காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோத்சவ நிறைவு விழா; பஞ்ச மூர்த்திகள் உலா



காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 13ம் தேதி முதல் 18ம் தேதி வரை  நடைபெற்ற பவித்ரோத்சவத்தின் நிறைவை நாளை யொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு ஸ்ரீ காளஹஸ்தி நான்கு மாட விதிகளில் பஞ்ச மூர்த்திகள் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கோயில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை செய்து, கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு வந்து வாகனங்களில் அமர்த்தினர். முதலில்  விக்னங்களை அகற்றும் விநாயகர் மூஷிக வாகனத்திலும்,  வள்ளி தேவயானை சமேத சுப்ரமணிய சுவாமி (மயூர ) மயில் வாகனத்திலும், நந்தி வாகனத்தில் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் சிம்ம வாகனத்தில் ஞானப் பிரசுனாம்பிகை அம்மையாரும்  இறுதியாக சண்டிகேஸ்வர சுவாமியும் மங்கள வாத்தியங்கள் மேளத் தாளங்களுடன் ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். நேற்று  (18.9.2024) புதன்கிழமை இரவு கோயிலில் புரட்டாசி மாதப் பௌர்ணமியை யொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் அலங்காரம் மண்டபத்தில் சாமி அம்மையார் சிறப்பு மூர்த்திகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட மேல தாளங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சல் சேவை மண்டபத்தில் சாமி அம்மையார்களுக்கு  ஊஞ்சல் சேவை நடத்தினர் . இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்