கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் உள்ள வரதராஜப்பெருமாள் கேட்ட வரத்தை கொடுப்பதற்கு ரெடியாக காத்திருக்கிறார். சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். பல இடங்களுக்கு சென்று விட்டு இந்த மலைப்பகுதிக்கு வந்தனர். அப்போது பாண்டவர்களில் ஒருவனான அர்ஜூனன் இங்கு பெருமாளை பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவர்தான் நாம் கேட்ட வரத்தை கொடுக்கும் வரதராஜப்பெருமாள். மேற்கு நோக்கி காட்சி தரும் இவரை சனிக்கிழமையன்று வழிபட்டால் விருப்பம் நிறைவேறும். உத்ராயண காலமான தை முதல் ஆனி வரை சூரியக்கதிர்கள் இவரது பாதத்தில் விழுகிறது. பெருந்தேவி தாயார் கிழக்கு நோக்கி தனிசன்னதியில் காட்சி தருகிறாள். சோழர்கள், ெஹாய்சாளர்கள், விஜயநகர மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.
ஒசூரில் இருந்து 25 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:00 – 12:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 96776 47992, 04344 – 252 608
அருகிலுள்ள தலம்: ஒசூர் வெங்கடேஸ்வரர் கோயில் 31 கி.மீ.,
நேரம்: காலை 6:00 – 11:00 மணி, மாலை 4:00 – 8:00 மணி.