Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ராமன் செய்த தந்திரம்
 
பக்தி கதைகள்
ராமன் செய்த தந்திரம்


வட்டித்தொழில் நடத்தும் ஒருவர் இருந்தார். ஒரு மாதத்திற்கு நுாறு ரூபாய்க்கு ஐம்பது ரூபாய் வட்டி வாங்கினார். இதனால்  கடன்  வாங்கும் மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  
இதைக் கேள்விப்பட்ட தெனாலிராமன் அவரைத் திருத்த திட்டம் தீட்டினார்.
அந்த வட்டிக்கடைக்காரர் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் தொழிலையும் செய்தார். ஒருமுறை தெனாலி ராமன், தன் மகனுக்குக் காதணி விழா நடக்க இருப்பதாகவும், அதற்கு பாத்திரங்கள் தரும்படி வேண்டினார்.  
பாத்திரங்களை வாடகைக்கு எடுத்துச் சென்றார் தெனாலிராமன். சில நாட்கள் கழிந்தன.  எடுத்துச் சென்ற பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சேர்த்து கடைக்காரரிடம் கொடுத்தார்.  

‘‘பெரிய பாத்திரங்கள்  தானே கொடுத்தேன். சிறிய பாத்திரங்களை கொடுக்கவில்லையே. அவற்றை ஏன் தருகிறாய்’’ என கேட்டார்.

‘‘ பாத்திரங்கள் ‘குட்டி’ போட்டன. அவற்றை உம்மிடம் கொடுப்பது தானே முறை. ஆகையால் தான் கொண்டு வந்தேன்’’ என பதிலளித்தார்.

வடிகட்டிய முட்டாளாக இருப்பான் போலிருக்கிறது என்று எண்ணிய அவர்,‘‘ஆமாம் ஆமாம். இவற்றை உன்னிடம் கொடுக்கும் போது அவை கர்ப்பமாக இருந்தன. ஆகையால் தான் குட்டி போட்டுள்ளன’’ என்று எல்லா பாத்திரங்களையும் பெற்றுக் கொண்டார். சில மாதங்கள் கழிந்ததும், ‘‘தன் வீட்டிற்கு மன்னரும், மந்திரிகளும் விருந்துக்கு வரவிருப்பதாகவும், அதற்காக அவர்களை கவுரவப்படுத்தும் வகையில் வெள்ளிப்பாத்திரங்கள் கொடுத்தால் உதவியாக இருக்கும்’’ என்றார் தெனாலி ராமன்.

‘‘நாணயமான மனிதர் நீங்கள். எதையும் ஒளித்துப் பேசாமல் உண்மையைச் சொல்வீர்கள் என்பதால் தான் வெள்ளி பாத்திரங்களை தரச் சம்மதிக்கிறேன்’’ என்று சொல்லி சிரித்தார் கடைக்காரர். வெள்ளிப்பாத்திரங்களைக் கொடுக்கும் போது ‘இவையும் கர்ப்பமாக உள்ளன. விரைவில் குட்டி போட்டு விடும். வரும் போது குட்டிகளையும் சேர்த்துக் கொண்டு வர வேண்டும்’’ என்றார்.

சில மாதங்கள் ஆயின. சந்தேகப்பட்ட கடைக்காரர் நேரில் சென்று, ‘‘ மாதக்கணக்கில் பாத்திரங்களை வைத்துக் கொண்டால் எப்படி? ஏன் பாத்திரங்களைத் திரும்ப கொண்டு வரவில்லை’’ என கோபமாக கேட்டார்.

‘‘சொன்னால் வருத்தப்படுவீர்கள் என்று தான் வரவில்லை. பாத்திரங்கள் கர்ப்பமாக இருந்தனவா... பிரசவம் கஷ்டமாகி விட்டதால் பாத்திரங்கள் இறந்து விட்டன’’ என்று அழுதார் தெனாலிராமன்.

‘‘யாரிடம் விளையாடுகிறாய்? பாத்திரங்கள் சாகுமா?’’ எனக் கத்தினார்.
‘‘பாத்திரங்கள் குட்டி போடும் போது ஏன் அவை இறக்காது’’ என பதிலுக்கு கேட்டார். ‘‘மன்னரிடம் முறையிடுவோம் அவர் அளிக்கும் தீர்ப்புப்படியே நடந்து கொள்வோம்’’ என தெனாலிராமன் சொன்னதும் அங்கிருந்து நகர்ந்தார் கடைக்காரர். ஏனெனில் மக்களிடம் கடும்வட்டி வாங்கும் விஷயம் மன்னருக்கு தெரிந்து விடுமே என பயந்தார்.  

இருப்பினும் தெனாலிராமன் விடுவதாக இல்லை. அரண்மனைக்கு இழுத்துச் சென்றார். மக்களிடம் அநியாய வட்டி வாங்குவது பற்றி மன்னரிடம் முறையிட்டார்.

நடந்ததை கேட்ட மன்னர் ‘‘பாத்திரங்கள் குட்டி போடும் என்றால் அவை பிரசவத்தின் போது இறக்க கூடாதா என்ன? பேராசைப்பட்டால் பெருநஷ்டம் வரத்தான் செய்யும்.  இனியாவது கடன் வாங்குவோரிடம் நியாயமாக நடந்து கொள்’’ என எச்சரித்தார் மன்னர்.

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் கடைக்காரர்.  மன்னர் தெனாலிராமனுக்கு பரிசளித்தார்.
கருணை புரிவாய் கலைமகளே!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar