புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழா



புவனகிரி; புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் மூன்றாம் ஆண்டு கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. புவனகிரியில் மகான் ராகவேந்திர சுவாமிகள் அவதார இல்லம் புதுப்பிக்கப்பட்ட மூலஸ்தான கருங்கல் மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, அன்னதான மண்டபம், ஆலய தோரண வாயில்கள் ஆகியவை புதிதாக கட்டப்பட்டது. இதற்கான கும்பாபிஷேக விழா கடந்த மூன்று  ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இன்று மூன்றாம்ஆண்டு பூர்த்தி விழாவை முன்னிட்டு சுவேத நதி தீர்த்தம் கொண்டு வந்து, மந்திராலய மரபின் படி அதிகாலை 4.00 மணியில் இருந்து பல்வேறு மலர்கள், நறுமணப் பொருட்களால் அபிஷேகமும் அதன் பின் ஆராதனை நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர்கள் செய்திருந்தனர். விழாவில் சென்னை, புதுச்சேரி, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தோஷங்கள் நீக்கி செல்வ செழிப்பு தரும் மார்கழி நோன்பு; நாளை துவக்கம்

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்