம் போன்று வெண்மையாய்க் காணப்படும் சரஸ்வதியின் திருமேனிகூட, மாணிக்கத்தைப் போல் சிவந்து மாறிக் காணப்படுகிறது.

ஜபமுறையும் பலனும்
18 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 25,000 தடவை ஜபித்து வந்தால், பெண்களுக்கு ஏற்படும் எல்லா நோய்களும் நீங்கும். நினைத்த காரியமும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar