ஜனவரி 11,2023
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் இராப்பத்து ஒன்பதாம் நாளான நேற்று திருக்கண்ணபுரம் பாசுரத்திற்கு ஏற்க, நம்பெருமாள் சௌரிக்கொண்டை சாற்றி, அதில் சந்திர கலை பதக்கம், நாச்சியார் பதக்கம், நெற்றி சரம் , மார்பில் முத்துங்கி கபாய், பங்குனி உத்திர பதக்கம், அதன் மேல் பிராட்டி பதக்கம், மகரி, அடுக்கு பதக்கங்கள், தங்கப்பூண் பவள மாலை, 8 வட முத்து சரம், ரத்தின அபய ஹஸ்தம்; பின் சேவையாக முத்தங்கி சாற்றி சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.