SS தசமஹா வித்யா தேவியர் வழிபாடு - மந்திரங்கள், இறைவழிபாடு
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம்> இறைவழிபாடு> தசமஹா வித்யா தேவியர் வழிபாடு
தசமஹா வித்யா தேவியர் வழிபாடு
தசமஹா வித்யா தேவியர் வழிபாடு

காளீ தாரா வித்யா ஷாடசீ புவனேச்வரீ
பைரவீச் சின்னமஸ்தா ச வித்யா தூமாவதீ ததா
மாதங்கீ ஸித்தவித்யா ச கவிதா பகளாமுகி
ஏதா தச மஹாவித்யா ஸர்வ தந்த்ரேஷு கோபிதா
(ச்யாமா ரகஸ்யம்)

தச மஹா வித்யா தேவியர்

படைக்கும் கடவுளான பிரம்மாவின் 10 புத்திரர்களுள் ஒருவன் தட்சன். அவன் ப்ரஜாபதி ஆவான். தட்சனின் மகள் சதி தேவி (தாட்சாயணி). அவளது கணவன் சிவன். தட்சன் மிகப்பெரிய யாகம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்து, விண்ணுலகிலுள்ள தேவர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்கும் படி அழைப்பு விடுத்தான். 27 நட்சத்திரங்களின் பெயர்களைக் கொண்ட தனது 27 புதல்வியரையும், அவர்களது கணவன் சந்திரனுக்கும் அழைப்பு விடுத்தான். சதி தேவியையும், மருமகன் சிவனையும் அழைக்கவில்லை. தந்தையால் அழைக்கப்படாவிட்டாலும், தந்தை நடத்தப் போகவிருக்கும் மிகப்பெரிய யாகத்தைக் காண வேண்டும் என்ற ஆவலிலும், சகோதரிகளைக் காண விரும்பியும், முக்கியமாகத் தனது கணவருக்குச் சேர வேண்டிய அவிர்பாகத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், தேவர்கள் தங்களது மனைவியருடன் அலங்கரிக்கப்பட்ட வானவூர்தியில், பறந்து செல்வதையும் கண்டு பரவசமடைந்து, கணவன் சிவனிடம் அனுமதி கேட்டு நின்றாள்.

அழையாத விருந்தாளியாகச் சென்று தனது அன்பு மனைவி, அவமானப்படக்கூடாது என்று எண்ணியதால் சிவன் அனுமதி அளிக்கவில்லை. ஒரு சாதாரண கணவனைப் போல் ஆணாதிக்கத்துடன் அனுமதி தர மறுத்த சிவனின் மீதும், ப்ரஜாபதியாக மட்டும் நடந்து கொண்டு, தந்தை என்ற முறையில் அழைப்பு விடுக்காத தட்சன் மீதும் மிகுந்த கோபம் கொண்டு சதி தேவி, தனது சக்தியைக் (ஆதிக்கத்தையும், கோபத்தையும்) காட்ட விரும்பினாள். கண்ணுக்குத் தீட்டும் மை போன்றும், இருட்டினைப் போன்றும் கரிய நிறமுடைய காளியாகத் தோற்றமெடுத்து பயங்கரமான பற்களைக் காட்டி, இடிமுழக்கம் போல் பயங்கரமான சப்தத்துடன் சிரிக்கவும் ஆரம்பித்தாள். தனது மூன்று கண்களையும் ஒருமுறை திறந்து பார்த்த சிவன் பயத்தில் உறைந்தார்.

இரத்தம் சொட்டும் தொங்கிய நாக்கினையும், நிலைகுத்தி நிற்கும் முடியினையும், நான்கு கைகளையும், கோபமான கண்களையும், வியர்வையில் நனைந்த உடம்பினையும் கொண்ட அம்பிகையைக் கண்டு மிகவும் பயந்தார். மண்டை ஓடுகளைக் கழுத்தில் மாலையாகக் கொண்டு, தலையில் பிரகாசமான கிரீடத்தையும், 10 கோடி சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் கூடிய பிறைநிலாவை நெற்றியில் சூடியிருந்ததையும் கண்டு இங்குமங்கும் ஓடினார். தேவியோ இடி போல் தொடர்ந்து பயங்கரமாக ஆர்ப்பரித்து சிரிக்கவே, சிவன் எல்லாத் திசைகளிலும் ஓடினார். திரும்பிய 10 திசைகளிலும், தேவியின் 10 விதமான மாறுபட்ட பயங்கரமான தோற்றத்தைக் கண்டார். இந்தப் பத்து தேவியர் தோற்றமே தச மஹா வித்யா தேவியர் தோற்றமாகும்.

சிவனுக்கு நேர் எதிரில் தேவி எடுத்த முதல் தோற்றமே காளி ஆகும். சிவனுக்கு நேர் எதிரில் காளியும், அவருக்கு மேல் தாராவும், வலது பக்கம் ஒல்லியான, சின்னமஸ்தாவும், இடது பக்கம் புவனேஸ்வரியும், பின்பக்கம் எதிரிகளை அழிப்பதில் வல்லவளான பலளாமுகியும், கீழே பைரவியும், தென்கிழக்கே விதவையும், முதியவளுமான தோற்றத்தில் தூமாவதியும், தென்மேற்கே அழகிய திரிபுரசுந்தரியும், வடமேற்கில் மாதங்கியும், வடகிழக்கில் என்றும் பதினாறான ÷ஷாடசீயும் தோற்றம் கொண்டு நின்றனர். இந்த 10 தேவியரும் தந்த்ரா சாஸ்த்திரத்தில் வழிபாட்டிற்குரிய உபாஸனா மூர்த்தங்களாவர். தேவியின் 90 கோடி தோற்றங்களில் தச மஹா வித்யா தேவியர் தோற்றமே முதன்மையானதும், புகழ் பெற்றதுமாகும். தேவியின் இந்தப் பயங்கரமான தோற்றங்களைக் கண்ட சிவன் வேறு வழியின்றி, மனைவியின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக, யாகத்தில் கலந்து கொள்ள அனுமதி அளித்தார்.

தட்சன் யாகசாலையில் கூடியிருந்த அனைவரின் முன் சிவனின் மஹிமையை அறியாமல், அவரது புறத்தோற்றத்தை இழிவாகக் கூறி அவமதித்தான். கணவனின் மனப்பூர்வமான சம்மதமின்றி வந்ததோடு, தேவலோகமே கூடியிருந்த யாக சாலையில் தன்னால் தனது கணவனுக்கு ஏற்பட்ட அவமானத்தினால் சதி மிகவும் வருந்தினாள். தட்சனால் தான் பெற்ற இந்த உடம்பை அழிக்க எண்ணி தனது யோகசக்தியினால் அக்னியை எழுப்பி, அதில் புகுந்து தனது உயிரை மாய்த்தாள்.

நந்தி தேவனால் இதைக் கேள்வியுற்ற சிவன் தனது நெற்றிக் கண்ணிலிருந்து வீரபத்திரனைத் தோற்றுவித்து தட்சன் யாகத்தை அழிக்கச் செய்தார். அவரும் யாகசாலை வந்து, நெருப்பில் தன்னை மாய்த்துக் கொண்ட தனது அன்பு மனைவியின் உடலைப் பிரிய மனமில்லாமல் தோளில் போட்டுக் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். சிவனின் கோபத்தினால் ஏற்படப்போகும் பேராபத்திலிருந்து இவ்வுலகினைக் காக்க, விஷ்ணு, சிவனிடமிருந்து தான் பெற்ற சுதர்சனசக்ரம் என்ற சக்ராயுதத்தால், அம்பிகையின் உடலை 51 துண்டுகளாகத் துண்டித்து அவை பூமியில் இந்தியாவிலும், அதன் அண்டை நாடுகளிலுள்ள முக்கியமான 51 இடங்களில் விழச் செய்தார்.

தேவியின் அங்கங்கள் விழுந்த 51 இடங்களும், சக்தி வாய்ந்த பீடங்களாகவும், புண்ணிய ÷க்ஷத்திர ஸ்தலங்களுமாயின. பைரவரின் காவலுடன் அம்பிகையின் கோயில்கள் 51 சக்தி பீடங்களில் தோன்றி, தேவியின் வழிபாட்டின் மூலம், சதியின் நினைவு நிலை பெற்றது.

தச மஹா வித்யா தேவியர் தோற்றத்தில் ஆரம்பமாகிய தட்சன் யாகம், 51 சக்தி பீடங்கள் தோன்றக் காரணமானதில் முடிவடைந்தது. இந்த தச மஹா வித்யா தோற்றம் மிகவும் பழமையானதாகும். மஹா விஷ்ணு தசாவதாரம் எடுத்த போது தசாவதார காரியங்கள் நிறைவேற உதவியர்கள் தச மஹா வித்யைகளே.

காளி - கிருஷ்ண அவதாரம்
தாரா - ராம அவதாரம்
÷ஷாடசீ - கல்கி அவதாரம்
புவனேஸ்வரி - வராஹ அவதாரம்
திரிபுரபைரவி - நரஸிம்ம அவதாரம்
சின்னமஸ்தா - பரசுராம அவதாரம்
தூமாவதி - வாமன அவதாரம்
பகளாமுகி - கூர்ம அவதாரம்
மாதங்கி - பலராம அவதாரம்
கமலா - மச்ச அவதாரம்

என்று அந்தந்த அவதாரங்களுக்கு உரிய சக்தியை வழங்கியவர் தச மஹா தேவியர்களாவர் என்று முண்டமாலா தந்திரம் கூறுகிறது. இவர்களில் காளி, புவனேஸ்வரி, ÷ஷாடசீ, கமலா, மாதங்கி ஆகியோர் வழிபாடு மட்டுமே இன்றளவும் பின்பற்றப்படுகிறது. தாரா தேவி புத்தமதத்தினரின் வழிபாட்டுத் தெய்வமாகக் கருதப்படுகிறார். தூமாவதி, சின்னமஸ்தா, பகளாமுகி, பைரவி ஆகியோர் வழிபாட்டு முறைகள் மிகவும் கடினமானபடியால், இப்போது அதிகம் வழக்கத்தில் இல்லை. உண்மையான பக்தியுடன் தச மஹா வித்யா தேவியரை வழிபடும் சாதகர்கள், உயர்ந்த ஞானத்தையும், தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்.

அதற்கும் மேலாக, மாயா ஜாலம் போன்ற மாரணம், உச்சாடனம், ÷க்ஷõபனம், மோஹனம், த்ராவனம், ஸ்தம்பனம், வித்வேஷனம் என்ற மஹாசக்திகளையும் அடைவர். தச மஹா வித்யா தேவியர் ஒவ்வொருவருக்கும், அஸ்ஸாமில் காமாக்யா என்னுமிடத்தில் தனித்தனியே கோயில்கள் உள்ளன. எனவே சக்தியை வழிபடும் சாக்தர்களுக்கு காமாக்யா ஒரு மிகச் சிறந்த புனிதமான இடமாகக் கருதப்படுகிறது.

ஸ்ரீ சப்தசதி சக்திதேவதா (360 சக்திகள்) நாமாவளி

தேவி மகாத்மியத்திலுள்ள 360 சக்திகளையும் ஸ்ரீ வித்யா நவாவரண பூஜையில் ஒரு ஆவரணத்திற்கு 40 சக்திகளாகக் கொண்டு பூஜிக்க வேண்டும் என்பதை ஸ்ரீ வித்யார்ணவ தந்திரம், கீழே உள்ள வரிகளில் விளக்குவதைக் காணலாம்.

ஓம் நித்யாயை நம
ஓம் ஜகன்மூர்த்தியை நம
ஓம் தேவ்யை நம
ஓம் பகவத்யை நம
ஓம் மஹாமாயாயை நம
ஓம் பிரசன்னாயை நம
ஓம் வரதாயை நம
ஓம் முக்திதாயின்யை நம
ஓம் பரமாயை நம
ஓம் ஹேது பூதாயை நம

ஓம் ஸநாதன்யை நம
ஓம் ஸம்ஸார பந்தஹெத்வெயை நம
ஓம் ஸர்வேச்வர்யை நம
ஓம் ஈச்வர்யை நம
ஓம் யோகநித்ராயை நம
ஓம் ஹரிநேத்ர கிருதாலயாயை நம
ஓம் விச்வேச்வர்யை நம
ஓம் ஜகத்தாத்திரியை நம
ஓம் ஸ்திதி ஸம்ஹார ஹாரிண்யை நம
ஓம் நித்ராயை நம

ஓம் விஷ்ணொர்பகவத்யை நம
ஓம் அதுலாயை நம
ஓம் தெஜஸாநிதயே நம
ஓம் ஸ்வாஹாயை நம
ஓம் ஸ்வதாயை நம
ஓம் வஷ்ட்காராயை நம
ஓம் ஸ்வராத்மிகாயை நம
ஓம் ஸ்வதாக்ஷராயை நம
ஓம் த்ரிதாமாத்ரே நம
ஓம் ஸ்வரஸ்வரூபிண்யை நம

ஓம் அனுச்சார்யாயை நம
ஓம் ஸந்தியாயை நம
ஓம் ஸாவித்திரியை நம
ஓம் ஜனன்யை நம
ஓம் பராயை நம
ஓம் ஸிருஷ்டிரூபாயை நம
ஓம் ஜகத்யோன்யை நம
ஓம் ஸ்திதி ரூபாயை நம
ஓம் ஸம்ஹிருதி ரூபாயை நம
ஓம் ஜகன்மய்யை நம

ஓம் மஹா வித்யாயை நம
ஓம் மஹா மாயாயை நம
ஓம் மஹா மேதாயை நம
ஓம் மஹா ஸ்மிருத்யை நம
ஓம் மஹா மோஹாயை நம
ஓம் பகவத்யை நம
ஓம் மஹாதேவ்யை நம
ஓம் மஹா ஸுச்யை நம
ஓம் ப்ரகிருத்யை நம
ஓம் ஸத்வாதி குணத்ரய விபாவின்யை நம

ஓம் காளராத்ரியை நம
ஓம் மஹாராத்ரியை நம
ஓம் மோஹாராத்ரியை நம
ஓம் தாரூணாய நம
ஓம் சுரேச்வர்யை நம
ஓம் ஹ்ரீயை நம
ஓம் புத்யை நம
ஓம் போத ஸுலக்ஷணாயை நம
ஓம் லஜ்ஜாயை நம
ஓம் புஷ்டியை நம

ஓம் துஷ்டியை நம
ஓம் சாந்தியை நம
ஓம் கட்கின்யை நம
ஓம் சூலின்யை நம
ஓம் கோராயை நம
ஓம் கதின்யை நம
ஓம் சக்ரிண்யை நம
ஓம் சங்கின்யை நம
ஓம் சாபின்யை நம
ஓம் பாண புகண்டீ பரிகாயுதாயை நம

ஓம் ஸெளம்யாயை நம
ஓம் ஸெளம்யதராயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் பராயை நம
ஓம் பரமாயை நம
ஓம் பரமேச்யை நம
ஓம் ஸதாயை நம
ஓம் அஸதாயை நம
ஓம் அகிலாத்மிகாயை நம
ஓம் நார்யை நம

ஓம் சிவாயை நம
ஓம் ஸிம்ஹவாஹின்யை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் பத்ரகாள்யை நம
ஓம் சண்டிகாயை நம
ஓம் ஜகன்மாத்ரே நம
ஓம் மஹிஷாஸுரமர்தின்யை நம
ஓம் ஆத்மசக்தியை நம
ஓம் சர்வதேவமய்யை நம
ஓம் ச்ரத்தாயை நம

ஓம் குணாத்மிகாயை நம
ஓம் சர்வாச்ராயாயை நம
ஓம் அவ்யாசிருதாயை நம
ஓம் ஆத்யாயை நம
ஓம் சப்தாத்மிகாயை நம
ஓம் வார்த்தாயை நம
ஓம் அர்த்திஹிந்திரியை நம
ஓம் மேதாயை நம
ஓம் துர்க்காயை நம
ஓம் பவஸமுத்ரநௌகாயை நம

ஓம் அஸங்காயை நம
ஓம் கைடபாராதி ஸ்ருதயைக நம
ஓம் ஹிருதாலயாயை நம
ஓம் கௌர்யை நம
ஓம் ஸதார்த்ர சித்தாயை நம
ஓம் கீர்வாண வரதாயின்யை நம
ஓம் தேவ்யை நம
ஓம் மஹாதேவ்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் பத்ராயை நம

ஓம் ரௌத்ராயை நம
ஓம் தாத்ரியை நம
ஓம் ஜ்யோஸ்னாயை நம
ஓம் இந்து ரூபிண்யை நம
ஓம் சுகாயை நம
ஓம் கல்யாண்யை நம
ஓம் ருத்யை நம
ஓம் ஸித்யை நம
ஓம் கூர்மிகாளை நம
ஓம் நைருத்யை நம

ஓம் பூபிருதாம் லக்ஷ்மியை நம
ஓம் சர்வாண்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் துர்கபாராயை நம
ஓம் ஸாராயை நம
ஓம் ஸர்வகாரிண்யை நம
ஓம் க்ஷõந்தியை நம
ஓம் க்ருஸ்நாயை நம
ஓம் தூம்ராயை நம
ஓம் அதிஸெளம்யாயை நம

ஓம் அதிரௌத்ரிண்யை நம
ஓம் ஜகத்பிரதிஷ்டாயை  நம
ஓம் கிருஷ்ணாயை நம
ஓம் விஷ்ணுமாயாயை நம
ஓம் சேசனாயை நம
ஓம் புத்தி ரூபாயை நம
ஓம் நித்ரா ரூபாயை நம
ஓம் க்ஷúதாயை நம
ஓம் சாயா ரூபாயை நம
ஓம் சக்தி ரூபாயை நம

ஓம் திருஷ்ணா ரூபாயை நம
ஓம் க்ஷõந்தி ரூபாயை நம
ஓம் ஜாதி ரூபாயை நம
ஓம் லஜ்ஜா ரூபாயை நம
ஓம் சாந்தி ரூபாயை நம
ஓம் ச்ரத்தா ரூபாயை நம
ஓம் காந்தி ஸ்வரூபிண்யை நம
ஓம் லக்ஷ்மீரூபிண்யை நம
ஓம் விருத்தி ரூபாயை நம
ஓம் திருதி ரூபாயை நம

ஓம் ஸ்மிருதி ரூபாயை நம
ஓம் தயாரூபாயை நம
ஓம் க்லீம் துஷ்டிரூபாயை நம
ஓம் புஷ்டி ரூபாயை நம
ஓம் மாத்ரு ரூபாயை நம
ஓம் ப்ராந்தி ரூபாயை நம
ஓம் சுபஹேத்வை நம
ஓம் பார்வத்யை நம
ஓம் கௌசிக்யை நம
ஓம் காளிகாயை நம

ஓம் உக்ரசண்டாயை நம
ஓம் திருஷ்ணாயை நம
ஓம் ஹிமாசல ஹிருதாலயாயை நம
ஓம் தூம்ரலோசன ஹிந்திரியை நம
ஓம் அஸின்யை நம
ஓம் பாசின்யை நம
ஓம் விசித்ர கட்வாங்கதராயை நம
ஓம் நரமாலா விபூஷணாயை நம
ஓம் த்வீபசர்வ பரீதாநாயை நம
ஓம் சுக்ல மாம்ஸாதி பைரவாயை நம

ஓம் அதிவிஸ்தார வதநாயை நம
ஓம் ஜிஹ்வாலலன பீஷணாயை நம
ஓம் நிமக்னாரத்த நயனாயை நம
ஓம் நாதா பூரித திங்முகாயை நம
ஓம் பீமாக்ஷியை நம
ஓம் பீமரூபாயை நம
ஓம் சண்டமுண்ட விநாசின்யை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் லோகவிக்யாதாயை நம
ஓம் பிரும்மாண்யை நம

ஓம் பிரும்மவாதின்யை நம
ஓம் மாஹேச்வர்யை நம
ஓம் விருஷாரூடாயை நம
ஓம் திரிசூல வரதாயின்யை நம
ஓம் மஹா ஹிவலயாயை நம
ஓம் சந்திரரேகாவிபூஷணாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் சக்திஹஸ்தாயை நம
ஓம் மயூரவரவாஹனாயை நம
ஓம் குஹரூபாயை நம

ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் கருடோபரி ஸம்ஸ்திதாயை நம
ஓம் சங்க சக்ர கதா சார்ங்க கட்க ஹஸ்தாயை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் நாரஸிம்ஹியை நம
ஓம் நிருஸிம்மஸ்திருச்யை நம
ஓம் கோரராவாயை நம
ஓம் ஸடா÷க்ஷபஷிப்த நம
ஓம் நக்ஷத்ர ஸம் ஹந்திரியை நம
ஓம் வஜ்ரஹஸ்தாயை நம

ஓம் ஐந்திரியை நம
ஓம் கஜ ராஜோபரிஸ்திதாயை நம
ஓம் ஸஹஸ்ரநயனாயை நம
ஓம் சக்ரரூபாயை நம
ஓம் பீஷணாயை நம
ஓம் சக்தியை நம
ஓம் அத்யுக்ராயை நம
ஓம் சிவாசதநினாதின்யை நம
ஓம் அபராஜிதாயை நம
ஓம் சிவ தூத்யை நம

ஓம் காத்யாயன்யை நம
ஓம் ரக்த பீஜநாசின்யை நம
ஓம் சண்டகண்டிகாயை நம
ஓம் அஷ்டதசபுஜாயை நம
ஓம் உக்ராயை நம
ஓம் நிசும்பாசுரவாதின்யை நம
ஓம் சும்பஹந்த்ர்யை நம
ஓம் பிரபன்னார்த்திஹராயை நம
ஓம் விச்வேச்வர்யை நம
ஓம் ஆதாரபூதாயை நம

ஓம் மஹீரூபாயை நம
ஓம் அபாம்ஸ்வரூபாயை நம
ஓம் அப்யாயன்யை நம
ஓம் அலங்கியவீயதாயை நம
ஓம் பீஜஸ்வரூபிண்யை நம
ஓம் அனந்த வீர்யாயை நம
ஓம் ஸம்மோஹின்யை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஸ்வர்கமுக்திப்ரதாயின்யை நம
ஓம் அசேஷஜன ஹிருத்ஸம்ஸ்தாயை நம

ஓம் நாராயண்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் ஸர்வார்த்த ஸாதிகாயை நம
ஓம் சரண்யாயை நம
ஓம் த்ரயம்பிகாயை நம
ஓம் கௌர்யை நம
ஓம் கலாகாஷ்டாதி ரூபாயை நம
ஓம் பரிணாமப்ரதாயின்யை நம
ஓம் சர்வமங்கள மாங்கல்யாயை நம
ஓம் சிவாயை நம

ஓம் சிருஷ்டி ஸ்திதி லயாத்மிகாயை நம
ஓம் சக்தியை நம
ஓம் ஸனாதன்யை நம
ஓம் குணாச்ரயாயை நம
ஓம் குணம்யாயை நம
ஓம் நாராயண ஸ்வரூபிண்யை நம
ஓம் சரணாகத தீனார்த்த பரிணாம ப்ரதாயின்யை நம
ஓம் சர்வஸ்யாத்தி ஹராயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் விஷ்ணுரூபாயை நம

ஓம் ஹம்ஸயுக்தவிமானஸ்தாயை நம
ஓம் பிரும்மாணி ரூபதாரிண்யை நம
ஓம் கௌசாம்பஷுரிகாயை நம
ஓம் சூலசந்திராஹிவரதாரிண்யை நம
ஓம் மஹாவிருஷப கம்ரூடாயை நம
ஓம் மாஹேச்வர்யை நம
ஓம் த்ரைலோத்யத்ராணஸ ஹிதாயை நம
ஓம் கிரீடவரதாரிண்யை நம
ஓம் வ்ருத்தப்ராண ஹராயை நம
ஓம் சிவதூதீஸ்வரூபிண்யை நம

ஓம் ஹததைத்யாயை நம
ஓம் மஹாஸத்வாயை நம
ஓம் கோரரூபாயை நம
ஓம் மஹாரவாயை நம
ஓம் தம்ஷ்ட்ராகராளவதனாயை நம
ஓம் சிரோ மாலாவிபூஷணாயை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் முண்டமதனாயை நம
ஓம் லக்ஷ்மியை நம
ஓம் லஜ்ஜாயை நம

ஓம் மஹாவித்யாயை நம
ஓம் ச்ரத்தாயை நம
ஓம் புஷ்டியை நம
ஓம் ஸதாத்ருவாயை நம
ஓம் மஹாராத்திர்யை நம
ஓம் மஹாவித்யாயை நம
ஓம் மேதாயை நம
ஓம் ஸரஸ்வத்யை நம
ஓம் வராயை நம
ஓம் பூதிதாயை நம

ஓம் தாமஸ்யை நம
ஓம் நியதேசாயை நம
ஓம் ஸர்வத பாணிபாதாந்தாயை நம
ஓம் ஸர்வதோக்ஷிசிரோமுகாயை நம
ஓம் ஸர்வதச்ரணக்ராணாயை நம
ஓம் ஸர்வஸ்வரூபிண்யை நம
ஓம் ஸர்வேசாயை நம
ஓம் ஸர்வபாயை நம
ஓம் ஸர்வசக்தி ஸமன்விதாயை நம
ஓம் ஸமஸ்தரோஹந்திரியை நம

ஓம் விச்வாத்மிகாயை நம
ஓம் விச்வவந்தியாயை நம
ஓம் பாபஹாரிண்யை நம
ஓம் உத்பாதபாக ஜனிதோபஸர்க சயநாசின்யை நம
ஓம் விச்வார்த்திஹாரிண்யை நம
ஓம் த்ரைலோக்யவரதாயின்யை நம
ஓம் நந்தகோபகிரூஹேஜாதாயை நம
ஓம் புத்ரபௌத்ரப்ரவர்தின்யை நம
ஓம் யசோதாகர்பஸம்பவாயை நம
ஓம் விந்தியார்த்திவாஸின்யை நம

ஓம் ரௌத்ரரூபிண்யை நம
ஓம் ரத்ததந்திகாயை நம
ஓம் தாடிமீ குசுமபிரக்யாயை நம
ஓம் அயோனிஜாயை நம
ஓம் சதலோசனாயை நம
ஓம் பீமாயை நம
ஓம் சாகம்பர்யை நம
ஓம் துர்காயை நம
ஓம் தானவேந்திரவிநாசிந்யை நம
ஓம் மஹாகாள்யாயை நம

ஓம் மஹாகாள்யை நம
ஓம் மஹாமார்யை நம
ஓம் அஜாயை நம
ஓம் லக்ஷ்மீவிருத்திபிரதாயை நம
ஓம் நித்யாயை நம
ஓம் சைலபுத்திரியை நம
ஓம் பிரும்மசாரிண்யை நம
ஓம் சண்டகண்டாயை நம

ஓம் விசாலாக்ஷியை நம
ஓம் கூஷ்மாண்டாயை நம

ஓம் வேதமாத்ருகாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் கணேசியை நம
ஓம் விரூபாக்ஷியை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் மஹாகௌர்யை நம
ஓம் மஹாவீர்யாயை நம
ஓம் மஹாபலபராக்ரமாயை நம
ஓம் மயூர குக்குடவ்ருதாயை நம
ஓம் மஹாசக்திதராயை நம

ஓம் அனகாயை நம
ஓம் பிராஹ்ம்யை நம
ஓம் மகேஸ்வர்யை நம
ஓம் கௌமாரிரூபிணீதேவ்யை நம
ஓம் சங்கசக்ரகதாசார்ங்க கிருகீத பரமாயுதாயை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் கிருஹீதோக்ர மஹாசக்ராயை நம
ஓம் தம்ஷ்ட்ரோத்ருத வசுந்தராயை நம
ஓம் வராஹரூபிண்யை நம
ஓம் சிவாயை நம

ஓம் நிருஸிம்ஹரூபிண்யை நம
ஓம் ஐந்திரியை நம
ஓம் ஹததைத்ய மஹாபலாயை நம
ஓம் பாப்ரவ்யை நம
ஓம் லோசனத்ரயபூஷிதாயை நம
ஓம் ஸர்வபீதிஹராயை நம
ஓம் காத்யாயன்யை நம
ஓம் த்ரிசூலாதாரிண்யை நம
ஓம் பத்ரகாள்யை நம
ஓம் சண்டிகாளை நம

ஓம் ப்ராமர்யை நம
ஓம் பகவத்யை நம
ஓம் சண்டவிக்ராமாயை நம
ஓம் ஸனாதன்யை நம
ஓம் லோகஸ்வர்காபவர்கதாயை நம
ஓம் மஹீமய்யை நம
ஓம் ஜகத்தாத்ரியை நம
ஓம் அநேக மூர்த்தியை நம
ஓம் விச்வேச்வர்யை நம
ஓம் விச்வாச்ரவாயை நம
ஓம் சப்தசதி சக்தி தேவதாயை நம

ஸ்ரீ வித்யார்ணவ தந்திரத்திலுள்ள தாரித்ரிய த்வம்ஸிநி சப்தசதி சக்தி நாமாவளி

புவனேஸ்வரியை லக்ஷ்மியினுடன் வழிபட வேண்டும். இந்த நாமாக்கள் மகாலக்ஷ்மியின் கல்யாண குணங்களைச் சொல்வதால் புவனேஸ்வரி திரிசதி அர்ச்சனைக்குப் பிறகு இதைச் சொல்லி அர்ச்சிக்க வேண்டும். இதை ஸ்ரீ சக்கரத்தில் பூஜிப்பது விசேஷம்.

ஓம் ஹாரா நூபுர ஸம்யுக்தாயை நம
ஓம் கமலத்வயஹாரிண்யை நம
ஓம் லக்ஷ்ம்யை நம
ஓம் பரமசிவமய்யை நம
ஓம் சுத்த ஜாம்பூநத ப்ரபாயை நம
ஓம் கமலவஸத்யை நம
ஓம் தேஜோ ரூபாயை நம
ஓம் விஸ்வ பூமோஹிந்யை நம
ஓம் ஸர்வ பூ÷ஷா ஜ்வலாங்யை நம
ஓம் பீஜபூரதராயை நம

ஓம் ஆத்யா சக்த்யை நம
ஓம் ஸகல ஜநன்யை நம
ஓம் கலசதாரிண்யை நம
ஓம் விஷ்ணுவாமாங்க ஸம்ஸ்தாயை நம
ஓம் கமலாலயாயை நம
ஓம் ஸ்ரீமத் ஸெளபாக்ய ஜநன்யை நம
ஓம் பார்கவ்யை நம
ஓம் ஸநாதன்யை நம
ஓம் ஸர்வ கம பலா வாப்தி ஸாதநாயை நம
ஓம் ஏகசுகாவஹாயை நம

ஓம் ஹிரண்யவர்ணாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் சுவர்ண லலிதாஸ்ரஜாயை நம
ஓம் ஸமஸ்தஸம்பத் சுகதாயை நம
ஓம் அகில ஸெளபாக்ய ஜநந்யை நம
ஓம் ஸமஸ்த கல்யாண கர்யை நம
ஓம் ஞானதாயை நம
ஓம் ஹரிப்பிரியாயை நம
ஓம் விஞ்ஞான சம்பத் சுகதாயை நம
ஓம் அஸ்வ பூர்ணாயை நம

ஓம் ஹிரண்மய்யை நம
ஓம் விசித்ர வாக்பூதி கர்யை நம
ஓம் மத்யாயை நம
ஓம் மனோஹராயை நம
ஓம் ஹஸ்திநாத ப்ரமோதாயை நம
ஓம் அனந்தஸெளபாக்யதாயின்யை நம
ஓம் ஸர்வபூதாந்த் ரஸ்தாயை நம
ஓம் ஸவர்ண ப்ராகாச மத்யகாயை நம
ஓம் ஸமஸ்தபூதேஸ்வர்யை நம
ஓம் விஸ்வரூபாயை நம

ஓம் ப்ரபா மய்யை நம
ஓம் தாரித்ரிய துக்கௌக தமோஹந்த்ரை நம
ஓம் பத்மின்யை நம
ஓம் தீனார்த்தி விச்சேத தக்ஷõயை நம
ஓம் க்ருபாகலிதலோசனாயை நம
ஓம் ப்ரணதஸ்வாந்த சோகக்யை நம
ஓம் சரணாகத ரக்ஷணாயை நம
ஓம் சாந்த்யை நம
ஓம் காந்த்யை நம
ஓம் பத்மஸம்ஸ்தாயை நம

ஓம் கமநீயகுணாச்ரயாயை நம
ஓம் க்ஷõந்த்யை நம
ஓம் தாந்த்யை நம
ஓம் துரிதக்ஷய காரிண்யை நம
ஓம் சசிசேகர ஸம்தாயை நம
ஓம் தனதான்ய ஸம்ருத்திதாயை நம
ஓம் சக்த்யை நம
ஓம் ரக்த்யை நம
ஓம் நித்யபுஷ்டாயை நம
ஓம் ரஜனீகர ஸோதராயை நம

ஓம் கரீஷிண்யை நம
ஓம் பக்த்யை நம
ஓம் பவஸாகர தாரிண்யை நம
ஓம் மத்யை நம
ஓம் ஸித்யை நம
ஓம் த்ருத்யை நம
ஓம் மதுசூதன வல்லபாயை நம
ஓம் புஷ்ட்யை நம
ஓம் ஹிரண்யமாலாயை நம
ஓம் சுப லக்ஷண லஷிதாயை நம

ஓம் அதிதுர்கதி ஹந்த்ரியை நம
ஓம் வரஸத்கதி தாயின்யை நம
ஓம் திவிதேவ கணாராத்யாயை நம
ஓம் புவனார்த்தி விநாசின்யை நம
ஓம் ஆர்த்ராயை நம
ஓம் புஷ்கரிண்யை நம
ஓம் புஷ்ட்யை நம
ஓம் தரணீதர வல்லபாயை நம
ஓம் தாரித்ரிய துக்கஹந்த்ரை நம
ஓம் பயவித்வம்ஸின்யை நம

ஓம் ஸ்ரீவிஷ்ணுவக்ஷஸ்தலாயை நம
ஓம் அசேஷ பூதிதாயை நம
ஓம் லக்ஷணாயை நம
ஓம் அலக்ஷிதாங்யை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மாஸநார்ச்சிதாயை நம
ஓம் வித்யா ஸம்பத்கர்யை நம
ஓம் தேவஸங்கரபிபூஜிதாயை நம
ஓம் பத்ராயை நம
ஓம் பாக்ய ரூபாயை நம

ஓம் நித்யாயை நம
ஓம் நிர்மலபுத்திதாயை நமஓம் ஸத்யாயை நம
ஓம் ஸர்வபூதஸ்தாயை நம
ஓம் ரத்னகர்பாந்தரஸ்திதாயை நம
ஓம் ரம்யாயை நம
ஓம் புத்தாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காந்திமத் பாஸிதாங்காயை நம
ஓம் ஸர்வஸெளக்ய ப்ரதாயை நம

ஓம் தேவ்யை நம
ஓம் பக்தௌகா பயதாயின்யை நம
ஓம் ஸ்வேதத்வீப க்ருதா வாஸாயை நம
ஓம் ஜகன்மாத்ரே நம
ஓம் ஜகன்மய்யை நம
ஓம் ரத்னகர்ப ஸ்திதாயை நம
ஓம் சௌம்யாயை நம
ஓம் க்ஷீராம்புதி க்ருதாலயாயை நம
ஓம் ப்ரஸன்னை ஹ்ருதயாயை நம
ஓம் பரிபூர்ணாயை நம

ஓம் ஹிரண்மய்யை நம
ஓம் வசுந்தராயை நம
ஓம் ஸ்ரீதராயை நம
ஓம் வசுதோக்த்ரை நம
ஓம் க்ருபாமய்யை நம
ஓம் விஷ்ணுப்ரியாயை நம
ஓம் ரத்னகர்பாயை நம
ஓம் ஸமஸ்தபலதாயை நம
ஓம் ரஸாதலகதாயை நம
ஓம் சுவ்ருதாயை நம

ஓம் ஹரிப்ரியாயை நம
ஓம் தரணீகர்ப ஸம்ஸ்தாயை நம
ஓம் ஸமுன்னத முக்யை நம
ஓம் ஸமஸ்தபுர ஸம்ஸ்தாயை நம
ஓம் பரிபூர்ண மனோரதாயை நம
ஓம் கருணாரஸ நிஷ்யந்த நேத்ர த்வய விலாஸின்யை நம
ஓம் ஸர்வராஜ க்ருஹாவாஸாயை நம
ஓம் மஹாலக்ஷ்மீ குணான்விதாயை நம
ஓம் வைகுண்ட நகரஸ்தாயை நம
ஓம் க்ஷீரஸாகர கன்யகாயை நம

ஓம் யோகி ஹ்ருத் பத்ம ஸம்ஸ்தாயை நம
ஓம் கல்பவல்யை நம
ஓம் தயாவத்யை நம
ஓம் பக்தசிந்தாமணயே நம
ஓம் ஆதிமாயே நம
ஓம் ரமாயை நம
ஓம் நிராகாராயை நம
ஓம் ஸாகராயை நம
ஓம் ப்ரும்மாண்ட சயதாரிண்யை நம
ஓம் ஏகநாதாயை நம

ஓம் த்ய லக்ஷ்ம்யை நம
ஓம் அஞ்ஞான ஹந்த்ரை நம
ஓம் குணாதிகாயை நம
ஓம் ப்ரஞ்ஞானலோசனாயை நம
ஓம் ப்ரஞ்ஞான லோசனா நம
ஓம் சேக்ஷவாக் ஜாட்ய மலஹாரிண்யை நம
ஓம் சுஸ்பஷ்ட வாக்தாயின்யை நம
ஓம் ஸர்வஸ்ம்பத் விராஜிதாயை நம
ஓம் ப்ரபாலாவண்ய சுபகாயை நம
ஓம் தோக்த்ரை நம

ஓம் ஸ்வர்ணப்ரதாயை நம
ஓம் ஸமஸ்தவிக்னௌகஹ்ந்த்ரை நம
ஓம் போகதாயை நம
ஓம் விசக்ஷணாயை நம
ஓம் தேவாதிநாத வந்த்யாயை நம
ஓம் தினபோஷண தத்பராயை நம
ஓம் மாங்கல்ய பீஜமஹிமாயை நம
ஓம் நிதிரூபிண்யை நம
ஓம் அநந்தாகாயை நம
ஓம் ஆத்யாதிலக்ஷ்ம்யை நம

ஓம் மஹாஸித்த லக்ஷ்ம்யை நம
ஓம் ராஜ்யலக்ஷ்ம்யை நம
ஓம் திவ்யலக்ஷ்ம்யை நம
ஓம் சுஸ்ரியை நம
ஓம் மங்கள தேவதாயை நம
ஓம் பக்திதாயை நம
ஓம் முக்திதாயை நம
ஓம் புத்திதாயை நம
ஓம் ஸத்கதிப்ரதாயை நம
ஓம் கீர்த்திதாயை நம

ஓம் தனதாயை நம
ஓம் புத்ரபௌத்ர விவர்த்தின்யை நம
ஓம் பத்மாநநாயை நம
ஓம் பத்மோருவே நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் அச்வதாயை நம
ஓம் கோதாயை நம
ஓம் தனதாயை நம
ஓம் மஹாதநாயை நம
ஓம் சந்த்ரசூர்யாக்நி ஸர்வபாயை நம

ஓம் ஜாதவேதாஸ்த்ர ஸ்ம்ஸ்திதாயை நம
ஓம் திக் கஜேந்திர ஸமாராத்யாயை நம
ஓம் திவ்யபூஷண பூஷிதாயை நம
ஓம் பயதாயின்யை நம
ஓம் ஸர்வஸம்பத் ப்ரதாயை நம
ஓம் ஸர்வார்த்த ஸாதின்யை நம
ஓம் தாரித்ரிய த்வம்ஸின்யை நம

தாரித்ரிய த்வம்ஸிநி சக்தி நாம சம்பூர்ணம்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar