தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ளது கோம்பை. இங்கு மலையடிவாரத்தில் காட்சி தருகிறார் திருமலைராயப் பெருமாள். முன்பு இப்பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் கோம்பை நகருக்கு பால் கொண்டு சென்றார். வழியில் ஓரிடத்தில் இருந்த மரத்தின் வேர் தடுக்கி விழுந்ததில் பால் கொட்டியது. அன்று அவரது கனவில் தோன்றிய பெருமாள், ‘பால் கொட்டிய இடத்தில் நான் சுயம்புவாக எழுந்தருளி இருக்கிறேன். அந்த இடத்திலேயே கோயில் கட்டி என்னை வழிபடுங்கள்’ என்றார். அதன்படி உருவானதுதான் இக்கோயில். ஸ்ரீதேவி பூதேவியுடன் சயன கோலத்தில் காட்சி தருகிறார் திருமலைராயப்பெருமாள். தொடர்ந்து மூன்று ஞாயிற்றுக்கிழமை இவரை வணங்கினால் தொழில் சிறக்கும். இத்தல விநாயகர் ‘தும்பிக்கை ஆழ்வார்’ என்ற பெயரில் அருள்கிறார். உற்ஸவர் ‘ஸ்ரீரெங்கநாதர்’ கோம்பை ஊரின் மையப் பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.
உத்தமபாளையத்தில் இருந்து 8 கி.மீ.,ல் கோம்பை. அங்கிருந்து 6 கி.மீ.,
நேரம்: காலை 11:15 – 1:30 மணி
தொடர்புக்கு: 97902 43113, 90420 35113
அருகிலுள்ள தலம்: உத்தமபாளையம் காளத்தீஸ்வரர் 12 கி.மீ.,
நேரம்: காலை 7:00 – 11:30 மணி, மாலை 5:00 – 8:00 மணி
தொடர்புக்கு: 93629 93967.