மார்கழி ஸ்பெஷல் 14; சங்கடம் தீர்ப்பார் திருமுக்கூடல் பெருமாள்



காஞ்சிபுரம் மாவட்டம் திருமுக்கூடலில் உள்ள பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை தரிசித்தால் சங்கடம் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பாலாறு, செய்யாறு, வேகவதி என மூன்று நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன. இதனால் இப்பகுதிக்கு முக்கூடல் என்று பெயர். இத்தலத்தில் சுவாமி கையில் சங்கு, சக்கரம் ஏந்தி பெருமாளாகவும், தலையில் ஜடாமுடியும், நெற்றிக்கண்ணும் கொண்டு சிவனாகவும், தாமரையின் மீது நின்று பிரம்மாவாகவும் காட்சி தருகிறார். கார்த்திகை மாதத்தில் பெருமாளுக்கு மூலிகை எண்ணெய் காப்பு செய்யும்போது மட்டும்தான் அவரது ஜடாமுடி தரிசனத்தை காண முடியும். பூமாதேவி, சிவபக்தரான மார்க்கண்டேயன், தொண்டைமான் மன்னருக்கு இத்தல பெருமாள் காட்சி கொடுத்துள்ளார். இங்கு ஓடும் நதி கங்கைக்கு நிகரானது. இதில் நீராடி பெருமாளை வழிபட்டால் சங்கடம் நீங்கும். மங்களம் உண்டாகும்.  


காஞ்சிபுரத்தில் இருந்து 20 கி.மீ., 


நேரம்: காலை 9:00 – 12 :00 மணி, மாலை 4:00 – 6:00 மணி


தொடர்புக்கு: 95004 83321


அருகிலுள்ள தலம்; காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் 22 கி.மீ., 


நேரம்; காலை 6:00 – 12:30 மணி, மாலை 4:00 – 9:00 மணி  


தொடர்புக்கு; 94439 90773.


மார்கழி ஸ்பெஷல் 22; சர்ப்பதோஷம் தீர... மலைமண்டலப் பெருமாள்

மேலும்

திருப்பாவை பாடல் 23

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 3

மேலும்