முப்பத்து மூவர் அமரர்க்கு.. மார்கழி 20ம் நாள் வழிபாடு

ஜனவரி 04,2020



 பேரூரை அடுத்த பச்சாபாளையத்திலுள்ள தசாவதார பெருமாள் கோவிலில், நாளை காலை திருப்பாவையின், 20ம் நாள் பாடலை, பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். கோவிலின் சிறப்புதசாவதார பெருமாள் கோவிலிலுள்ள வெங்கடேச பெருமாள் மற்றும் மஹாலட்சுமி தாயாரிடம் சிறப்பு பிரார்த்தனை செய்தால், விரைவாக விவாஹம் நடை பெறும்.

குழந்தை பேறு இல்லாத தம்பதியர் அங்குள்ள சந்தான வேணுகோபாலரை வணங்கினால், குழந்தை பேறு நிச்சயம். எங்குமே இல்லாத வகையில், மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் ஒரே நேரத்தில் வழிபடலாம். மார்கழி மாதத்தை ஒட்டி இக்கோவிலில், நாளை அதிகாலை,முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று என்று துவங்கும் திருப்பாவை பாடலை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர். பாடலின் பொருள்பூலோகத்தில் உள்ள முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு ஏதேனும் துன்பம் வருமானால், தானே அங்கு சென்று அவர்களைக் காத்து அருள்பவனான எம்பெருமானே, துயில் நீங்கி எழுந்திரு. தீமையை அழித்து ஒழிப்பவனே, நேர்மையைபேணிக்காப்பவனே, உன் பக்தர்களைக் காக்க அவனுக்கு தீங்கு இழைப்போரை அழிக்க வல்லவனே. துயில் நீங்கி எழுந்திரு.பெரிய பிராட்டியான மகாலட்சுமி போன்று, அழகு பொருந்திய நப்பின்னைப்பிராட்டியே, நீயும் துயில் நீங்கி எழுந்திரு. எங்கள் நோன்பிற்கு உன் கணவன் கண்ணபிரானையும், அவனுக்கு வீச விசிறியும், முகம்பார்க்க கண்ணாடியும் இப்போதே தந்து, எங்களை நீராடச்செய்வாயாக என்பதே இப்பாடலின் பொருள்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்