பிரமாண்ட கோயிலுக்கு முதல் கல் வைத்த பாரத பிரதமர்
கோயிலின் கட்டுமானத்தில் எங்குமே இரும்பு பயன்படுத்தப்படவில்லை
கோயிலின் கட்டுமான பணியில் ஊழியர்கள்
கோயிலின் ஒவ்வொரு துாண்கள் மற்றும் சுவர்களில், தெய்வங்களின் சிலை உள்ளது.
எங்கும் தெய்வம்: கோயிலின் ஒவ்வொரு துாண்கள் மற்றும் சுவர்களில், தெய்வங்களின் சிலை உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் நாகர் பாரம்பரிய முறையில் கட்டப்பட்டு உள்ளது.
380 அடி நீளத்திலும், 250 அடி அகலத்திலும், 161 அடி உயரத்திலும் உள்ளது.
ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது. அதில் 392 துாண்களும், 44 கதவுகளும் உள்ளன
கோயில் பிரதான கருவறையில் ராமர் சிலையும், முதல் தளத்தில் ஸ்ரீராம் தர்பாரும் அமைக்கப்பட்டு உள்ளது.
கோயிலில், நித்திய மண்டபம், ரேங் மண்டபம், சபா மண்டபம், பிரார்த்தனை மண்டபம் மற்றும் கீர்த்தனை மண்டபம் என 5 மண்டபங்கள் உள்ளன.
எத்தனை படிக்கட்டுகள்?; கோயிலின் கிழக்கு திசையில் இருந்து 32 படிக்கட்டுகளை பயன்படுத்தி பக்தர்கள் கோயிலுக்குள் செல்லலாம்.
கோயில் வளாகத்தின் நான்கு மூலைகளிலும் சூரிய பகவான், பகவதி அம்மன், விநாயகர் மற்றும் சிவபெருமானுக்கு கோயில்கள் உள்ளன.
கோயில் அருகே, வரலாற்று சிறப்பு மிக்க,பழங்காலத்து கிணறு ஒன்று உள்ளது.
மகரிஷி சன்னதிகள்; கோயில் வளாகத்தில், வால்மீகி, வசிஷ்டர், விஸ்வாமித்ரா, அகஸ்தியர், நிஷாத் ராஜ், மாதா ஷப்ரி சன்னதிகள் உள்ளன.
ஜடாயு சிலை; கோயிலின் தென்மேற்கு பகுதியில், ஜடாயு சிலை, பகவான் சிவனின் பழங்கால கோயில் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு பகுதியில் அன்னபூரணியின் ஆலயமும், தெற்குப் பகுதியில் ஹனுமன் ஆலயமும் உள்ளன.
கோயில் வாசலில் பிரமிக்க வைக்கும் கருடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது
கோயில் வாசலில் பிரமிக்க வைக்கும் சிங்கம், யானை சிலைகள்
கோயிலின் அடித்தளம் 14 மீட்டர் தடிமனான ரோலர்- காம்பாக்ட் செய்யப்பட்ட காங்கிரீட் அடுக்குடன் கட்டப்பட்டுள்ளது. இது செயற்கை பாறையின் தோற்றத்தை அளிக்கிறது.
நிலத்தடி ஈரப்பதத்தில் இருந்து கோயிலை பாதுகாப்பதற்காக கிரானைட்டை பயன்படுத்தி 21 அடி உயர பீடம் கட்டப்பட்டுள்ளது
25 ஆயிரம் பேர் தங்கலாம்; 25 ஆயிரம் பேர் தங்கும் வசதி கொண்ட யாத்ரீகர்கள் வசதி மையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு, யாத்ரீகர்களுக்கு மருத்துவ வசதிகள் மற்றும் லாக்கர் வசதி இருக்கும்.
இந்திய தொழில்நுட்பம்: கோயில், முற்றிலும் பாரதத்தின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளது.
பசுமை கோயில்! 70 ஏக்கர் பரப்பளவில் 70 சதவீத பசுமையாக இருப்பதால், சுற்றுச்சூழல் நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து கட்டப்பட்டுள்ளது.