மார்கழி ஸ்பெஷல் 12; நிம்மதி தருவார் கோதை கிராம பெருமாள்



கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரம் அருகே உள்ளது கோதைகிராமம். இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சி தருகிறார் பொலிந்து நின்ற பெருமாள். இவரை வழிபட்டால் மனதில் நிம்மதி குடிகொள்ளும். 


கருவறையில் சங்கு சக்கரதாரியாய் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பெருமாளை தரிசித்தால் உற்சாகம் பிறக்கும். காஷ்மீரில் இருந்து வந்த கங்காதர பிரம்மச்சாரி என்பவர் பலரிடம் யாசகம் பெற்று இக்கோயிலில் வழிபாடு நடக்க நிவந்தங்கள் ஏற்படுத்தினார். வில்வம் தலவிருட்சமாக உள்ளது. விநாயகர், கருடன், சிவன், கிருஷ்ணர், அனுமனுக்கு சன்னதிகள் உள்ளன. இங்கு கருடமண்டபம், முகப்பு‌ மண்டபத்தில் உள்ள சிலைகள் கலை நயமிக்கவை. அதிலும் வில்‌ வீரன்‌, நடனமாடும்‌ மங்கை சிலைகள் தத்துருபமாக உள்ளன. 


நாகர்கோவிலில் இருந்து 4 கி.மீ., 


நேரம்: அதிகாலை 5:00 – 12:00 மணி மாலை 4:00 – 7:00 மணி  


தொடர்புக்கு: 97151 77662, 99526 04910


அருகிலுள்ள தலம் சுசீந்திரம் தாணுமாலயர் 7 கி.மீ., 


நேரம்; அதிகாலை 4:00 – 12:30 மணி மாலை     5:00 – 8:30 மணி  


தொடர்புக்கு: 04652 – 241 421


மார்கழி ஸ்பெஷல் 12; நிம்மதி தருவார் கோதை கிராம பெருமாள்

மேலும்

திருப்பாவை பாடல் 21

மேலும்

திருவெம்பாவை பாடல் 12

மேலும்