மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் பஜனை: தேவார பாடல்கள் பாடி உற்சாகம்

12-ஜனவரி-2026



மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் இருந்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் வீதி பஜனை நடைபெற்றது. தேவார பாடல்கள் பாடி உற்சாகமாக சென்றனர்.


மயிலாடுதுறையில் ஸ்ரீகோபாலகிருஷ்ண பாரதி இசைவிழா டிரஸ்ட் மற்றும் ஸ்ரீகாஞ்சி சங்கர வித்யாலயா மாணவ மாணவிகள் இணைந்து நடத்திய மார்கழி மாத வீதி பஜனை ஶ்ரீமாயூரநாதர் ஆலயத்தில் இருந்து இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில், பொதுமக்கள் தேவாரம் மற்றம் சிவநாமாவளி, பக்தி பாடல்களை பாடியவாறு கோயிலின் சந்நிதி தெரு மற்றும் நான்கு மடவிளாகம் வழியாக கோயிலை வலம் வந்தனர். பள்ளி மாணவர்கள் சிவன், அம்பாள், ராமர், ராதை,  மற்றும் அம்மன் வேடமணிந்து பங்கேற்று இறைவனை வழிபட்டு இந்த வீதி பஜனையில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை, ஸ்ரீகோபாலகிருஷ்ண பாரதி இசைவிழா கமிட்டி மாலினி ஸ்ரீராம் ஏற்பாடு செய்திருந்தார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்