ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் மாதங்களில் மார்கழி உற்ஸவம்

08-ஜனவரி-2026



ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர பந்தலில், சாணக்யா குரு சேனல் சார்பில், மாதங்களில் மார்கழி ஆன்மீக நிகழ்ச்சி நேற்று முதல் துவங்கியது.


ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம்போல் மார்கழி மாதம் முழுவதும் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்தும் விதமாக, கடந்த ஆண்டு 3 நாட்கள் ஆன்மீக கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்வு இந்த ஆண்டு, நேற்று முதல் துவங்கி, ஜன.11 வரை 5 நாட்கள் நடக்கிறது. அதன்படி நேற்று, சாணக்யா குரு சேனல் தலைமை செயல் அதிகாரி ரெங்கராஜ்பாண்டே தலைமை வகித்தார். பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில், சுவாமி கும்பிடுவதின் காரணம், மனித வாழ்வில் இன்பம் பெருகவா?, துன்பம் விலகவா? என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடந்தது. விழாவில் பா.ஜ.மாவட்ட தலைவர் சரவணதுரை, முத்து பட்டர், புலவர் பாலகிருஷ்ணன், ஆன்மீக பேச்சாளர் ராஜாராம் மற்றும் திரளான மக்கள் பங்கேற்றனர். இரண்டாம் நாளான இன்று மாலை 6:00 மணிக்கு, வித்யாலட்சுமி வித்யநாத் குழுவினரின் பரத நாட்டியம் நடக்கிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 26

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

மேலும்