மார்கழி ஸ்பெஷல் 15; கிரகதோஷம் போக்குவார் சோலைக்கவுண்டன்பட்டி நம்பெருமாள்



விருதுநகர் சோலைக்கவுண்டன்பட்டியில் அருள்பாலிக்கிறார் நம்பெருமாள். இவரை எதற்காக இப்படி அழைக்கிறார்கள் தெரியுமா... தங்களின் ராசி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு வந்து அர்ச்சனை செய்கிறார்கள். அதன் பலன் அவரவர் ராசி, நட்சத்திரத்திற்கு வந்து சேர்ந்துவிடும். இப்படி பலனை அள்ளிவழங்குவதால் ‘நம்பெருமாள்’ என பெயர் பெற்றார் சுவாமி. அதற்கேற்ப இங்கு ராசிக்கட்டம் செதுக்கப்பட்டுள்ளது. அதைப்போல் நவக்கிரகங்கள் தங்கள் மனைவியருடன் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கின்றனர். நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷம் எதுவாயினும் இங்கு வந்து நெய் விளக்கேற்றினால் போதும். அனைத்தும் நீங்கி விடும். யோகநரசிம்மர், அனுமன், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர், வேதாந்ததேசிகன் ஆகியோரும் உள்ளனர். 


விருதுநகரில் இருந்து 9 கி.மீ., 


நேரம்: காலை 9:00 – 12:00 மணி, மாலை 5:00 – 7:00 மணி


தொடர்புக்கு: 94889 62220, 04562 – 394 299


அருகிலுள்ள தலம்: காரிசேரி லட்சுமி நாராயணர் 26 கி.மீ., 


நேரம்: காலை 8:00 – 12:00 மணி, மாலை 4:00 – 6:00 மணி


தொடர்புக்கு: 98423 64059.


மார்கழி ஸ்பெஷல் 22; சர்ப்பதோஷம் தீர... மலைமண்டலப் பெருமாள்

மேலும்

திருப்பாவை பாடல் 23

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 3

மேலும்