SS பாலாம்பிகா அஷ்டகம் - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> பாலாம்பிகா அஷ்டகம்
பாலாம்பிகா அஷ்டகம்
பாலாம்பிகா அஷ்டகம்

வைத்தீஸ்வரன் கோவில் பாலாம்பிகை

வேலாதிங்லங்க்யகருணே விபுதேந்த்ரவந்த்யே
லீலாவினிர்மிதசராசரஹ்ருன்னிவாஸே
மாலாகிரீடமணிகுண்டலமண்டிதாங்கே
பாலாம்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

கஜ்ஜாஸனாதிமணிமஞ்ஜுகிரீடகோடி
ப்ரத்யுப்தரத்னருசிரஞ்சிதபாதபத்மே
மஞ்ஜீரமஞ்ஜுளவினிர்ஜிதஹம்ஸநாதே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

ப்ராலேயபானுகலிகாகலிதாதிரம்யே
பாதா க்ரஜாவளிவினிர்ஜிதமௌக்திகாபே
ப்ராணேச்வரி ப்ரமதலோகபதே: ப்ரகல்பே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

ஜங்காதிபிர்விஜித சித்தஜதூணிபாகே
ரம்பாதிமார்தவகரீந்த்ரகரோருயுக்மே
சம்பாசதாதிகஸமுஜ்வலசேலலீலே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

மாணிக்யமௌக்திகவினிர்மிதமேகலாட்யே
மாயாவிலக்னவிலஸன்மணிபட்டபந்தே
லோலம்பராஜிவிலஸன்னவரோமஜாலே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

ந்யக்ரோதோபல்லவதலோதரநிம்னனாபே
நிர்தூதஹாரவிலஸத்குசசக்ரவாகே
நிஷ்காதிமஞ்ஜுமணிபூஷணபூஷிதாங்கே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

கந்தர்பசாமதபங்க்ருதாதிரம்யே
ப்ரூவல்லரீவிவிதசேஷ்டிதரம்யமானே
கந்தர்பஸோதரஸமாக்ருதிபாலதேசே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

முக்தாவலீவிலஸ தூர்ஜிதகம்புகண்டே
மந்தஸ்மிதானனவினிர்ஜிதசந்த்ரபிம்பே
பக்தேஷ்டதான நிரதரம்ருதபூர்ணத்ருஷ்டே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

கர்ணாவிலம்பிமணிகுண்டலகண்டபாகே
கர்ணாந்ததீர்கநவனீரஜ பத்ரநேத்ரே
ஸவர்ணாயகாதிமணிமௌக்திகசோபிநாஸே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

லோலம்பராஜிலலிதாலகஜாலசோபே
மல்லீநவீனகலிகா நவகுந்தஜாலே
பாலேந்துமஞ்ஜுள கிரீடவிராஜமானே
பாலாப்பிகே மயி நிதேஹி க்ருபாகடாக்ஷம்

பாலாம்பிகே மஹாராஜ்ஞ வைத்யநாதப்ரியேச்வரி
பாஹிமாமம்ப க்ருபயா த்வத்பாதம் சரணம் கத :

இதி ஸ்ரீஸ்காந்தே வைத்ய நாதமாஹாத்மயே
ஸ்ரீபாலாம்பிகாஷ்டஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.

பாலாம்பிகாஷ்டகம்

1. நதோஸ்மி தே தே வி ஸுபாத பங்கஜம் ஸுராஸுரேந்த் ரைரபி வந்தி தம் ஸதா
பராத்பரம் சாருதரம் ஸுமங்களம் வேதாந்த வேத்யம் மமகார்ய ஸித்தயே

பொருள் : தேவி, நான் மேற்கொண்டுள்ள காரியம் சித்தி அடைவதற்காக, எப்போதும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் தலைவனாலும் வணங்கப்படுவதும், மேலானவற்றிற்கும் மேலானதும், எல்லாவற்றையும்விட அழகு நிறைந்ததும் மங்களம் தரக்கூடியதும் வேதங்களின் முடிவில் அறியப்படுவதுமான உனது பாத கமலங்களை தேவியே, நான் வணங்குகிறேன்.

2. வேதை க வந்த்யம் புவனஸ்ய மாதரம் ஸமஸ்த கல்யாண குணாபி ராமிகாம்
பக்தார்த தாம் பக்த ஜனாபி வந்த்யாம் பாலாம்பி காம் பாலகலாம் நதோஸ்மி

பொருள் : வேதத்தில் போற்றித் துதிக்கப்படும் புவனங்களுக்கெல்லாம் அன்னை, அனைத்து கல்யாண குணங்களும் ஒருங்கே அமைந்த பேரெழில் வடிவினள், பக்தர்கள் வேண்டுவதைத் தருபவள், பக்த ஜனங்களால் வணங்கப்படுபவள், அப்படிப்பட்ட இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

3. ஸெளவர்ண சித்ராப ரணாஞ்ச கௌரீம் ப்ரபுல்ல ரக்தோத்பல பூஷிதாங்கீம்
நீலாளகாம் நீலகள ப்ரியாஞ்ச பாலாம்பிகாம் பாலகலாம் நதோஸ்மி

பொருள் : தங்க நிறத்தில் விதவித ஆபரணங்களாலும் அன்றலர்ந்த செந்தாமரை மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட குமரியாய், கருத்த கூந்தலை உடையவளும், விடமுண்ட நீலகண்டனுக்குப் பிரியமானவளுமான, இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

4. ஸெளவர்ண வர்ணாக்ருதி திவ்ய வஸ்த்ராம் ஸெளவர்ண ரத்நகசித திவ்ய காஞ்சீம்
நிம்பாட வீநாத மந: ப்ரஹ்ருஷ்டாம் பாலாம்பிகாம் பாலகலாம் நதோஸ்மி

பொருள் : பொன் நிற மேனியில் தெய்விக ஆடை அணிந்தவள், பொன்னும் மணிகளும் பதிந்த ஒட்டியாணம் அணிந்தவள், வேப்ப வனத்திலுறை ஈசனின் மனம் கவர்ந்தவளுமான இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகின்றேன்.

5. ஸ்ரக் சந்த னாலங்க்ருத திவ்ய தேஹாம் ஹாரித்ரு ஸச்சூர்ண விராஜிதாங்கீம்
வைசித்ர கோடீர விபூஷிதாங்கீம் பாலாம்பிகாம் பாலகலாம் நதோஸ்மி

பொருள் : சந்தனத் தண்டுகளால் உருவாக்கப்பட்ட எழிலார்ந்த மேனி உடையவளும், நறுமணமிக்க நற்சந்தனப் பொடிகளால் அலங்கரிக்கப்பட்டு ஒளிர்பவளும், விசித்திரமான கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்டவளுமான இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

6. வைசித்ர முக்தாமணி வித்ருமாணாம் ஸ்ரக் பிஸ் ஸதாராஜித கௌரவர்ணாம்
சதுர்புஜாம் சாருவிசித்ர ரூபாம் பாலாம்பிகாம் பாலகலாம் நதோஸ்மி

பொருள் : விசித்திரமான முத்து, மணி, பவளம் இவற்றால் தொகுக்கப்பட்ட மாலைகளால் எப்போதும் அலங்கரிக்கப்படும் வெள்ளை நிறத்தவளும், நான்கு கரங்களுடன் அழகிய வடிவம் உடையவளுமான இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகிறேன்.

7. க்வணத்ஸு மஞ்ஜீர ரவாபி ராமாம் ஸமஸ்த ஹ்ருன் மண்டல மத்யபீடாம்
வைத்யேஸ்வரீம் வைத் யபதிப்ரியாஞ்ச பாலாம்பிகாம் பாலகலாம் நதோஸ்மி

பொருள் : கால்களில் இனிமையான இசை எழுப்பும் நூபுரங்களை உடையவளும், அனைத்து உயிர்களின் இதயக் கமலத்தில் வீற்றிருப்பவளும் மருத்துவத்திற்கு நாயகியும் வைத்தியநாதனுக்கு இனிய தையல்நாயகியும் ஆன இளம்பிறையான பாலாம்பிகையை வணங்குகின்றேன்.

8. ப்ரம்மேந்த்ர விஷ்ணுவர்க நிசீச: பூர்வ கீர்வாண வர்யார்ச்சித திவ்ய தேஹாம்
ஜ்யோதிர்மயாம் ஞானத திவ்ய ரூபாம் பாலாம்பிகாம் பாலகலாம் நதோஸ்மி

பொருள் : பிரம்மா, இந்திரன், விஷ்ணு, சூரியன், சந்திரன் போன்ற தெய்வங்கள் அனைவராலும் அர்ச்சிக்கப்படும் தெய்விகத் திருமேனி கொண்டவளாக, கற்பனைக் கெட்டா ஒளிமயமாக விளங்குபவளும் ஞானத்தை வாரி வழங்கும் தெய்விக உருவாம் பாலாம்பிகையை வணங்குகிறேன்.

9. பாலாம்பிகா ஸ்தோத்ரம் அதீவ புண்யம் பக்தேஷ்டதம் சேத் மனுஜ: ப்ரபாதே
பக்த்யா படேத் ப்ரபலார்த ஸித்திம் ப்ராப்னோதி ஸத்யஸ் ஸகலேஷ்டகாமான்

பொருள் : அளவற்ற புண்ணியம் நிறைந்ததும் பக்தர்கள் விரும்பியதைத் தரக்கூடியதுமான இந்த பாலாம்பிகா ஸ்தோத்திரத்தை அதிகாலையில் பக்தி சிரத்தையுடன் படிப்பவர்கள் அளவிட முடியாத சித்திகளையும் தாங்கள் விரும்பும் எல்லா நன்மைகளையும் அடைவர். இது சத்தியம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar