ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
வல்லபை ஐயப்பன் கோயிலில் இன்று நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்திக்கு சிறப்பு பூஜை நடந்தது. வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன், சங்கரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கார்த்திகை 1ம் தேதி முதல் தொடர்ந்து சபரிமலை யாத்திரை செல்லும் வரையிலும் 48 நாட்களுக்கு தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பதை போன்று இங்கும் பள்ளி வேட்டை, பேட்டை துள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகிறது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.