திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு; பக்தர்கள் பரவசம்

டிசம்பர் 23,2023திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று 23ம்தேதி அதிகாலை `சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருமலை திருப்பதியில் வைகுந்தவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். ஒரு நாள் என்று இருந்ததை பக்தர்கள் வசதிக்காக பத்து நாட்கள் திறந்து வைத்துள்ளனர். 23ம் தேதி அதிகாலை துவங்கி ஜனவரி1ம் தேதி வரை சொர்க்க வாசல் திறந்திருக்கும். நாளொன்றுக்கு 70,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பக்தர்கள் முன்னுாறு ரூபாய் கட்டணத்தில் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த டிக்கெட்டுகள் எல்லாம் ஆன்லைனில் விற்றுத்தீர்ந்துவிட்டது. தற்போது உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு இலவசமாக வைகுந்தவாசல் வழியாக சென்று வர அனுமதி கொடுத்துள்ளனர். இன்று அதிகாலை கோவிந்தா கோஷத்துடன் வைகுந்தவாசலில் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.

தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்