வைகுண்ட ஏகாதசி; பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு

டிசம்பர் 22,2023



சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அன்னூர் பெருமாள் கோவிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்னூரில் உள்ள பழமையான கரி வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை நடைபெறுகிறது. நாளை அதிகாலை 3:00 மணிக்கு அபிஷேக பூஜையும், 4:30 மணிக்கு அலங்கார பூஜையும் நடக்கிறது. காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை அதிகாலை 5.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில் ஆகும். இங்கு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த, 13ம் தேதி திருமொழித் திருநாள் என்னும் பகல் பத்து உற்சவம் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அரங்கநாதர் சுவாமி முன்பு, கோவில் ஸ்தலத்தார் மற்றும் அர்ச்சகர்கள், பாசுரங்களை சேவித்து வருகின்றனர். நாளை 23ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற உள்ளது.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்